'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Wednesday, June 01, 2016
சந்தேகத்தால் பெற்ற மகளை கொன்ற தகப்பன்!
சந்தேகத்தால் பெற்ற மகளை கொன்ற தகப்பன்!
தமிழகத்திலிருந்து பிழைப்பு தேடி கோவாவுக்கு சென்றவர் சங்கர் ரெட்டி. வயது 52. பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கு சுஜாதா வயது 20, மற்றும் கவுரி என்ற இரு இளம் பெண்கள் உள்ளனர். சங்கர் வீட்டுக்கு வரும் போது பக்கத்து வீட்டு ஆணோடு பேசிக் கொண்டிருந்ததை கவனித்து விட்டார். இதனால் கோபமடைந்த சங்கர் சுஜாதாவை அந்த இடத்திலேயே தாறுமாறாக அடிக்க ஆரம்பித்தார். தடுக்க வந்த சிறிய மகளையும் பலமாக அடித்தார். முடிவில் சுஜாதா அந்த இடத்திலேயே அடி தாங்காமல் இறந்து விட்டார். கவுரியை தற்போது மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர். சங்கர் போலீஸில் சரணடைந்துள்ளார்.
நாகரிகம் என்ற பெயரில் அறிமுகம் இல்லாதவர்களோடு பெண்களை பழக விடுவது முடிவில் பெண்களின் வாழ்வுக்கு உலை வைத்து விடுகிறது. தேவையில்லாமல் மற்ற ஆண்களோடு பழகுவதை குடும்பத்தவர் அனுமதிக்கக் கூடாது. பழகும் ஆண்களில் எல்லோரும் நல்லவர்கள் என்று முடிவு கட்டிவிட முடியாது. பெற்றோருக்கு மன உளைச்சல். அவமானம். என்று வாழ்நாள் முழுக்க அவர்களை சிரமத்தில் தள்ளி விடும்.
அவசர புத்தியால் இன்று ஒரு குடும்பமே நிர்கதியாக நிற்கிறது. வருமானத்தை கொடுத்து வந்த தந்தையும் சிறைக்கு சென்று விடுவார். தற்போது சிகிச்சை பெற்று வரும் இளைய மகளின் கதி?
தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
01-06-2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment