'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Saturday, June 04, 2016
ஹாலிவுட்டின் வழக்கத்தை மாற்றிய முஹம்மது அலி!
ஹாலிவுட்டில் புகழ் பெற்ற விளையாட்டு வீரர்களின் பெயர்களை நட்சத்திர முத்திரையில் பதித்து அவர்களின் கையெழுத்தோடு அதனை நடைபாதையில் பதித்துள்ளார்கள். இது அங்கு அந்த வீரர்களுக்கு கொடுக்கப்படும் கவுரவம். அந்த நாளில் உலகப் புகழ் பெற்ற குத்துச் சண்டை வீரர் முஹம்மது அலியின் பெயரை இவ்வாறு பொறிக்க வேண்டும் என்று அவரிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் முஹம்மது அலி அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. காரணம் கேட்கப்பட்டது.
'மறுத்ததற்கான காரணத்தை கேட்கிறீர்கள். இறைத் தூதர் நபிகள் நாயகத்தின் பெயரை எனது பெயருக்கு முன்னால் வைத்துள்ளேன். அந்த பெயரை நீங்கள் வழக்கம் போல் பொறித்து நடை பாதையில் வைத்து விடுவீர்கள். அங்கு வரக் கூடிய மக்கள் தங்கள் ஷூக்களை அந்த பெயரின் மேல் வைப்பார்கள். அதை நான் விரும்பவில்லை. என்னை கவுரவித்துதான் ஆக வேண்டும் என்றால் எனது பெயரை மட்டும் கீழே பதிக்காமல் சுவற்றில் பதித்து விடுங்கள். அதற்கு நான் ஒத்துக் கொள்கிறேன்' என்றார்.
முஹம்மது அலி அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டது. இவரது பெயரை மட்டும் சுவற்றில் பதிப்பதாக நிர்வாகிகள் ஒத்துக் கொண்டனர். உடன் சந்தோஷத்தோடு தனது கையெழுத்தையும் இட்டுக் கொடுத்தார். அரேபிய பாலைவனத்தில் பிறந்த எழுதப் படிக்கத் தெரியாத ஒருவரின் பெயர் ஹாலிவுட்டையும் அதன் விதிகளை மாற்ற வைத்தது.
எல்லா புகழும் இறைவனுக்கே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment