
அழகிய செயலால் ஒன்பது சீனர்கள் இஸ்லாத்தை தழுவினர்!
சவுதி அரேபியாவின் ஜெத்தாவில் உள்ள ஒரு சிறிய பள்ளிவாசலின் இமாமாக பணி புரிகிறார் டாக்டர் வாலித் அஜாஜி. ஒரு வாரம் முன்பு பள்ளி வாசலுக்கு சற்று தொலைவில் பிளாட்பாரத்தில் 9 சீன தேசத்தவர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை எழுப்பிய இமாம் அவர்களின் நிலைக்கான காரணத்தை கேட்டுள்ளார். அதற்கவர்கள் தாங்கள் கம்பெனியால் ஏமாற்றப்பட்டுள்ளோம். சம்பளம் பல மாதங்களாக தரவில்லை. சரியான இருப்பிடமும் இல்லை. எனவே இங்கு உறங்கினோம் என்ற காரணத்தைச் சொல்லியுள்ளனர்.
ஒரு சில முஸ்லிம்களின் உதவியோடு பள்ளிவாலின் இடத்தில் ஒரு கூடாரத்தை அமைத்துக் கொடுத்து அவர்களை தங்க வைத்துள்ளார் அந்த இமாம். அதன் பிறகு அவர்களுக்கு உணவும் தண்ணீரும் கொடுத்து உபசரித்துள்ளார்.
அந்த சீன தொழிளாலர்கள் முஸ்லிம்கள் என்றால் கடினமானவர்கள் என்று பயந்து போய் இருந்தனர். ஆனால் அந்த இமாமின் செயல்கள் அவர்களுக்கு பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. அந்த இமாம் சீன தூதரகத்தைத் தொடர்பு கொண்டு அவர்கள் நாட்டுக்கு திரும்பிச் செல்லவும் ஏற்பாடு செய்தார்.
இது பற்றி இமாம் டாக்டர் அஜாஜி கூறுகிறார் 'அந்த ஒன்பது பேருக்கும் சவுதி அரேபியாவைப் பற்றியும் இஸ்லாமியர்களைப் பற்றியும் தவறான எண்ணம் ஏற்பட்டிருந்தது. ஏனெனில் அந்த அளவு அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எங்களின் அன்பான உபசரிப்பினால் அவர்களின் மனதில் மாற்றம் ஏற்பட்டது. தினமும் இறைவனை வணங்க தொழுகைக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருவதை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். நாங்களும் அவர்களுக்கு இஸ்லாம் என்றால் என்ன? நபிகள் நாயகம் எதற்காக அனுப்பப்பட்டார்கள் என்ற விபரத்தை தினமும் கூறி வந்தோம். முடிவில் அந்த ஒன்பது பேரும் உண்மையை உணர்ந்து கொண்டார்கள். இஸ்லாத்தை ஏற்பதாக அறிவிப்பும் செய்தார்கள்' என்கிறார்.
இஸ்லாத்தை ஏற்ற அந்த சீனர்கள் கூறும் போது 'இந்த நாட்டை விட்டு இன்னும் சில நாட்களில் சென்று விடுவோம். ஆனால் ஒரு அழகிய வாழ்க்கை முறையையும் அழகிய அனுபவங்களையும் எங்களுடனே எடுத்துச் செல்கிறோம். எங்களை அழகிய முறையில் உபசரித்து, மிக அழகிய இஸ்லாமிய வாழ்க்கை முறையை எங்களுக்கு காண்பித்துத் தந்த அந்த மக்களுக்கும் நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வார ஜூம்ஆ வெள்ளிக் கிழமை தொழுகையை முடித்து விட்டு தாயகம் திரும்புகிறோம்' என்கின்றனர்.
வியர்வை உலர்வதற்கு முன் தொழிலாளிக்கு அவனது சம்பளத்தை கொடுத்து விடச் சொல்கிறது இஸ்லாம். ஆனால் ஒரு சில பெயர்தாங்கி முஸ்லிம்கள் இஸ்லாமிய சட்டத்தை நடைமுறை படுத்தவில்லை. அதே நேரம் இஸ்லாத்தை சரி வர பேணும் டாக்டர் அஜாஜி போன்றவர்களால் அந்த ஒன்பது பேருக்கும் உண்மையான இஸ்லாம் அறிமுகமானது. இன்று அவர்கள் உலக முஸ்லிம்களில் ஒருவர்.
எல்லா புகழும் இறைவனுக்கே!
தகவல் உதவி
அரப் நியூஸ்
21-06-2016
மேலே உள்ள படத்தில் அந்த ஒன்பது சீனர்களுக்கும் எவ்வாறு இறைவனை தொழுவது என்பதை பற்றிய பாடம் எடுக்கப்படுகிறது.
1 comment:
அரபு நாடுகளில் மனித இரத்தம் பாய்ந்து கொண்டிருப்பதை அறிந்தும் வயிற்றுப்பிழைப்புக்கு மதத்தை விற்று மதம் மாறியிருக்கும் அப்பாவிகள். பாவம். சீனா்களின் பாரம்பாியம் இந்திய பாரம்பாியத்திற்கு சமமானது. 15000 ஆண்டுகளுக்கு முன்பே உயா் கலாச்சாரம் கொண்டவா்கள். அன்பினால் அனைத்தும் சாதிக்கலாம் என்ற கௌதமனின் உபதேசத்தால் வளம் பெற்ற புமி சீனா.இனி இவர்கள் பிற மக்களை காபீா் என்று சொல்லி கொல்லலாம் என்றும் பிற பெண்களை குமுஸ் பெண்ணாக கிடைக்குமா ? என்ன செய்யலாம்என்று ஆய்பவா்களாக மாறிவிடுவாா்கள். பாவம் பாிதாபம்.
Post a Comment