Followers

Wednesday, June 22, 2016

கவர்னர் ரோஸய்யா செய்த யோகா!



கவர்னர் ரோஸய்யா செய்த யோகா!

கவர்னரா இரு!

ஜனாதிபதியா இரு!

முதல் மந்திரியா இரு!

நீ யாராக இருந்தாலும் சூத்திரன்தான்! உனக்கு கீழே தான் இருக்கை. கோவிலில் மணி ஆட்டினாலும் நாங்கள் பிராமின்: நாங்கள் மேலே தான் அமர்வோம்!

3 comments:

Dr.Anburaj said...


ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் இத்தகைய காட்சிகளைக் காணமுடியாது.
பிற மடங்களில் தங்களுக்கு சமமான ஆசனத்தை பிறருக்கு ஆதீன தலைவா்கள் வழங்குவதில்லை.அமைச்சா் பொன் இராதாகிருஷ்ணன் அமா்ந்திருந்த காட்சியை ஏற்கனவே வெளியிட்டுஇருந்தீா்கள்.

சாியோ தவறோ நிலைமை அதுதான்.
சாதிய மனநிலை என்பது பொய்யான வாதம்..

அனைத்து மடங்களும் ஸ்ரீராமகிருஷ்ண மடம் போல் தங்களை மாற்றிட வேண்டும் அதுதான் காலத்தின் கட்டாயம் என்பது காஞசி மடாதிபதி ஸ்ரீஜெயேந்திரா் முடிவு.

விரைவில் இறைவன் கருணையால் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

சுவனப்பிாியன் ஒரு அற்பன் என்பது இதன் மூலம் நிரூபணமாகிவிட்டது.உலகமே நேற்று யோக கடலில் முழ்கி அமிா்தம் பருகியது.அந்த காட்சிகளையெல்லாம் இருட்டடைப்பு செய்து விட்டு, தேவையற்ற ஒரு காட்சியை முன்னிலைப்படுத்தி சுத்திரன் பிறாமணன் என்று வக்கிரகம் பேசி அதுவும்

ரோசய்யா செய்த யோகா

என்று கிண்டல் செய்திருப்பது அடி முட்டாள்தனம். விஷமத்தனமானது.
தினம் தினம் குண்டு வெடிப்பிலும் கடலுக்குள் ஜலசமாதி ஆவதிலும்
குரான் படித்தவா்கள்
செத்துக் கொண்டிருக்கின்ற நிலையில் உமக்கு இப்படி ஒரு நக்கல் தேவையா ? இதைச் சொல்ல தங்களுக்கு என்ன யோக்கியதை உள்ளது ?உலகிற்கு பேரழிவை தந்து கொண்டிருப்பது குரான் மற்றும் முஹம்மது.

A.Anburaj Anantha said...

பெருமை தரும் நான்கு விஷயங்கள்

एको धर्मः परं श्रेयः क्षमैका शान्तिरुत्तमा।
विद्यैका परमा दृष्टिरहिंसैका सुखावहा॥

ஏகோ தர்ம: பரம்ஸ்ரேய: க்ஷமைகா சாந்திருத்தமா

வித்யைகா பரமா த்ருஷ்டிரஹிம்சைகா சுகாவஹா

தர்மம் (என்ற 'ஒன்று' ) மாபெரும் மேன்மையைத் தரும்

பொறுமை (என்ற 'ஒன்று' ) சிறந்த அமைதியைத் தரும்

கல்வி (என்ற 'ஒன்று' ) அளவற்ற நிறைவைத் தரும்

அஹிம்ஸை (என்ற 'ஒன்று' ) தொடர்ந்து சுகத்தைத் தரும்.

--உத்யோக பர்வம், மஹாபாரதம்

A.Anburaj Anantha said...



இமயமலையிலுள்ள அதிசய ஏரி பற்றி கம்பனும் பாடியிருக்கிறான்! இன்று You Tube யூ ட்யூப், Whats up வாட்ஸ் அப், Facebook Fபேஸ் புக், Google கூகுள் மூலம் அரை நொடியில் பார்க்கக்கூடிய இமய மலை அதிசய ஏரி பற்றி தமிழர்களுக்கு 2000 ஆண்டுகளாகத் தெரியும்! ஒரு போக்குவரத்து வசதியும் இல்லாத, காட்டு மிருகங்கள் நிறைந்த பாதை வழியாக அந்தக் காலத்திலேயே ஆதிசங்கரரும் சாது சந்யாசிகளும் சென்ற புனித மலை இமய மலை. அதிலுள்ள கயிலை மலைக்கு நம்மவர் 2000 ஆண்டுகளாகச் செல்வது தேவாரம், திருவாசகம் மூலம் தெள்ளிதின் விளங்கும்.

