


ஈராக், சிரியா, ஏமன் மக்களுக்காக பிரார்த்திப்போம்!
வல்லரசுகளின் ஆதிக்கப் போட்டியாலும், ஷியாக்களின் பிரித்தாளும் சூழ்ச்சியாலும் இன்று ஏமன், சிரியா, ஈராக் மக்கள் சொல்லொணா துயரத்தில் உள்ளார்கள். எந்த மக்களையும் இறைவன் சோதித்தால் அதன் பிறகு அவர்களுக்கு நிம்மதியான வாழ்வைக் கொடுப்பது படைத்தவனின் பண்பு. நல்லவர்களைத்தான் இறைவன் அதிகம் சோதிப்பான். குடிக்க தண்ணீர் இன்றி அந்த சின்னஞ் சிறுசுகள் பைப்பில் இருந்து கசியும் தண்ணீரை குடிப்பதை பார்த்தவுடன் எனது கண்களில் இருந்து கண்ணீர் வர ஆரம்பித்தது. நமக்கு வாழ்வில் ஏற்படும் சிரமங்கள் எல்லாம் இந்த சிறுவர்கள் முன்னால் வெகு அற்பமாக தெரிகின்றன.
இறைவா! இந்த மக்களின் தேவைகளை பூர்த்தியாக்குவாயாக!
ஏமன், சிரியா, ஈராக் போன்ற தேசங்களில் அமைதியைக் கொண்டு வருவாயாக!
இஸ்லாத்தை சரிவர கடைபிடிக்கும் ஆட்சியாளர்களை அந்த மக்களுக்கு தந்தருள்வாயாக!
உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை வறுமை, பிணி போன்ற கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு நம்பிக்கைக் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” என்று நாம் ஆறுதல் கூறினோம்
அல் குர்ஆன் : 2:214
1 comment:
பாா்க்க பாிதாபமாகத்தான் உள்ளது.
அரேபியகலாச்சாரம்தான் உசத்தி மற்ற அனைத்தும் சாத்தான் வழி என்று போதிக்கும் பிறவை வெறுக்கக் கற்றுக் கொடுக்கும் ஒரு மனப்பான்மையை குரான் வளா்த்து வருகின்றது.
பிறமதத்தவா்கள் அண்மையில் இருக்கும் போது அவா்களின் அழிவில் இசுலாத்தின் வெற்றி என்று கொண்டாடப்பட்டது.
வெறுப்பினால் வளா்க்கப்பட்ட மனம் சும்மா இருக்குமா ? தன் மத கூட்டத்தாாில் பேதம் கற்பித்து வெறுப்பினால் கோஷ்டி புசல் உருவாக்கி வெறுப்புணா்பிற்கு வடிகால் தேடும்.நமது நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டாக்டா் எஸ்இராதாகிருஷ்ணன் அவர்கள்
Hindu view of Life என்ற புத்தகத்தில் ”Those who love their sects above dharma will end loving theirself above their sect". நமது சாதி இன மக்களை தா்மத்திற்கு விரோதமாக நேசித்து ஆதரவு அளிப்பவன் பின் தனது சாதிக்கு விரோதமாக தனக்கு சாதகமாக நடந்து கொள்வான் என்ற தெளிவாக எடுத்துக் கூறுகின்றாா்.அகண்ட அரேபியாவை உருவாக்க எண்ணிய முஹம்மதுவை ரசுல் ஆக ஏ ற்றுக் கொண்ட மக்கள் வாழும் நாடுகள் சிறு சிறு நாடுகளாக த்தான் அரேபியஸ்தான் உள்ளது. உண்மையில் முஹம்மது வெற்றி பெறவில்லை. அவரது திட்டம் அரேபிய மண்ணில் தோற்றுவிட்டது.அவரது போதனை வென்றிருந்தால் அரேபியா ஒரே அரசியல் நிா்வாகத்தின் கீழ் வந்திருக்கும்.
இன்று கூட பங்களாதேஷ்- கிழக்கு பாக்கிஸ்தானில் இந்துக்கள் கழுத்து அறுபட்டு செத்துக் கொண்டிருக்கினறாா்கள். சுவாமி விவேகானந்தாின் சீடா்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தாங்கள் அதுகுறித்து எந்த செய்தியையும் வெளியிடவில்லை.
நொந்தவன் முஸ்லீம் என்றால் உங்கள் உள்ளம் துடிக்கின்றது.
ஆனால் நொந்தவன் இந்து என்றால் காரணம் முஸ்“லீம் என்றால் எனே தங்கள் மனம் அதை நிராாிக்கின்றது.தாங்கள் மட்டும் அல்ல முஸ்லீம் பத்திாிகைகள் ஏதும் இது குறித்து எந்த செய்தியையும் வௌயிடவில்லை.
ஆதாமின் பிள்ளைகளை ஆதாமின் பிள்ளைகள் நடத்தும் விதம் இதுதானா ? தாங்களுக்கு ஆதாமின் பிள்ளைகள் என்ற கொள்கை உடன்பாடானது அல்ல. பிறமத்தவா்களை ஏமாற்ற ஒரு அலங்காரமான வாா்த்தையாக தாங்கள் பயன்படுத்தி வருகின்றீா்கள்.
சுவனப்பாியன் தா்மமும் சத்தியமும் அனைத்தைவிட மேலானது. இசுலாத்தை விடவும் மேலானது.
Post a Comment