Followers

Monday, June 20, 2016

பிஜேபி வெற்றியின் ரகசியம் - யேல் பல்கலைக் கழகம் கண்டு பிடிப்பு!பிஜேபி வெற்றியின் ரகசியம் - யேல் பல்கலைக் கழகம் கண்டு பிடிப்பு!

Gareth Nellis, Michael Weaver, Steven Rosenzweig, இந்த மூன்று அரசியல் வல்லுனர்களுக்கும் யேல் பல்கலைக் கழகம் ஒரு வேலையைக் கொடுத்தது. 'மதக் கலவரம் இந்திய அரசியலின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறதா?' என்ற ரீதியில் ஆய்வு மேற் கொள்ள இம் மூவரையும் பணித்தது யேல் பல்கலைக் கழகம். தேர்தல் நேரங்களில் இந்தியாவில் நடந்த ஒவ்வொரு கலவரத்திலும் பெரும்பான்மை மக்களின் மனதில் 'நமக்கு முஸ்லிம்களிடமிருந்து ஆபத்து' என்ற செய்தியை திட்டமிட்டு விதைத்துள்ளனர். இந்த செய்தி ஒரு வித அச்ச உணர்வை இந்துக்களுக்கு ஊட்டியது. இதன் மூலம் இந்துக்களின் ஓட்டை ஒருமுகப்படுத்தி பிஜேபி தனது வெற்றியை மிக இலகுவாக பெற்றுக் கொண்டது. எங்கெல்லாம் கலவரம் நடந்ததோ அங்கெல்லாம் எந்த சிரமமும் இன்றி பிஜேபி வெற்றி வாகை சூடியதையும் காங்கிரஸ் தோல்வி அடைந்ததையும் இந்த மூவரின் அறிக்கையும் தெளிவுபடுத்துகிறது. இதனை எகனாமிக் டைம்ஸ் செய்தியாகவும் வெளியிட்டுள்ளது.

economictimes.indiatimes.com
05-12-2014

இன்று இந்துத்வாவாதிகள் தங்களை தேசப்பற்றுள்ளவர்களாகக் காட்டிக் கொள்கின்றனர். தேசப் பற்று உள்ள நபர்கள் செய்யும் செயல்களா இவை. அற்ப அரசியல் ஆதாயத்திற்காக சொந்த நாட்டு மக்களை இரு கூறாக பிரித்து அதன் மூலம் இன்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள இந்துத்வா வாதியினரின் இந்த செயல் சரிதானா என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும்.

இவர்கள் ஆட்சியைப் பிடித்தவுடன் இந்து மதம் மறுமலர்ச்சி கண்டு விட்டதா? ராமர் கோவில் கட்டப்பட்டதா? காஷ்மீரின் தனி மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டதா? பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டதா? வேலை வாய்ப்பு பெருகியதா? மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளதா? இது எதுவுமே நடை பெறவில்லை. இனியும் இவர்கள் ஆடசியில் நடைபெறாது.

மோடி ஆட்சியைப் பிடித்து விட்டால் உலகின் முக்கியத்துவம் உள்ள நாடாக இந்தியா மாறி விடும் என்று பொய் பிரசாரம் பண்ணப்பட்டது. சிறந்த நிர்வாகிகளான மன் மோகன் சிங், ப. சிதம்பரம், மணி சங்கர் ஐயர் போன்றவர்களின் வாதம் எடுபடாமல் மதவாதம் முன்னிறுத்தப்பட்டது. நாம் எவ்வளவு பெரிய தவறை செய்து இந்துத்வாக்களை ஆடசிக் கட்டிலில் அமர்த்தி விட்டோம் என்று சில வருடங்களிலேயே பெரும்பாலான இந்துக்கள் உணரத் தொடங்கி விடுவார்கள்.

Posted by சுவனப் பிரியன் at 5:41 AM
Labels: #அரசியல், #ஆர்எஸ்எஸ், #இந்தியா, #இந்துத்வா

1 comment:

Dr.Anburaj said...

இந்துத்வாக்களை ஆடசிக் கட்டிலில் அமர்த்தி விட்டோம் என்று சில வருடங்களிலேயே பெரும்பாலான இந்துக்கள் உணரத் தொடங்கி விடுவார்கள்.

முட்டாள்கள் ஆயிரம் சொல்லலாம்.உண்மை அது அல்ல.

ஊழலை அறுக வைத்து விட்டாா் தீர.நரேந்திரமோடி அவர்கள்.

மன்மோகன் சிங் சிதம்பரம் ஆட்சியில் ஊழல் லட்சக்கணக்கான கோடியாக இருந்ததை தாங்கள் மறந்து விட்டீர்கள்.மறந்ததுபோல் எழுதுகின்றீா்களா ?

இன்று சா்வதேச யோகா தினம்.உலகையே இந்தியாவின் பக்கம் நோக்க வைத்து விட்டாா் நமது பிரதமா் திரு.நரேந்திரமோடி அவர்கள்.

127 நாடுகள் இந்த நாளை கொண்டாடுகின்றாா்கள்.இஸ்ரவேல் நாட்டில் 2436 யோகா ஆசிாியா்கள் உள்ளாா்கள்.
கலவரத்தை உண்டாக்கி .... ஆட்சியைப்பிடிக்க வேண்டிய இழிந்த நிலையில் இந்துத்துவாவாதிகள் இல்லை. தகுதி அவரகளிடம் உள்ளது.மக்களின் கவனம் அவர்கள் பக்கம் திரும்பியுள்ளது.