
வீட்டு வேலைக்கு வந்து பரிசுகளை வென்ற பெண்!
ஆப்ரிக்காவின் எத்தியோப்பியாவில் இருந்து வீட்டு வேலைக்காக சவுதி வந்தார் இந்த பெண். நான்கு வருடம் சவுதி குடும்பத்தவர்களின் மனம் கோணாமல் நடந்து கொண்டார். எத்தியோப்பியாவில் குடும்ப பிரச்னை காரணமாக வேலையை முடித்துக் கொண்டு ஊர் செல்ல முடிவெடுத்தார்.
வீட்டு ஓனரும் அந்த பெண்ணுக்கு அனுமதி அளித்தார். அவருக்காக ஒரு விருந்தும் ஏற்பாடு செய்து சொந்தங்களை அழைத்திருந்தார்.
உம் பலாவி என்ற அந்த வீட்டு பெண்மணி சொல்கிறார் 'எனது குடும்பத்தில் கடந்த நான்கு வருடங்களாக சிறப்பாக வேலை செய்தாய். எங்களின் மனம் கோணாமல் நடந்து கொண்டாய். உனது சிறப்பான சேவைக்கான வெகுமதிகள் இவை. இவற்றை உனது வீட்டுக்கு எடுத்துச் செல்' என்று தங்கம், துணி மணிகள், பொருட்கள், பணம் என்று பெரும் தொகையை அன்பளிப்பாக அளித்தனர் அந்த குடும்பத்தினர்.
வீட்டு வேலைக்கு வரும் பெண்களை கொடுமைபடுத்தும் வீடுகளும் உண்டு. உம் பலாவி போன்று இஸ்லாமிய ஒழுக்கங்களை சிறப்புடன் பேணக் கூடிய குடும்பங்களும் உண்டு.
தகவல் உதவி
சவுதி கெஜட்
18-02-2016
http://saudigazette.com.sa/saudi-arabia/saudi-family-bids-farewell-to-housemaid-with-gold-roses/
No comments:
Post a Comment