Followers

Saturday, June 25, 2016

மனிதருள் மாணிக்கம் அப்துல் சத்தார் எதி!



மனிதருள் மாணிக்கம் அப்துல் சத்தார் எதி!

சிறு வயதிலிருந்தே பொது பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். 1965 ஆம் வருடம் பல்கீஸ் என்ற செவிலியரை மனைவியாக பெற்றார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள்: இரண்டு ஆண்:: இரண்டு பெண்,

அனாதையாக சுற்றித் திரியும் ஏழை மக்களை காக்க வேண்டி பொதுமக்களிடம் நிதி வசூலித்தார். இவரது பொதுச் சேவைக்கு இவரது மனைவியும் உறுதணையாக நின்றார். ஒரு இல்லம் என்று தொடங்கி இன்று பாகிஸ்தான் முழுக்க 'எதி பவுண்டேஷன்' தனது கிளைகளை பரப்பிக் கொண்டே செல்கிறது. எல்லாமே பொது மக்களின் நிதியினால் சாத்தியப்படுகிறது. இன்று 500 ஆம்புலன்ஸ்கள் இந்த பவுண்டேஷனுக்கு சொந்தமாக உள்ளது.

இவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தும் இந்த தம்பதி மிக எளிமையாக வாழ்கின்றனர். பாராட்டு விழாக்களுக்கு கூப்பிட்டாலும் அதிகம் வருவதில்லை. அந்த நேரத்தில் யாருக்காகவது ஏதாவது உதவி செய்யலாமே என்கிறார் அப்துல் சத்தார் எதி.

மனிதாபிமானம் என்பது இதுதான்: இஸ்லாம் போதிப்பதும் நபிகள் நாயகம் போதித்ததும் இதைத்தான்.

அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்பவரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

அல்குர்ஆன் 4:36

அநாதைகளின் சொத்துக்களை யார் அநியாயமாக உண்கிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தான் நிரப்பிக் கொள்கிறார்கள். மேலும், விரைவில் அவர்கள் கொழுந்துவிட்டெரியும் நரக நெருப்பில் வீசியெறியப்படுவார்கள்.

அல்குர்ஆன் 4:10

2 comments:

Dr.Anburaj said...


தா்மமும் சத்தியமும் பிறா் உதவும் காாியங்கள் ஒழுக்கம் நோ்மை போன்ற பண்புகளைத்தான் இந்துமதம் வலியுருத்துகின்றது.இசுலாம் மட்டும் அரேபிய கலாச்சார அடையாளங்களை முன்னிலைப்படுத்தி மற்றவைகளை இழிவு படுத்துகின்றது.முற்றிலும் முஸ்லீம்கள் வாழும் நாட்டில் அரேபிய கலாச்சார அடையாளங்களுக்கு மதிப்பில்லை.
ஆகவேதான் திரு.அப்பதுல் சத்தாா் எதி தங்களுக்கு பொியவராகத் தோன்றுகின்றாா்.

நல்ல பதிவு. பாக்கிஸ்தானில் உள்ள மக்கள் அனைவரும் முன்னாள் இந்துக்களே என்பதை தாங்கள் மறந்து விடக்கூடாது.

Dr.Anburaj said...



சில நாட்களுக்கு முன்பு பொியவா் அமரா் ஆகி விட்டாா் என்ற செய்தி தினசாிகளில் வெளியானது. தினசாியில் குறிப்பிட்டுள்ள நபா் இவரா ? அவரது நல்வினை காரணமாக மீண்டும் நல்ல ஒரு தாய் வயிற்றில் பிறந்து -அதுவும் அரேபிய மண்ணில் பிறந்து - அரேபிய காடையா்களை திருத்த வேண்டும் என்று இறைவனுக்கு வேண்டுகோள் சமா்ப்பித்துள்ளேன்.