Followers

Thursday, June 09, 2016

குர்ஆனை மொழி பெயர்க்க உதவிய இந்துக்களும் சீக்கியர்களும்!100 வருடங்களுக்கு முந்தய பஞ்சாப் மொழியிலமைந்த குர்ஆனின் பிரதி தற்போது கிடைத்துள்ளது. 1911 ஆம் ஆண்டு இம் மொழி பெயர்ப்பு அச்சடிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் இந்த குர்ஆனை மொழி பெயர்த்தது நிர்மலா சிங் என்ற சீக்கியர். பல பிரதிகள் அச்சடித்து விநியோகிக்க பொருளுதவி தந்தது இரண்டு இந்துக்கள், ஒரு சீக்கியர். இரண்டு இந்துக்களின் பெயர் புத்தமால் ஆதாத்லி, வைத்யா பகத். பொருளதவி தந்த மற்றொரு சீக்கியர் பெயர் மேலா சிங்.

பன்முகம் கொண்ட இந்தியா என்பது இதுதான்.

தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ
06-05-2016.

http://indianexpress.com/article/cities/chandigarh/translated-by-a-sikh-funded-by-hindus-patiala-varsity-to-digitise-century-old-quran-2786884/

8 comments:

Dr.Anburaj said...


இந்துக்களில் சீக்கியா்களிலும் சிலா் தங்களை காபீா்கள் என்று சொல்லி கொல்லச் சொல்லும் ஒரு அற்புத புத்தகத்திற்கு நிதி உதவி வழங்கி தங்களை பேமானிகள் என்று உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளாா்கள் .பாக்கிஸ்தான் பிாிந்து போய் லாகூாில் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்த இந்து சீக்கியா்கள் எப்படியெல்லாம் கொல்லப்பட்டாா்கள் என்ற கதையையும் கொஞ்சம் எழுதலாமே.

Dr.Anburaj said...

இந்துவின் விவேகம்
ஒரு அருமையான பாடல் ஏழுவிதமான குணங்களும் குணவான்களும் இந்த பூமியைத் தாங்கி நிற்கின்றனர் என்று போற்றும்:-

கோபிர்விப்ரைஸ்ச வேதைஸ்ச சதிபி: சத்யவாதிபி:

அலுப்தைர்தானசீலைஸ்ச சப்தபிர்தார்யதே மஹீ

பொருள்:--

பசுக்கள், அந்தணர்கள், வேதங்கள், கற்புள்ள பெண்கள்,உண்மை விளம்பிகள், பேராசையற்றோர், கொடையாளிகள் (தான சீலர்கள்) ஆகிய ஏழுமே உலகத்தை (மஹீ) தங்கி நிற்கிறது.

பசும்பால் இல்லாவிடில் என்ன ஆகும் என்று சிந்தித்துப் பாருங்கள்; அந்தணர்கள் என்ற சொல்லுக்குத் தற்காலத்தில் அறிஞர்கள் என்று பொருள் கொள்ளலாம். வேதங்கள் எப்போதுமே வானத்தில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. மற்ற சொற்களுக்கு விளக்கம் தேவையில்லை.

“நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை”- என்பது யாவரும் அறிந்ததே.

புறநானூற்றுப் பாடல்182

கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்ற பாண்டிய மன்னனும் இதே கருத்தைச் சொல்கிறான்:--

இந்திரனுக்குரிய அமுதமே கிடைத்தாலும் தாமே சாப்பிடமாட்டார்கள்; கோபமற்றவர்கள்; எல்லோரும் அஞ்சும் தீய செயலுக்குத் தாமும் பயப்படுவார்கள்; புகழுக்குரிய செயல் என்றால் அதைச் செய்ய உயிரையே தருவார்கள்; பழிவரும் தீய செயலானால், உலகத்தையே தந்தாலும் செய்ய மாட்டார்கள். அவர்களுக்கு சோம்பேறித்தனமே கிடையாது. சுயநலமற்றவர். பொதுநலப் பணி செய்யும் உயர்ந்தோர். இவர்களே பெரியோர்கள். இவர்களால்தான் இந்த உலகமே இன்னும் இருக்கிறது.

உண்டால் அம்ம இவ்வுலகம்; இந்திரர்

அமிழ்தம் இயைவதாயினும், இனிது எனத்

தமியர் உண்டரும் இலரே; முனிவிலர்;

துஞ்சலுமிலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்,

புகழ் எனின், உயிருங் கொடுக்குவர்; பழியெனின்

உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;

அன்னமாட்சி அனையராகித்

தமக்கென முயலா நோன் தாள்

பிறர்க்கென முயலுநர் உண்மையானே

--புறம் 182

இந்துக்களின் மேன்மைகள் அரேபிய அடிமை சுவனப்பிாியனுக்கு தொியுமா ?

Dr.Anburaj said...

மறு ஜென்மம் என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். குழந்தைகள் சில சமயம் தங்கள் முற்பிறப்புகளின் விவரங்களைக் கூறுகின்றன. சரி பார்க்கப்படும் போது அவை அனைத்தும் சரியாக இருக்கின்றன. முந்தைய ஜென்மம் அல்லாது அவைகளுக்கு அவ்வளவு விவரங்கள் தெரிய வாய்ப்பே இல்லை!” –
அமெரிக்க விண்வெளி உயிரியல் விஞ்ஞானி கார்ல் சகன்

மறு ஜென்ம்ம் பற்றிய ஆராய்ச்சியில் இன்று உலகில் தலையாய ஆய்வாளராக இருப்பவர் வ்ர்ஜீனியா பல்கலைக் கழகத்தைச் (அமெரிக்கா) சேர்ந்த உளவியல் நிபுணர் ஜிம் டக்கர் (Jim Tucker)என்பவர். எக்ஸ்ப்ளோர் (Explore) என்ற பிரபல பத்திரிகையில் 2008ஆம் ஆண்டு பல மறு ஜென்ம கேஸ்களைப் பற்றிய தன் ஆய்வுக் குறிப்புகளை அவர் வெளியிட்டார்.
அதில் நூறு சதவிகித விவரங்களும் சரியாக இருப்பது குழந்தைகள் தங்கள் முந்தைய ஜென்ம விவரங்களை வெளியிடும் போது தான் என்று அவர் குறிப்பிட்டார் பிரமாதமான விவரங்களைத் துல்லியமாக குழந்தைகள் தருவது சராசரியாக அவர்கள் மூன்று வயதாக (35 மாதங்கள்) இருக்கும் போது தான்அவர்கள் கூறும் செய்திகளை யாராலும் சுலபமாக அவர்களுக்குச் சொல்லித் தர முடியாது.தங்களது முந்தைய குடும்பம், நாடு, நகரம், விலாசம், தொழில், நண்பர்கள் உள்ளிட்ட விவரங்களைச் சரியாகத் தருவது லேசுப்பட்ட காரியமா என்ன ? அதுவும் 35 மாத குழ்ந்தையாக இருக்கும் போது!

மறு ஜென்மம் இல்லையென்றால் இன்னொரு சாத்தியக்கூறு இப்போதுள்ள மூன்று பரிமாணங்கள் அல்லாமல் இன்னொரு பரிமாணத்தில் அவர்கள் பயணம் செய்து இன்னொரு நிலையில் ஒரு வாழ்க்கை அனுபவத்தை உணர்வது தான்!

ஒரு ஆன்மா அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு முன் பல்வேறு ஜென்மங்களை எடுத்து அனைத்தையும் அனுபவிக்க வேண்டியதாக இருக்கலாம்.எல்லா ஆன்மாக்களும் ஒரே ஒரு இடத்திலிருந்து தங்கள் பயணங்களைத் துவங்குகிறார்களோ, என்னவோ!

போரிஸ்கா என்ற ஒரு சிறு பையன். ரஷியாவைச் சேர்ந்தவன். அவன் தாயார் அவன் நான்கு மாதக் குழந்தையாக இருக்கும் போதிலிருந்தே நன்கு பேச ஆரம்பித்து விட்டான் என்கிறார்! வார்த்தைகளைத் தெளிவாக அவனால் உச்சரிக்க முடிகிறது. எட்டு மாதமான போது அவன் முழு வாக்கியங்களைப் பேச ஆரம்பித்து விட்டான்! இரண்டு வயதான போது அவன் படிக்கவும் ஆரம்பித்து விட்டான்!

உள்ளூரில் பிரபலமான குழந்தையாக அவன் ஆனதில் வியப்பில்லை. அவனது அறிவு அனைவரையும் அசத்தியது.

சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களின் பெயர்களைச் சொல்வதிலிருந்து பிரபஞ்சத்தில் உள்ள் காலக்ஸிகள், நட்சத்திரங்கள் என்று வானியலில் அவனுக்குத் தெரியாத விஷயமே இல்லை!

அந்த வயதில் இருக்கும் குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட பேரறிவு வருவதற்கான வாய்ப்பே இல்லை!

அவனுக்குத் தன் பழைய ஜென்ம ஞாபகமும் உண்டு. முந்தைய ஜென்மங்களில் ஒன்றில் அவன் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்திருக்கிறான் – பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்!அவனைப் பேட்டி காண பலரும் வந்தனர்.

அவர்களிடம் அவன் சகஜமாகப் பேசினான். ஏராளமான விவரங்களைப் போகிற போக்கில் சொல்லிக் கொண்டே போனான்.

Dr.Anburaj said...

பேட்டி கண்டோர் திகைத்துப் போனார்கள்!

“செவ்வாய் கிரகத்தில் உள்ளவர்கள் பலவேறு காலக்ஸிக்களுக்கும் பல்வேறு கிரகங்களுக்கும் பயணம் செய்வார்கள். அங்கு ஆகாய விமானம் போல விண் கலங்கள் உண்டு. அந்தக் கலங்கள் ப்ளாஸ்மா சகதியையும் ஐயான் சக்தியையும் உபயோகித்துப் பறந்தன. பெட்ரோல் போன்றவற்றை உபயோகித்தால் சீக்கிரமே அவை தீர்ந்து விடும். அந்தக் கலங்களில் பொருத்தப்பட்டிருந்த எஞ்ஜின்கள் மிக மிக சக்தி வாய்ந்தவை!”

ஒரு சிறு குழந்தைக்கு எந்த விதத்திலும் யார் சொல்லித் தந்தாலும் சொல்ல முடியாத விவரங்களை அவன் கூறும் போது திகைப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?

அவன் டெலிபோர்டேஷன் பற்றியும் பேசினான்.

“ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்தில் தோன்றுவது என்பது சுலபமான விஷயம் தான். அப்படி ஒரு மாறுதலை போர்டல் (PORTAL) மூலம் செய்ய முடியும். போர்டலின் போது நேரம் மெதுவாக இயங்கும் பின்னர் வெகு வேகமாக ஓடும். எப்படி என்பதை விளக்கவே முடியாது.

சில நிமிடங்களில் வெளியில் உள்ள இன்னொரு இடத்திற்குச் சென்று விடலாம்!

எல்லா எஞ்ஜின்களும் ஒரே மாதிரி இயக்கத்தைக் கொண்டிருப்பதில்லை. ப்ளாஸ்மா எஞ்ஜின்கள் சூரிய மண்டலத்தில் மட்டுமே பயணிக்க முடியும்.

ஒவ்வொரு கிரகத்தில் உள்ளவர்கள் ஒவ்வொரு விதமாகத் தங்கள் விண்கலங்களை இயக்குகிறார்கள். உதாரணமாக ப்ளாஸ்மாவை எல்லோரும் பயன்படுத்துவதில்லை. சில கிரகங்களில் எனர்ஜி எஞ்ஜின்களைப் பயன்படுத்துகின்றனர்!”

இப்படி அந்த சிறுவன் விண்கல விவரங்களைப் பற்றி பிட்டுப் பிட்டு வைத்தான்.

செவ்வாய் கிரக வாசிகள் மனிதர்களைப் போல ஆக்ஸிஜனை சுவாசிப்பதில்லையாம். அவர்கள் கார்பன் டை ஆக்ஸைடையே சுவாசிக்கிறார்களாம். கிரகங்களிடையே ஒத்துழைப்பு போன்ற பெரிய விஷயங்களையும் மூன்று வயதுச் சிறுவன் பேசும் போது விஞ்ஞானிகள் வியக்கின்றனர்; திகைக்கின்றனர்.

இதற்கிடையில் நாஸாவைச் சேர்ந்த ப்ளானடரி ஸயின்ஸஸ் டைரக்டரான ஜேம்ஸ் க்ரீன் (James Green, NASA Director of Planetary Sciences) இதற்கு முன்னர் நாம் நினைத்தது போல செவ்வாய் கிரகம் வறண்ட கிரகம் அல்ல; அங்கு நீர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது” என்று அறிவித்துள்ளார்.

நாஸா ஏற்பாடு செய்திருந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் பல அதிசய விஷயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அங்கு ஆறுகள் ஜீவ நதி போல பெருகி வரும் நீருடன் ஓடிக் கொண்டிருந்தனவாம்.

வாழ்க்கை வாழ்வதற்கான சகல வாய்ப்புகளும் செவ்வாயில் உண்டாம்.

ஜார்ஜியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியைச் சேர்ந்த கிரகவியல் விஞ்ஞானி ஜேண்ட்ரா ஓஜா (Lujendra Ojha , Planetary Scientist of Georgia Institute of Technology) செவ்வாய் கிரகம் பற்றி எடுக்கப்பட்ட படங்களை ஆய்வு செய்து அங்கு நீர் இருப்பதை உறுதி செய்துள்ளார்.

ஆக நாஸா விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் உயிரினம் இருந்திருக்கக் கூடும் என்ற முடிவுக்கு இப்போது வந்துள்ளனர்.

இந்த சமயத்தில் ‘செவ்வாய் பையன்’ போரிஸ்காவின் பேட்டி பரபரப்பான ஒன்றாக அமைகிறது!

மறு ஜென்மம் பற்றி பூமியில் பல இடங்களில் வாழ்ந்ததாக குழந்தைகள் குறிப்பிட்ட கேஸ்கள் பல உண்டு. அவற்றின் மீது ஆய்வு மேற்கொண்டு அவை உண்மை தான் என்பதை விஞ்ஞானிகள் கண்ட விவரமும் உண்டு.

ஆனால் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்ததாகக் குறிப்பிடப்படும் விவரம் கொண்ட கேஸ் முதல் முதலாக இது தான்! இதை யார் தான் சரி பார்க்க முடியும்!

விஞ்ஞானிகளைத் திகைக்க வைக்கும் சிறுவன் போரிஸ்கா புதிய பரிமாணம் கொண்ட ஒரு புத்தறிவுக்கு வழி வகுக்கும் பாலகனா?!Dr.Anburaj said...

நீதி வெண்பா என்ற அருமையான நூலில் 100 பாடல்கள் உள்ளன.விவேக சிந்தாமணி என்ற நூலைப் போலவே இதை எழுதிய ஆசிரியர் பெயரும் கிடைக்கவில்லை. அதில் ஒரு அருமையான பாட்டு:-

கொம்புளதற்கு ஐந்து குதிரைக்கு பத்துமுழம்
வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே - வம்புசெறி
தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
நீங்குவதே நல்ல நெறி. (பாடல் 20, நீதி வெண்பா)

கொம்பு இருக்கும் மாடு முதலிய மிருகங்களுக்கு அருகில் போகாதீர்கள். குறைந்தது ஐந்து முழமாவது தள்ளி நில்லுங்கள். குதிரைக்கு பத்து முழ தூரத்தில் நின்றால் பாதுகாப்பாக இருப்பீர்கள். யானைக்கு ஆயிரம் முழம் தள்ளி நில்லுங்கள். திடீரென்று மதம் பிடித்து ஓடிவந்தால் அதை உங்களால் முந்தமுடியாது. ஆகையால் 1000 முழமாவது தள்ளி இருங்கள். ஆனால் தீயோரைக் கண்டால் – துஷ்டர்களைக் கண்டாலோ, கண் காணாத தூரத்துக்கு ஓடிப் போய்விடுங்கள். அப்படிப்பட்ட ஆள் வருகிறான் என்றால் அந்தப் பக்கமே போகாதீர்கள். அவர்களை போலீசாரும், நீதித் துறையும் கவனித்துக்கொள்ளும். இது நல்லதொரு புத்திமதி.

India Rampaging Elephant

இதே விஷயம் சம்ஸ்கிருதத்திலும் அழகாக உள்ளது:-

சகடம் பஞ்சஹஸ்தேஷு தசஹஸ்தேஷு வாஜினம்

கஜம் ஹஸ்த சஹஸ்ரேண துஷ்டம் தூரேண வர்ஜயேத்

வண்டிகள் (சகடம்) நின்றால் அதற்கு அருகில் நிற்காதீர்கள். அது திடீரென நகரக்கூடும். குறைந்தது ஐந்து முழமாவது தள்ளி நில்லுங்கள். குதிரைகள் (வாஜினம்) இருந்தால் முனால் பாய்ந்து கடிக்கவும் செய்யும்; பின் காலால் உதையவும் செய்யும்; ஆகையால் பத்து முழம் தள்ளி நில்லுங்கள். யானைக்கு (கஜம்) ஆயிரம் முழம் தள்ளி நில்லுங்கள். துஷ்டர்களைக் கண்டாலோ வெகு தொலைவில் போய் விடுங்கள்.அவ்வையாரோ இதற்கும் ஒரு படி மேலே போகிறார்; காந்திஜியின் குரங்கு பொம்மை இதிலிருந்து தோன்றியதே என்று முன்னரே ஒரு கட்டுரையில் சொன்னேன்:--

தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற

தீயார் சொல் கேட்பதுவும் தீதேயாம் – தீயார்

குணங்களுரைப்பதுவும் தீதே யவரோ

டிணங்கி யிருப்பதுவுந் தீதே - வாக்குண்டாம், அவ்வையார்.கெட்டவர்களைப் பார்ப்பது தீது; அவர் சொல் கேட்பதும் தீது; அவர்களுடன் சேருவது தீது (இதெல்லாம் முன்னர் சொன்ன விஷயங்களே. அவரைப் பற்றிப் பேசுவதும் தீதே. அதாவது பேஸ் புக்கிலும், ஈ மெயிலிலும், திண்ணைப் பேச்சிலும், நண்பர்களின் அரட்டைக் கச்சேரியிலும் அவர்களைப் பற்றிப் பேசாதே. ஏன்?

1.நேரம் வீண், 2.எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. யார் உங்களுக்கு குழி பறிப்பார்கள் என்பதும் தெரியாது என்று எச்சரிக்கிறார் அவ்வையார்.

3 snakes

இறுதியாக மேலும் ஒரு சம்ஸ்கிருதப் பாடல்:--

துர்ஜன: பரிஹர்தவ்யோ வித்யா அலங்க்ருதோ அபி சன்

மணினா பூஷித ஸர்ப: கிம் அசௌ ந பயங்கர:

படித்தவர்களாக இருந்தாலும் கெட்டவர்களாக இருந்தால், அவர்களை விட்டுவிடவேண்டும். பாம்பு என்பது பயங்கரமானது இல்லையா!

படித்தும் கெட்டவர்கள் = மாணிக்கம் தரித்த விஷப் பாம்பு

அழகான உவமை!


வாழ்க தமிழ்; வளர்க சம்ஸ்கிருதம்.

Dr.Anburaj said...

பெண்களை போற்றும் இந்து சமூகம்
கடந்த 100 அல்லது 200 ஆண்டுகளில் சாதனை புரிந்த தமிழ் எழுத்தாளர்களின் பட்டியல்களைப் பார்த்தால் பெண்கள் பெயர்களையே காணமுடிவதில்லை. ஏன் இப்படிக் கடந்த கால பெண் எழுத்துச் சிற்பிகளை மறந்தார்கள் அல்லது ஒதுக்கினார்கள் என்பது ஒரு புதிராக இருக்கிறது. இவ்வளவுக்கும் அசலாம்பிகை அம்மையார் போன்றோர் திரு.வி.க. போன்றோரின் நல்லாசிகளைப் பெற்றுள்ளார்கள்!

உலகிலேயே அதிக பழைய பெண் எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் உடையது பாரத நாடுதான். ரிக்வேதத்தில் 20-க்கும் மேலான பெண் கவிஞர்களும், அதற்கு 1500 ஆண்டுகளுக்குப்பின்னர் தோன்றிய சங்கத் தமிழ் இலக்கியத்தில் இருபதுக்கும் மேலான பெண் கவிஞர்களும் நமக்கு நன்கு அறிமுகமானவர்களே. ஆனால் அவ்வையார், காரைக்கால் அம்மையார், ஆண்டாள் என்ற பெயர்களைத் தவிர, பாமர மனிதனுக்குப் வேறு பெயர்கள் தெரியுமா என்பது சந்தேகமே. இன்றைய பத்திரிக்கைகளில் எழுதும் பெண்கள் பெயரையும், நடிகைகள், பாடகிகள், நடன மாதர்கள் பெயரை மட்டும் எல்லோரும் சொல்லிவிடுவர்.

அசலாம்பிகை, வாலாம்பாள், பண்டிதை விசாலாக்ஷ்மி அம்மாள், அம்புளு, பாலாமணி என்று பெயர்களை அடுக்கினால், யார் இவர்கள்? பழங்காலக் கதைகளில் வரும் கதா பாத்திரங்களா? பெயர்களே பழைய பத்தாம் பசலிப் பெயர்களாக உள்ளனவே என்று வியப்பார்கள். கோலங்கள், சமையல் கலை பற்றிய பல புத்தகங்களைப் பெண்கள் எழுதியதில் வியாப்பொன்றும் இல்லை. ஆனால் இங்கே தரும் பட்டியல் கதை, கவிதை, நாடகம் எழுதிய பெண்களாவர்.

நான் லண்டனில் வாரந்தோறும் பிரிட்டிஷ் லைப்ரரிக்குப் போய் பழைய புத்தகங்களைப் பார்ப்பதால் இவர்களைப் பற்றி எனக்கு தெரியவந்தது. அவர்களுடைய புத்தகங்களைத் படிக்கும் பாக்கியமும் கிடைத்தது. அத்தனையையும் படிக்க நேரம் போதவில்லை. “

பழைய நீதி நூல்களிலும் புராணங்களிலும் போற்றப்படும் பண்புகளைப் போற்றும் வகையில் பல பெண்களும் நாவல்களை எழுதியுள்ளனர். ஆரிய சிகாமணிகளே! என்று அவர்கள் வாசகர்களை அழைப்பது “ஆரிய = பண்பாடுமிக்க” என்ற உண்மைப் பொருளில் பயன்படுத்தப்பட்ட சொல்லாகும்
இதோ ஒரு சின்னப் பட்டியல்:--

1.அசலாம்பிகை அம்மாள்:

புத்தகங்களில் இவர் பெயர் ஸ்ரீமதி அசலாம்பிகை அம்மாள் என்று காணப்படுகிறது. இவர் மஹாத்மா காந்தியின் வாழ்க்கையை காந்தி புராணம் என்ற பெயரில் மூன்று பாகங்களாக வெளியிட்டிருக்கிறார். (நான் பிரிட்டிஷ் லைப்ரரியில் கண்டது 3 பாகங்கள்) 1921 முதல் 1924 ஆம் ஆண்டு வரை இவை வெளியாகியிருக்கின்றன. தமிழ் அறிஞர் திரு. வி.கலியாண சுந்தர முதலியார் எழுதிய முகவுரையில் இவரைப் பாராட்டி எழுதி இருக்கிறார். தமிழில் காரைக்கால் அம்மையாருக்குப் பின்னர் அந்தாதிப் பாட்டு எழுதிய பெண்மணி இவர்தான்!! ஆண்களில் பலர் அந்தாதி எழுதினர். ஆனால் பெண்களில் 1500 ஆண்டுகளுக்குப் பின்னர் இவர் ஒரு சாதனை செய்தார். காந்தியின் வரலாற்றைக் கவிதையில் எழுதுவதே கடினம். அதையும் அந்தாதிப் பாட்டுகளாக எழுதுவது அதைவிடக் கடினம்!இவர் திண்டிவனம் தாலுக்கா இரட்டணையில் 1875ல் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே கணவரை இழந்ததால் இவரது தந்தை பெருமாள் ஐயர், இவரை திருப்பாதிரிப்புலியூரூக்கு அழைத்துச் சென்று தமிழும் சம்ஸ்கிருதமும் கற்பித்தார். பின்னர் இவர் சிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் மாறினார். பெண் விடுதலை, நாட்டு விடுதலையில் நாட்டம் கொண்டார். இவரை திரு.வி.க. ‘தற்கால அவ்வையார்’ என்று அழைத்தார். அசலாம்பிகை அம்மையார் எழுதிய பிற நூல்கள்:- திலகர் புராணம், திருவுடையூர் தல புராணம், திருவாமாத்தூர் புராணம், இராமலிங்க சுவாமிகள் வரலாற்றுப் பாடல், ஆத்திச் சூடி வெண்பா, குழந்தை சுவாமிகள் பதிகம்
2.வி.எஸ்.வாலாம்பாள் அம்மாள்:-
வேதாந்தப் பாட்டுகள் என்ற பெயரில் இவர் தொகுத்து வெளியிட்ட நூல் பிரிட்டிஷ் லைப்ரரியில் கிடைத்தது. 1907ஆம் ஆண்டு பதிப்பு இது. ஜீவ நாடகம் முதலிய அத்வைதப் பாட்டுகளும் பஞ்சீகரண மகா வாக்கியமும் என்று 1908ல் ஒரு நூல் வெளியிட்டுள்ளார். அதில் பலவர்ண இணைப்பு வரைபடமும் உள்ளது. கிடைக்கும் பல பாடல்களைத் தொகுத்து வெளியிடுவதாக அவரே முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். ஆயினும் இவருக்கு அத்வைதத்தில் உள்ள ஈடுபாடும் ஞானமும் அந்தத் தொகுப்பிலேயே தெரிகிறது.

இவர்பின்ன வெளியிட்ட நூல்கள்; வால்மீகி ராமாயணம் (யுத்த காண்டமுள்பட) ஞான ராமாயனக் கப்பலும் (இரண்டாம் பதிப்பு), குசல வாக்கியம், அனந்தங்காடு ஸ்ரீ பார்வதியம்மன் சோபனம்.
இவர் புத்தகம் கிடைக்கும் இடம் என்று தனது பெயருடன், போஸ்டாபீசுக்கு பக்கத்து வீடு, எழும்பூர் என்று எழுதி இருப்பதால் எழும்பூர்வாசி என்பது தெரிகிறது.

Dr.Anburaj said...

2.வி.எஸ்.வாலாம்பாள் அம்மாள்:-

வேதாந்தப் பாட்டுகள் என்ற பெயரில் இவர் தொகுத்து வெளியிட்ட நூல் பிரிட்டிஷ் லைப்ரரியில் கிடைத்தது. 1907ஆம் ஆண்டு பதிப்பு இது. ஜீவ நாடகம் முதலிய அத்வைதப் பாட்டுகளும் பஞ்சீகரண மகா வாக்கியமும் என்று 1908ல் ஒரு நூல் வெளியிட்டுள்ளார். அதில் பலவர்ண இணைப்பு வரைபடமும் உள்ளது. கிடைக்கும் பல பாடல்களைத் தொகுத்து வெளியிடுவதாக அவரே முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். ஆயினும் இவருக்கு அத்வைதத்தில் உள்ள ஈடுபாடும் ஞானமும் அந்தத் தொகுப்பிலேயே தெரிகிறது.

இவர்பின்ன வெளியிட்ட நூல்கள்; வால்மீகி ராமாயணம் (யுத்த காண்டமுள்பட) ஞான ராமாயனக் கப்பலும் (இரண்டாம் பதிப்பு), குசல வாக்கியம், அனந்தங்காடு ஸ்ரீ பார்வதியம்மன் சோபனம்.

இவர் புத்தகம் கிடைக்கும் இடம் என்று தனது பெயருடன், போஸ்டாபீசுக்கு பக்கத்து வீடு, எழும்பூர் என்று எழுதி இருப்பதால் எழும்பூர்வாசி என்பது தெரிகிறது.
3.அம்புளு:

இவர் 1910 ஆம் ஆண்டில் “அப்பாசாமி சாஸ்திரி” என்ற தமிழ் நகைச்சுவை நூலை எழுதியுள்ளார்.

4.கே.அலர்மேல் மங்கை:

பண்டிதை ஸ்ரீமதி கா.அலர்மேல் மங்கை என்ற பெயர், ‘திராவிட மதம்’ என்ற நூலின் ஆசிரியராக காணப்படுகிறது. இது 1914ல் வெளியான நூல்.

5.வள்ளியம்மன் சோபனம்:

அலமேலு அம்மாள் என்பவர், பாலக்காட்டிலிருந்து 1915-ல் வள்ளியம்மன் சோபனத்தை வெளியிட்டுள்ளார்.

6.பண்டிதை விசாலாக்ஷியம்மா:

கடந்தகாலத்தில் அதிக நூல்களை எழுதிக் குவித்தவர் பண்டிதை விசாலாக்ஷியம்மா. இவர் கதைகளையும், நாவல்களையும் எழுதியர். இவர் எழுதிய கதைகள்:-

மஹேச ஹேமா என்ற நாவலை 1912ம் வெளியிட்டுள்ளார். அதில் முதல் பக்கத்திலேயே இவருடைய படைப்புகளின் நீண்ட பட்டியல் இருக்கிறது.

லலிதாங்கி, ஜலஜாக்ஷி, தேவி சந்திரபிரபா, ஜோதிஷ்மதி, நிர்மலா,ஆனந்த மஹிளா, ஹேமாம்பரி, ஸரஸ்வதி, கௌரி, ஞானரஞ்சனி, ஸுஜாதா, வனஸுதா, ஜெயத்சேனா, மஹிஸுதா, ஸ்ரீமதி ஸரஸா, இரட்டைச் சகோதரர்கள், விராஜினி, ஆரியகுமாரி, ஸ்ரீகரீ, ஜ்வலிதாங்கி

ஒவ்வொன்றும் எட்டு அணா விலை உடையது. 1908க்கும் முன்னரே இவர் 10 நூல்களை எழுதியது 1908 ஆம் ஆண்டு வெளியான ஸுஜாதா முதல் பக்கத்திலிருந்து தெரிகிறது. வித்யா குரு வி.நடராஜ அய்யருக்கு அதை சமர்ப்பணம் செய்துள்ளார். அவர்தான் இவரை எழுத்துத் துறைக்கு அறிமுகப்படுத்தியவர்.

லோபகாரி பத்திரிக்கைக்கு ஆதரவு கோரியும் விசாலாட்சி எழுதியுள்ளார்.

பின்னர், இவர் தன்னை “எடிட்டர், ஹிதகாரிணீ, மயிலாப்பூர்” என்றும் எழுதி இருப்பதால் இவர் சென்னையில் வசித்தவர் என்பது தெரிகிறது.
7.ஸ்ரீமதி பாலம்மாள்

இவர் எழுதிய நூல்:- ‘சாணக்ய சாகஸம் என்னும் சந்திரகுப்த சரித்திரம்’

டாக்டர் ஏ.ஆர்.வைத்தியநாத சாஸ்திரியார் அவர்களின் குமாரத்தியாகிய ஸ்ரீமதி பாலம்மாள் இயற்றியது,என்று தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார். வெளியான ஆண்டு 1914.

பாலம்மாள் முன்னுரையும் இதிலுள்ளது.

8.கிருஷ்ணம்மாள்:

ஸ்ரீ மஹாபக்த விஜயம் (ஞானேசுவர சரித்திர கீர்த்தனைகளும், பக்தி வைராக்கிய கீர்த்தனைகளும்) – என்ற நூலில் திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சி பிரம்மஸ்ரீ கிருஷ்ணம்மாளவர்களால் இயற்றப்பட்டன என்று அச்சிடப்பட்டுள்ளது. வெளியிட்ட ஆண்டு

9.ராதாமணி

ஸ்ரீமதி ராதாமணி எழுதிய “பிரசன்னகுமாரி” என்ற நூல் 1937ல் தஞ்சாவூரில் வெளியிடப்பட்டது. அதன் தலைப்பின்கீழ் பழங்கால தமிழ் நாடகம் என்று எழுதியுள்ளார். விலை 12 அணா.

10.சாமுவேல் அம்மாள் மலைமகள்

இல்லற இன்ப இரகசியம் என்ற கிறிஸ்தவ சமய நூலை ஏ.எம்.பி.சாமுவேல் அம்மாள் இயற்றியுள்ளார். விலை 10 அணா. இந்திய கிறிஸ்தவ லிடெரேச்சர் சொசைடி இதை வெளியிட்டது.

11.மலைமகள்

மலைமகள் என்ற பெயரில் அமிருதவல்லி என்ற நாவலை ஒரு பெண்மணி எழுதியிருக்கிறார். இதை வெளியிட ஊக்குவித்த விசாலாக்ஷ்மி அம்மாளுக்கு அவர் நூல் முகவுரையில் நன்றியும் தெரிவித்து இருக்கிறார்.மேலே கண்ட நூல்களில் பெரும்பலானவை 100 ஆண்டுகளுக்கு முன் வெளியானவை. ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வோம் இந்த நாட்டிலே என்று பாரதி கண்ட கனவு அவர் வாழ்ந்த காலத்திலேயே ஓரளவு நிறைவேறியதை அறிய மகிழ்ச்சியாக இருக்கிறது.


நூற்றாண்டுக்கு முன் பெண்கள் ஆற்றிய எழுத்துத்துறை சேவை, டாக்டர் பட்ட ஆராய்ச்சிக்குரியது. பிரிட்டிஷ் லைப்ரரியிலும், அது போன்ற பழைய லைப்ரரிகளிலும் நிறைய நூல்கள், காத்திருக்கின்றன.

Dr.Anburaj said...


எனது பதிவுகளை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி. அன்பிருக்குது அறம் இருக்குது அரபு நாட்டிலே என்று நாகூா் அனிபா பாடுவது எவ்வளவு அபத்தம் என்பதை தாங்களும் முஸ்லீம்களும் உணர வேண்டும்.

இந்திய மண்ணில் எந்த சிறப்பும் இல்லை என்ற கயவர்களின் கருத்து பொய்யாக்க வேண்டும். அரேபிய கலாச்சாரத்தை விட வயதிலும் தொன்மையிலும் வயதிலும் பண்பாட்டிலும் நாகாீக பாிணாமத்தின் உச்சி நிலையை அடைந்துள்ளது இந்திய- இந்து பண்பாடு.ஆனால் கிணற்றில் அடிக்கடி தூா் அள்ள வேண்டியது அவசியம்.அதுபோல் இந்து பண்பாட்டிலும் தூள்வார வேணடியுள்ளது.