Followers

Saturday, June 25, 2016

மண் பாண்டங்கள் கோடிக்கணக்கில் வளை குடாக்களுக்கு ஏற்றுமதியாகின்றன!



திருநெல்வேலியில் இருந்து பாரம்பரியமான மண் பாண்டங்களை வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி யாகின்றன. மைக்ரோ வேவன் அடுப்பு களிலும் இவற்றை பயன்படுத்தலாம்.

துபாயிலுள்ள நட்சத்திர ஹோட்ட லின் தலைமை செயல்அதிகாரி ஒருவர் மண் பாண்டங்களை விற்பனை செய்யும் நபர்கள் குறித்து இணைய தளத்தில் தேடும்போது, திருநெல் வேலி குறிச்சியை சேர்ந்த எஸ்.முருகன் என்பவர் அறிமுகமானார்.

தேவை அதிகரிப்பு

பழமையான மண்பாண்டங்களுக் கான மாதிரிகளை அனுப்பி வைக்குமாறு முருகனிடம் அவர் கேட்டுக்கொண்டார். முருகனும் அந்த ஹோட்டல் அதிகாரி கூறிய அம்சங்களுடன் மண் பாண்டங்களை தயாரித்து அனுப்பி வைத்தார். சிறப்பாக இருந்ததால் அவற்றை அந்த ஹோட்டல் நிர்வாகம் ஏற்றுக்கொண்டது. மைக்ரோ வேவன் அடுப்புகளிலும் பயன்படுத்தும் வகையில் அந்த மண் பாண்டங்கள் தயாரிக்கப்பட்டிருந்தன.

இதையடுத்து இந்த மண்பாத்திரங் களை மற்ற ஹோட்டல்களிலும் பயன்படுத்த தொடங்கினர். இதனால் இவற்றின் தேவை அதிகரித்தது. தற்போது திருநெல்வேலி மண் பாண்டங்கள் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து சரக்கு கப்பல்களில் வளைகுடா நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. துபாய், குவைத், ஜோர்தான், கத்தார் நாடுகளுக்கு அவை ஏற்றுமதியாகின்றன.

உணவு வகைகளில் சுவை

இந்த மண் பாண்டங்களில் உணவுப் பண்டங்களை சுடச்சுட வைத்து, வீடுகளுக்கு நேரடி விநியோகம் செய்து அங்குள்ளவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள். மண் பாண்டங்களில் இருக்கும் உணவுப் பொருட்களின் மணமும், குணமும், சுவையும் குன்றாமல் இருப்பதுடன் சூடும் குறையாமல் இருப்பதால் வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

உணவு வகைகளை உண்டபின் மண் பாத்திரத்தை குப்பைத் தொட்டியில் போட்டுவிடலாம். அவை இயற்கைக்கு கெடுதல் இல்லாத கழிவு பொருளாகிவிடுகிறது என்பதால், மண் பாத்திரங்களின் தேவை வளைகுடா நாடுகளில் அதிகரித்திருப்பதாக முருகன் தெரிவித்தார்.

8-ம் வகுப்பு வரையில் படித்திருக்கும் முருகன், தனது கைவண்ணத்தில் உருவாக்கிய உபகரணங்கள் மூலமே பல்வேறு வகையான மண் பாண்டங்களை உருவாக்கி வருகிறார்.

ரூ. 30 கோடி ஏற்றுமதி

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆண்டுக்கு ரூ.30 கோடி மதிப்பிலான மண் பாண்டங்கள் பல்வேறு நாடுகளுக்கு தூத்துக்குடி துறைமுகம் மூலம் கொண்டு செல்லப்படுவதாக துறைமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எளிதில் உடையும் தன்மையுள்ள இந்த மண்பாத்திரங்கள் பத்திரமாக பேக்கிங் செய்யப்பட்டு, மாதத்துக்கு 2 அல்லது 3 கன்டெய்னர்களில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.

Thanks to
tamilhindu daily
16-06-2016

முஸ்லிம்களே இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று இந்துத்வாவின் சாமியாரிணி பிரக்யாஷி சொன்னதை பத்திரிக்கைகளில் படித்தோம். இந்த ஊளையிடுதலை இந்துக்களே பொருட்படுத்தவில்லை.

நலிவடைந்து நொடித்துப் போன பாரம்பரிய மண் பாண்ட தொழிலுக்கு இன்று வளைகுடாக்கள் கை கொடுக்கின்றன. இந்திய தேசமானது இஸ்லாமியரின் தொடர்பில்லாது இயங்க முடியாது என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக் காட்டு!...

1 comment:

Dr.Anburaj said...

முஸ்லிம்களே இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று இந்துத்வாவின் சாமியாரிணி பிரக்யாஷி சொன்னதை பத்திரிக்கைகளில் படித்தோம். இந்த ஊளையிடுதலை இந்துக்களே பொருட்படுத்தவில்லை.

1)சாியாகச் சொன்னீா்கள். உண்மை.இது போன்ற ஊளைகளை யாரும் பொருட்படுத்துவதில்லை.
இந்துக்களுக்கு முறையாக ஒரு சமய அனுஷ்டானக் கல்வியை அளிக்க முன் வருகின்றவா்கள் இந்த வகையில் செயல்படுகின்றவா்களைத்தான் இந்து சமூகம் மதிககும்.
நாய் குரைத்தால் கூடஎன்ன என்று பாா்ப்பாா்கள். இவர்களின் குரைத்தலை யாரும் சட்டை செய்ய மாட்டாா்கள்.

2)நலிவடைந்து நொடித்துப் போன பாரம்பரிய மண் பாண்ட தொழிலுக்கு இன்று வளைகுடாக்கள் கை கொடுக்கின்றன. இந்திய தேசமானது இஸ்லாமியரின் தொடர்பில்லாது இயங்க முடியாது என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக் காட்டு!

இந்தியாின் உதவியின்றி ........... என்றும் எழுதலாம். ஆனால் அரேபிய அடிமை தாங்கள் அப்படி எழுத மாட்டீர்கள். உலக நாடுகள் ஒன்றை ஒன்றுச் சாா்ந்த வாழ்வுதான் வாழ முடியும்.எல்லா வளமும் எல்லா நாடுகளில் இல்லை. இந்நிலையில் -இந்திய தேசமானது இஸ்லாமியரின் தொடர்பில்லாது இயங்க முடியாது என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக் காட்டு!- என்று எழுதுவது முட்டாள்தனமான அடிமைத்தனம்.ஆணவம்.