இப்பொழுது கஞ்ஜன் ஜங்கா என்று அழைக்கப்படும் இமயமலைச் சிகரம் புறநானூற்றின் இரண்டாவது பாடலிலேயே முரஞ்சியூர் முடிநாகராயரால் பாடப்பட்டிருக்கிறது. காஞ்சன ஸ்ருங்கம் என்ற அருமையான சம்ஸ்கிருதச் சொல்லை இப்படிக் கஞ்சன் ஜங்கா ஆக்கிவிட்டனர். ஆனால் புறநானூற்றில் அழகாக பொற்கோடு என்று மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. இமயமலை பற்றி முடிநாகராயர் பாடியது அப்படியே காளிதாசனின் குமார சம்பவத்தில் இருக்கிறது. இதுதவிர பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டிய மன்னனை காரிகிழார் பாடிய ஆறாவது பாடலிலும் இமயமலை வருணனை வருகிறது. இவையெல்லாவற்றையும் காளிதாசன், சங்க காலத்துக்கும் முந்தைய புலவன் என்ற எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் விளக்கி விட்டேன். அரைத்த மாவையே அரைக்காமல் கம்பன் சொன்னதைக் காண்பிக்கிறேன்.

கயிலை மலைபற்றியும், சிவபெருமான் பற்றியும் கம்ப ராமாயணத்தில் நிறைய குறிப்புகள் உள்ளன. ஆனால் அவன் உலக இயற்கை அதிசயங்களில் ஒன்றான மானச சரோவர் குறித்தும் பாடியது வியப்பை ஏற்படுத்தும்.

மானசமடுவில் தோன்றி வருதலால் சரயு என்றே

மேல்முறை அமரர் போற்றும் விழுநதி அதனினோடும்

ஆன கோமதிவந்து எய்தும் அரவம் அது என்ன அப்பால்

போனபின் பவங்கள் தீர்க்கும் புனித மா நதியை உற்றார்

-பால காண்டம், கம்ப ராமாயணம்

ராம லெட்சுமணர் ஆகிய இரண்டு டீன் ஏஜ் பாய்ஸ்களை “உலக நண்பன்” (விஸ்வாமித்ரன்) என்ற முனிவன் அழைத்து செல்கிறான். பெரிய இரைச்சல் கேட்டவுடன் இருவரும் அது என்ன சப்தம் என்று கேட்கின்றனர். விஸ்வாமித்ரர் (உலக நண்பன்) தனது பூகோள அறிவைக் காட்டுகிறான். ஏதோ வெள்ளைக்காரன்தான் இந்த நாட்டையே ஒன்றுபடுத்தினான், அவன் வந்தபிறகுதான் நாம் ‘டிராவல் செய்யவே துவங்கினோம் என்று பல அரைவேக்காடுகள் பிதற்றியதுக்கெல்லாம் கம்பன் பதில் சொல்கிறான்:--

பாடலின் பொருள்:--

மானஸம் என்னும் பொய்கையில் (மானஸ ஸரஸ்) உற்பத்தியாகிப் பாய்வதால் சரயூ நதி என்ற பெயரைப் பெற்று, மேன்மைமிகு வாழ்க்கை படைத்த தேவர்களால் போற்றப்பட்டது. அச்சிறந்த நதியோடு கோமதி நதி வந்து கலப்பதால் எழும் ஒலி இது – என்று உலகநண்பன்/விஸ்வாமித்ரன் செப்பினான். மூவரும் தொடர்ந்து சென்று, குளித்தவர்களின் பாவங்களையெல்லாம் போக்கும் நதியை (கங்கை) அடைந்தனர்.
அந்தக் காலத்தில் எவ்வளவு ஜியாக்ரபி/ புவியியல் அறிவு இருந்திருக்கிறது! வால்மீகி செப்பியதை கம்பனும் மொழிந்ததிலிருந்து அவர்களுடைய புவியியலறிவு புலப்படும்.