
மக்கா பள்ளி இமாம் நோன்பு திறப்பது யாருடன்?
மக்காவில் உள்ள கஃபாவின் தலைமை மத குரு சுதைஷ் அங்கு பணி புரியும் துப்புறவு தொழிலாளர்களோடு நோன்பு திறக்கிறார். இது ஒவ்வொரு வருடமும் நடைபெறும் சாதாரண நிகழ்வு. இதற்கு நாம் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?
ஏனெனில் நமது நாட்டில் துப்புறவு தொழிலாளர்களை தோட்டிகள் என்று தனி சாதியாக்கி அவர்களை சமூகத்தில் நாம் அண்ட விடுவதில்லை. கோவிலில் அவனுடைய சாமியை கும்பிடக் கூட அனுமதிப்பதில்லை. எந்த திருமண உறவுகளும் மற்ற சாதி இந்துக்கள் வைத்துக் கொள்வதில்லை.
இதெல்லாம் தவறு. பொய் சொல்லாமல், திருடாமல் உழைத்து சாப்பிடும் எந்த தொழிலும் இழிவானதல்ல என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. அதனை உலக மக்களுக்கு எடுத்துக் காட்டவே இது போன்ற நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
1 comment:
லாகூர் : பாகிஸ்தானில் காதல் திருமணம் செய்த கர்ப்பிணி மகளை அவரது தாயே கவுரவ கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
குரான் படித்தவா்களின் லட்சணம் - அரேபிய மதம் அரசாங்கமதமாகக் கொண்ட நாட்டில் நடக்கும் அவலம். பாருங்கள் சுவனபபிாியன்.
பாக்., நாட்டின் பஞ்சாப் மாகாணம் பட்ரன்வாலியை சேர்ந்த தவுபீக் அகமது, முகாதாஸ் பீபி இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு ஓடிச் சென்று காதல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது 8 மாத கர்ப்பமாக இருந்த முகாதாசை மன்னித்து ஏற்றுக்கொள்வதாக கூறி, அவரது தாய் அம்னா தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு கர்ப்பிணி என்றும் பாராமல், முகாதாசை சித்ரவதை செய்து கழுத்தை அறுத்து அவரது குடும்பத்தினரே கொன்றுள்ளனர். இக் கவுரவ கொலை தொடர்பாக முகாதாசின் தாய், தந்தை மற்றும் சகோதரர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
Post a Comment