'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Saturday, June 04, 2016
முகமது அலி அவர்களின் மிக அழகிய பேட்டி!
முகமது அலி அவர்களின் மிக அழகிய பேட்டி!
-------------------------------------------------------------------------
கேள்வி:
உங்களை நீங்கள் மறைத்துக் கொள்ளாமல் அனைவரிடமும் சகஜமாக பழகுகிறீர்களே... மரணத்தைப் பற்றிய பயம் இல்லையா?'
பதில்:
எனக்கு மரணத்தைப் பற்றிய பயம் இல்லை. இறைவன் குர்ஆனில் கூறுகிறான் 'எந்த ஒரு ஆத்மாவும் அவனது உத்தரவின்றி பூமிக்கு வருவதில்லை. அதே போல் எந்த ஒரு ஆத்மாவும் அவனது இறப்புக்கான நேரம் குறிக்கப்பட்டு விட்டால் ஒரு நொடி நேரம் கூட முந்துவதில்லை: ஒரு நொடி நேரம் கூட பிந்துவதில்லை' எனவே எனது இறப்பு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று. அதைக் கண்டு நான் ஏன் ஓடி ஒளிய வேண்டும்?
கேள்வி:
நீங்கள் உங்களை பாதுகாத்துக் கொள்ள 'பாடி கார்ட்' வைத்துள்ளீர்களா?
பதில்:
ஆம்... எனக்கு ஒரு பாடி கார்ட் இருக்கிறார். எந்த கண்களும் அவனை பார்த்ததில்லை: அவனோ உலக மக்கள் அனைவரையும் பார்த்துக் கொண்டிருக்கிறான். எந்த காதுகளும் அவனது சப்தத்தை கேட்டதில்லை : அவனோ உலக மக்களின் சப்தத்துக்கு பதிலளிக்கிறான். அத்தகைய ஆற்றல் மிக்க அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ்தான் எனது பாதுகாவலன்'
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment