Followers

Tuesday, June 21, 2016

எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தட்;டுவதில்லை!



கர்நாடக மாநிலம் உடுப்பியிலுள்ள கங்கோலி நகரில் உள்ள 'காலித் பின் வலித்' பள்ளியில் நடக்கும் இரவுத் தொழுகை! இதற்கு தலைவனாக நின்று தொழ வைப்பவர் பெயர் முஹம்மது ரிஃபாஹ். குர்ஆனின் தாஹா அத்தியாயத்தை மிக அழகாக ஓதுகிறார் இந்த சிறுவன். இசையே இல்லாமல் இறைவனின் வார்த்தைகள் மனிதர்களை செவி தாழ்த்திக் கேட்கச் சொல்கிறது: அதன்படி நடக்கவும் சொல்கிறது. எத்தனை முறை கேட்டாலும் குர்ஆனின் வார்த்தைகள் நமக்கு சலிப்பு தட்டுவதில்லை.

1 comment:

Dr.Anburaj said...


தங்கள் கட்டுரைக்கு அஹமதியா முஸ்லீம்கள் அளிக்கும் மறுப்புரை
ஓரங்களில் குறையும் பூமி என்பது கடல் அரிப்பில்லை

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 243 – இல் ஓரங்களில் குறையும் பூமி என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

நிலப்பரப்பு சிறிது சிறிதாக கடலால் விழுங்கப்பட்டு வருவதை சமீப காலத்தில் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

14 நூற்றாண்டுகளுக்கு முன்பு நிலப்பரப்பு, கடலால் அரிக்கப்பட்டு அதன் ஓரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதை யாரும் அறிந்திருக்க முடியாது.

எனவே நிலப்பரப்பு ஓரங்களில் சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டு வருகிறது
என்ற இந்த அறிவியல் கண்டுபிடிப்பு 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை என்பதற்கு இவ்வசனங்கள் (13:41, 21:44) தெளிவான சான்றாக அமைந்திருக்கின்றன.

நம் விளக்கம்:

திருக்குர்ஆனின் வசனங்களுக்கு நாம் பொருள் கூறி விளக்கும் போது முன் பின் வசனங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவ்வாறு முன்பின் வசனங்களை கருத்தில் கொள்ளாவிட்டால் அல்லாஹ் எக்கருத்தை வலியுறுத்த நினைக்கின்றானோ அக்கருத்து திசை திருப்பப்பட்டோ, மாற்றப்பட்டோ போய்விடும். என்பதற்கு இவ்விருவசனங்களும் சான்றாகும். நிலப்பரப்பு சிறிது சிறிதாக கடலால் விழுங்கப்பட்டு குறைந்து வந்துள்ளது என்பது உண்மை. என்றாலும் இவ்விரு வசனங்களும் அதைக் குறித்துக் கூறவில்லை என்பதை அவ்விரு வசனங்களுக்கு முன்னர் உள்ள வசனங்களை கருத்தூன்றி படிப்போர் அறியலாம்.

13:41 வசனத்தில், தூதுச் செய்தியை தெரிவிப்பது மட்டுமே உம்மீது (பொறுப்பாக) உள்ளது. (அவர்களிடம்) கேள்விக் கணக்குக் கேட்பது எம்முடைய போருப்பெயாகும் என்றும்,

13:42 இல் நாம் (அவர்களின்) நிலத்தை அதன் எல்லைகளிலிருந்தும் சுருக்கிக் கொண்டே வருவதை அவர்கள் கண்டதில்லையா? மேலும் அல்லாஹ்வே தீர்ப்பு வழங்குகிறான். அவனுடைய தீர்ப்பை மாற்றுபவர் எவரும் இல்லை. மேலும் அவன் விரைவில் கணக்கெடுப்பவன் ஆவான் என்றும்.

13:43 இல், இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் திட்டங்கள் தீட்டினர். ஆனால் (நிறைவேறும்) திட்டங்கள் அனைத்தும் அல்லாஹ்விற்கே உரியன. ஒவ்வொரு மனிதனும் செய்வதனை அவன் அறிகின்றான். வரவிருக்கின்ற அந்த வீட்டின் (நல்ல) முடிவு எவருக்கு உரியதாகும் என்பதை அந்த நிராகரிப்போர் விரைவில் அறிவர் என்றும் வருகிறது.

அதாவது, அல்லாஹ்வின் தூதர் தன் சமுதாய மக்களிடம் தன் தூதுச் செய்தியைக் கூறி அம்மக்களை இறைவழியில் அழைக்கிறார். அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவரை ஏற்றுக் கொள்கின்றனர். இவ்வாறு நிராகரிக்கும் அம்மக்களின் நாடு சுருங்கிக் கொண்டே வருகிறது. இதுவே கடந்த கால வரலாறு, நிராகரிப்போர் இதனை நன்கு அறிவார்கள் என்ற கருத்து கூறப்படுகிறது.

21:45 நாம் அவர்களுக்கும் அவர்களின் மூதாதையர்களுக்கும் ஒரு நீண்ட காலம் வரை மிகுதியான வசதிகளை வழங்கியிருந்தோம். நாம் அவர்களின் நாட்டை அதன் எல்லா எல்லைகளிலிருந்தும் சிறிதாக்கிக் கொண்டே வருவதை அவர்கள் காணவில்லையா?

21:46 நீர் அவர்களிடம்.... கேட்க முடியாது.

21:47 உம்முடைய இறைவனது தண்டனையின் வெப்பக் காற்று அவர்களைத் தீண்டினால், அவர்கள் எங்களுக்கு அழிவுதான், நாங்கள் அநீதியே இலைத்துக் கொண்டிருந்தோம் எனக் கட்டாயம் கூறுவர்.

இவ்வாறு திருக்குர்ஆன் நெடுகிலும் முழு உலகுக்கும் பல்வேறு காலகட்டங்களில் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டு, ஓரிறைக் கொள்கை மூலம் மக்கள் ஈர்க்கப்பட்டு அவர்கள் ஏற்றுக் கொண்டதையும் இவ்வாறு நிராகரிப்பவர்களின் நிலப்பகுதி சுருங்கியதையும் எடுத்துக் கூறப்படுகிறது. இதனையே நீங்கள் பூமியில் பயணம் செய்து (நபிமார்களைப்) பொய்ப்படுத்தியவர்களின் முடிவினைப் பாருங்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. (திருக்குர்ஆன் 16:37, 3:138, 6:12, 12:110, 22:47, 35:45, 47:11)

நாம் வாழ்கின்ற இந்த நூற்றாண்டிலும் ஏகத்துவக் கோட்பாட்டை அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் முழு உலகிலும் பரப்பி வருவதையும், ஏறக்குறைய 200 நாடுகளில் 20 கோடி மக்கள் அதனைத் தழுவி உண்மையான முஸ்லிம்களாகி நிராகரிப்பவர்களின் எல்லைகள் சுருங்குவதையும் அறிவுக்கண்ணுடையவர் காணலாம். மேலும் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களை பொய்ப்படுத்தியவர்களுக்கு ஏற்பட்ட தீய முடிவையும் காணலாம். உண்மையான நபிமார்களை பொய்ப்படுத்தியவர்களை அல்லாஹ் வெள்ளப்பெருக்கு, கொள்ளை நோய், பூமி அதிர்ச்சி, புயல் காற்று போன்றவற்றை அனுப்பி அளித்துள்ளான். அப்பேரழிவுகள். இன்று நாளும் நடப்பது மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) ஒரு உண்மையான தூதர் என்பதற்கு அடையாளங்களாகும்.