


அன்புடையீர்,
கடந்த சிலமாதங்களாக வாட்ஸ்-அப் மற்றும் முகநூல்களில் கலைவாணன் என்ற ஒரு தமிழர் அவருடன் சேர்ந்து 3 தமிழர்களை காப்பாற்றும்படி உதவிகேட்டு மன்றாடினார், அதனை பலரும் பார்த்திருப்பீர்கள்.
இது இந்தியத்தூதரகத்திற்கு பலராலும் அனுப்பிவைக்கப் பட்டமையால் தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் திரு. அனில்நோட்டியால் அவர்கள் என்னையும், சமூகசேவகர் திரு. ஜமால் அவர்களையும் தொடர்பு கொண்டு எப்படியாவது இவர்கள் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்குமாறும் அவர்களை மீட்பதற்குண்டான வாய்ப்புகளை கண்டறியுமாறும் வேண்டுகோள் விடுத்தார்கள்.
அவர் உதவிகோரியிருந்த வீடியோவில் அவர் இருக்குமிடம் தெரியவில்லை என்றவர் அவரின் தொலைபேசியைத் தரவில்லை, ஆனால் பாஸ்போர்ட் நம்பரைத் தெரிவித்திருந்தார் அதன்படி அவரின் பாஸ்போர்ட்டில் உள்ள முகவரியைத் தொடர்புகொண்டு கலைவாணனின் தொலைபேசியைப் பெற்று நேரடியாக அவரிடம் பேசியதில் குமார் என்ற ஒரு தமிழர் டிரைவர் விஷா என்று அழைத்துவந்து பாலைவனத்தில் ஆடுமேய்க்க அனுப்பிவிட்டார், அவரிடம் கேட்டதற்கு உங்களை ஆடுமேய்க்கத்தான் அழைத்துவந்தேன் என்றுகூறி அரபிகளிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டார்.
கலைவாணன் காசிநாதன், ராமன் முனுசாமி, எபிநேஷ்வரன் லூக்காஸ் என்ற இந்த மூன்றுதமிழர்களையும் பாலைவனத்தில் ஆடுமேய்க்க அனுப்பப்பட்டு கடந்த ஆறு மாதமாக மிகவும் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு இருக்கின்றார்கள்.
மூவரில் ஒருவரிடமிருந்த தொலைபேசியில் வாட்ஸ்-அப் இருந்ததால் அவர்களுக்கு இங்கிருந்து தொலைபேசியில் ரீசார்ஜ் செய்துகொடுத்து கூகுல் லோக்கசேன் அனுப்பிவைத்து ரியாத்திலிருந்து திரு. ஜமால் அவர்களின் வழிகாட்டலில் நிசார் என்ற ஒரு தமிழரின் துணையுடனும், ஹப்ருல்பாத்தினில் உள்ள ஜலீல் என்ற கேரள சகோதரரின் துணையுடனும் மூன்றுநாட்கள் அந்த ஏரியாவில் தங்கியிருந்து அங்கிருந்த கிராமத்தினரின் கண்களில் புலப்படாமல் இரவு 2 மணிக்கு பாலைவனத்திலிருந்து மீட்டுவந்து இந்தியத்தூதரகத்தில் ஒப்படைத்துவிட்டோம்.
அவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் இருந்த காரணத்தினால் இந்தியத்தூதரகத்தின் செலவில் அவர்களுக்குண்டான மருந்துவ உதவிகள் நடைபெற்று வருகின்றது. இவர்களை ஏமாற்றிக்கொண்டுவந்த குமார் என்பவரின் விபரங்களை விசாரித்து அவர்மேல் தக்க நடவடிக்கை எடுக்க முயற்சிகள் நடைபெறுகின்றது.
இவர்களை மீட்பதற்குண்டான உதவிகள் செய்த அனைவருக்கும், இந்தியத்தூதரக அதிகாரிகளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
Ahmed Imthias
சவூதி தமிழ்ச்சங்கம்.
மனித நேயம் என்ன என்பதை நிரூபித்துக் காட்டிய இந்த நல் உள்ளங்களை நாமும் பாராட்டுவோம்!
No comments:
Post a Comment