'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Thursday, June 16, 2016
முஸ்லிம் அரசு ஊழியர்களுக்கு மம்தா பானர்ஜி போனஸ் அறிவிப்பு!
முஸ்லிம் அரசு ஊழியர்களுக்கு மம்தா பானர்ஜி போனஸ் அறிவிப்பு!
இந்த வருட ரமலானை சிறப்பாக கொண்டாட இஸ்லாமிய அரசு ஊழியர்களுக்கு போனஸாக 3200 ரூபாய் அளிக்க மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது. மாநில நிதி அமைச்சர் அமித் மித்ரா இது பற்றி கூறும் போது 'முஸ்லிம்களின் பண்டிகை கால போனஸாக அரசு 400 கோடியை ஒதுக்கியுள்ளது. பெருநாளுக்கு முன்பாகவே இந்த தொகை அனைவருக்கும் கொடுக்கப்பட்டு விடும்' என்கிறார்.
சிறுபான்மையினரையும் பெரும்பான்மையினரையும் ஒரே கண் கொண்டு பார்க்கும் அரசுதான் மதசார்பற்'ற அரசாக இருக்க முடியும். இவரை பின் பற்றி மற்ற முதல்வர்களும் போனஸை அறிவிப்பார்களாக!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment