Followers

Wednesday, June 29, 2016

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்இது பனி படர்ந்த மலை என்றா நினைக்கிறீர்கள்? தவறு

இது அரஃபாவில் இறைவனிடம் கையேந்தும் முஸ்லிம்கள்!

'ஒரு தாய் மக்கள் நாம் என்போம்! ஒன்றே எங்கள் குலமென்போம்'

என்பதை ஏட்டில் மாத்திரம் எழுதி வைக்காமல் செயலிலும்

வருடந்தோறும் காட்டிக் கொண்டிருக்கும் உலக முஸ்லிம்கள்!

6 comments:

Dr.Anburaj said...'ஒரு தாய் மக்கள் நாம் என்போம்! ஒன்றே எங்கள் குலமென்போம்'

துருக்கியின் இஸ்தான்புல் நகர விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 41 பேர் உயிரிழந்தனர்.

239 பேர் காயமடைந்தனர்.அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆண்டில் மட்டும், இஸ்தான்புலில் நிகழ்த்தப்பட்ட நான்காவது பயங்கரவாதத் தாக்குதலான இது, முந்தைய தாக்குதல்களை விட மிக மோசமானது என்று கூறப்படுகிறது.

ஏற்கெனவே, அந்த நகரில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் இரு தாக்குதல்களையும், தடை செய்யப்பட்ட குர்திஸ்தான் மக்கள் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற பயங்கரவாதக் குழு மற்றொரு தாக்குதலையும் நிகழ்த்தின.

செவ்வாய்க்கிழமை நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

எனினும், தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ள விதத்தைக் கொண்டு, இதனை ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிகழ்த்தியிருப்பதாகவே கருதுவதாக பிரதமர் பினாலி யில்திரிம் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலில் வெளிநாட்டினர் பலரும் உயிரிழந்ததாக அவர் கூறினார்.

பயங்கரவாதிகள் விமான நிலையத்துக்கு வாடகைக் காரில் வந்ததாகவும், பயணிகளை நோக்கி தானியங்கித் துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டுவிட்டு, உடலில் பொருத்தியிருந்த வெடிபொருளை வெடிக்கச் செய்ததாகவும் யில்திரிம் கூறினார்.

இதுகுறித்து அதிபர் எர்டோகன் கூறுகையில், பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒருங்கிணைந்துப் போராட வேண்டும் என்று கூறினார்.

Dr.Anburaj said...


ஈராக்கில் ஐஎஸ்காடையா்கள் நிறைய வாகனங்களில் அணிவகுத்து சென்ற போது அமொிக்க விமானப்படை தனது தாக்குதலை நடத்தி 250 போ்களைக் கொன்றுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலியான்கள் தாக்குதல் நடத்தியதில் 40 போலீஸ்காரா்கள் கொல்லப்பட்டுள்ளாா்கள்.

முஹம்மதுவும் குரானும் இருக்கும் வரை உலகில் மனித இரத்தம் ஒடிக்கொண்டேயிருக்கும்.

Dr.Anburaj said...


துருக்கி அரசு இசுலாமிய தேச காடையா்களுக்கு எல்லா ஆதரவும் அழித்து வருகின்றது.
காடையா்களை ஆதாித்தால் விளைவு என்ன வாகும் என்பதற்கு துருக்கிக்கு எற்பட்டது நல்ல பாடம் ஆகும். வினை விதைத்த துருக்கி வினையை அறுத்துள்ளது. இசுலாமிய காடையா்களிடமிருந்து மிகக்குறைந்த விலையில் எண்ணெய்யை வாங்கி பயன்படுத்துகின்றது.மேலும் இஸ்ரவேலுக்கு அனுப்ப உதவுகின்றது.

Dr.Anburaj said...

நல்லதோர் வீணை செய்தே தினமணி கட்டுரை
நாட்டு விடுதலையைத் தன் உயிர்மூச்சாகக் கருதி, வீர சுதந்திரம் வேண்டி, வேறொன்றும் கொள்ளாது நின்ற மகாகவி பாரதியார், விடுதலையை மாற்றாரிடமிருந்து பெறுமுன், இந்திய இனம் பெண்மைக்கு விடுதலை அளிக்க வேண்டுமென விரும்பினார். பெண் விடுதலை இயக்கம் உருவானது.
பாரதியார் "பெண்மை வெல்க' எனக் கூத்திட்டார். "பெண்ணறத்தினை ஆண் மக்கள் வீரந்தான் பேணுமாயின் பிறிதொரு தாழ்வில்லை' என்று எடுத்துக்கூறினார். சக்தியும், சிவனும் இணைந்து செயற்பட்டால் வெற்றி பெறுவது திண்ணம் என உணர்ந்து, சுதந்திரப் போராட்ட வேள்வியிலே பெண்ணினத்தை ஈடுபடுத்த வேண்டினார்.

"ஆணுக்குப் பெண் விலங்கு என்ற பண்டை வழக்கத்தை ஒழித்து, குறைவிலா அறிவு பெற்று, ஆணுக்கு நிகராக வாழவல்லார் தம்மைத் துணைக் கொண்டு கடமை செய்வீர்' என அறிவுறுத்தினார் மகாகவி.

பெண்களின் முன்னேற்றத்திற்காக வேதநாயகம் பிள்ளை "பெண்மதி மாலை' என்னும் கருத்தமைந்த நூலை உருவாக்கி, பெண்களின் வாழ்வுக்கும் உயர்வுக்கும் வழிகாட்டினார். மகாவித்துவான் சவராயுலு நாயக்கர் என்பார் முதன் முதலில் பெண்களுக்கென்றே புதுச்சேரியில் தனிப் பள்ளியைத் தொடங்கிய பெருமைக்குரியவர்.

பாரதி, தம்பிக்கு எழுதிய கடிதத்தில், "பெண்ணைத் தாழ்மை செய்வோன் கண்ணைக் குத்திக் கொண்டான் என்றெழுது. பெண்ணை அடைந்தவன் கண்ணை அடைந்தவன் என்றெழுது' என்கிறார்.

மகாத்மா காந்தியோ, "ஆண்களைவிடப் பெண்களுக்கு அன்பும் பொறுமையும் அதிகம். பெண்ணில்லாமல் ஆணில்லை. மிருகத்தனமான துணிச்சலில் பெண்ணைவிட ஆண் சிறந்தவனாக இருக்கலாம். ஆனால், தன்னை வன்முறை இச்சைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளத் துணிவதில் ஆணிணும் பெண்ணே சிறந்தவள்' என்று பெண்ணினத்தை உயர்த்திப் பேசியுள்ளார்.

பண்புநலன் பெற்ற பெண்டிர் ஆடவர்க்கு இணையாக, ஏன் ஒருபடி மேலாகவே கல்வி, அறிவு, பதவி என அனைத்திலும் மேலோங்கி நிற்கிறார்கள். இதற்குக் காரணமென்ன? அவர்கள் ஆழ்ந்தகன்ற நுண்ணுணர்வு, கால அருமை அறிதல், நீதிக்குப் புறம்பாக நடக்காத நல்லியல்பு, செயல் திட்டம், செயல் தூய்மை எனப் பலவகையான் உயர்ந்து நிற்பதால், வேலைவாய்ப்புகள் பெண்டிரைத் தேடி வருகின்றன.

இன்றைக்கு, படிப்பும், அழகும் மட்டும் ஆண் மகனைக் கவர்வதில்லை. பணிக்குச் சென்று பொருளீட்டும் பெண் என அறிந்த பின்னரே திருமணம் செய்ய உடன்படுகின்றனர். பணிக்குச் செல்லாத பெண்ணுக்குத் திருமணச் சந்தையில் விலையில்லை என்ற எண்ணம் மக்கள் மனத்தைவிட்டு அகலவில்லை.

அதிலும், கணவனினும் மனைவி அதிகம் படித்துவிட்டாலோ, அதிக ஊதியம் பெறுபவளாக இருந்தாலோ ஆணினம் தாழ்மையுணர்ச்சியில் பெண்மையை வாட்டும் நிலைதான் உள்ளது.

இன்று நாடெங்கும் நாளும் நடக்கும் சீர்கேடான நிகழ்வால் தம்மைப் பலி கொடுக்கும் பெண்ணினத்தை நினைத்தால், உள்ளமும் உடலும், அச்சத்தால் நடுங்குகிறது.

நள்ளிரவில் ஒரு பெண் நடு வீதியில் எதற்கும் அச்சமின்றி நடந்துசெல்லும் நாளே நாம் உண்மையிலே சுதந்திரம் பெற்ற நாள் என ஓங்கியுரைத்த காந்தி மகான் இன்று இருந்தால், இன்று நிகழும் கொடுமை கண்டு தன்னுயிரையே நீத்திருப்பார்.

Dr.Anburaj said...

பட்டப்பகலில் பலரும் உலவும் தொடர் வண்டி நிலையத்தில், பட்டம் பெற்ற கணினி மென்பொருள் பொறியியல் வல்லுனரான ஓர் இளம் பெண் கயவன் ஒருவனால் கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார். நம் நாடு சுதந்திரம் பெற்றது உண்மையா?

தன் குடும்பத்திற்காக உழைக்க, உடல் வருத்தி, போதிய உணவின்றிச் செல்லும் பெண்ணினத்தைக் காக்க காவலர்கள் எவரும் தொடர் வண்டி நிலையத்தில் கண்காணிப்பு செய்யாமல் இருந்தது சுதந்திரம் பெற்றமையாலா?

குற்றவாளிகளைப் பிடித்துத் தண்டனை வழங்கிவிட்டால் இதுபோன்ற பிரச்னைக்கு முடிவு கிடைத்துவிடுமா? இல்லை.

பெண்கள், ஒரு சில ஆண்களின் போலியான கவர்ச்சிகரமான பேச்சில் மனதைப் பறி கொடுத்து, தங்கள் வாழ்வுக்கு முடிவு தேடிக் கொள்ளக் கூடாது.

ஆடவர்கள், பெண் குலத்தைத் தங்களின் உடன்பிறப்புகளாக எண்ணி மதிக்க வேண்டும், தங்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்குவதில் ஆண்கள் தங்கள் மன தைச் செலுத்த வேண்டும்.

சங்ககாலத்தில், தவறு செய்பவரைப் பாசக் கயிற்றால் பற்றி, நடுவூரில் பலர் காண அறைந்துண்ணும் சதுக்கப் பூதம் இருந்தாக சிலப்பதிகாரம் வாயிலாக அறிகிறோம்.

அறியோன் ஒருவன்

அறியாக்கரி பொய்த்து அறைந்துணும் பூதத்துக்

கறை கெழுபா சத்துக் கையகப்படலும் (அடை. காதை: 78-79)

நம் ஊரிலும் இதுபோல், கொலையாளிகளைத் தேடிப் பிடித்து, தீர ஆய்ந்து, அவனே கயவன் என்று அறிந்தவுடன் நடுவூருள் அனைவரும் பார்க்க அவனைத் துன்புறுத்தி, அவன் உயிர் நீக்கலாம் என்ற சட்டம் வந்தால் தீயவர்களுக்கு அஃது ஒரு பாடமாக அமையும். குற்றங்கள் குறைய வாய்ப்புண்டு. தவறு செய்வோர் யாராக இருப்பினும் இதற்கு விதிவிலக்கில்லை என்று சட்டம் இயற்ற வேண்டும்.

திரைப்படங்களில் தொலைக்காட்சிகளில் வன்முறைக் காட்சிகள் இடம்பெறத் தடை விதிக்க வேண்டியது அரசின் தலையாய கடமை.

திருக்குறள் கூறும் நெறிகளை, அவற்றை விளக்கும் கதைகளைக் கூறும் நிகழ்ச்சிகள், கதைகளை உருவாக்கி, திரும்பத் திரும்ப அவற்றை ஒளிபரப்பினால், ஒழுக்க நெறியை மனித சமுதாயம் விரும்பி ஏற்கும்.

கொலை, களவு, சூது, மது, மங்கை போன்ற தீய ஒழுக்கங்கள் குடியைக் கெடுப்பன என்பதை உணர்ந்து செயற்படும் நாள் என்று வருமோ, அன்றுதான் நம் நாடு முழுச் சுதந்திரம் பெற்றுவிட்டது எனலாம்.

பெற்றோரின் அரவணைப்பில் வளர்ந்து, படித்து, ஆணுக்கு இணையாகப் பணியாற்றும் மகளிர்க்கு அவர்கள் பணியாற்றும் அலுவலகங்களில் ஒத்துழைப்பும் மனித நேய அணுகுமுறையும் மிக மிக இன்றியமையாதது.

"நல்லதோர் வீணை செய்தே அதை

நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?"

Dr.Anburaj said...

இந்து கோவில் அர்ச்சகர் கொலை : வங்கதேசத்தில்-கிழக்கு பாக்கிஸ்தானில் பயங்கரம்

வங்கதேசத்தில், கோவில் அர்ச்சகரை, மூன்று பயங்கரவாதிகள் வெட்டி கொலை செய்தனர். வங்கதேச தலைநகர் தாகா அருகே உள்ள ஜினைதா மாவட்டத்தில், கோவில் ஒன்றில் அர்ச்சகராக இருந்தவர் சைமானந்தா தாஸ், 45. இவர், நேற்று காலை பூஜை செய்வதற்காக, கோவிலுக்கு வந்து கொண்டு

இருந்தார், கோவில் அருகே வந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர், அவரை வழிமறித்தனர். கண் இமைக்கும் நேரத்தில், தாசை, மூன்று பேரும் சர

மாரியாக வெட்டி கொலை செய்தனர். பின், தாசின் உடலை, கோவில் வாசலில் போட்டுவிட்டு, தப்பிச் சென்று விட்டனர். இந்த கொலை தொடர்பாக, இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.வங்கதேசத்தில், சமீபகாலமாக,

இந்துக்களை குறிவைத்துஅரேபிய காடையா்கள் பயங்கரவாதிகள் தாக்கி வருகின்றனர்.

இந்த ஆண்டில் கொல்லப்பட்ட, இந்து மதத்தைச் சேர்ந்த மூன்றாவது நபர், தாஸ்.

தாசை கொலை செய்ததற்கு, எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

எனது கருத்து இந்து கோவில் பணியாளரைக் கொன்றது அரேபியமத வல்லாதிக்கஉணா்வை ஊட்டி பயங்கரவாதமாக வளா்ததுள்ள குரான்தான.