

நாட்டுக்காக உயிரிழந்தவருக்கு கிடைத்த மரியாதை!
உபியில் உள்ளது ஃபெரோஜாபாத் மாவட்டம். இங்குள்ள நேக்ளா கேவல் கிராமத்தைச் சேர்ந்தவர் வீர் சிங். ராணுவத்தில் பணி புரிகிறார். சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் சுட்டதில் உயிரிழந்திருக்கிறார். அவரது குடும்பத்துக்கு பண உதவியும், அரசு மரியாதையும் செலுத்தப்பட்டது.
முடிவில் அவரது உடலை அடக்கம் செய்ய இந்துக்களின் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர். பிணத்தை சுடுகாட்டுக்கு கொண்டு வர அந்த கிராம மக்கள் ஒத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் இறந்து போன ஜவான் நாட் என்ற கீழ் சாதியை சேர்ந்தவராம். உயர்ந்த வகுப்பார் ஈமக் கிரியைகள் செய்யும் இடத்தில் ஒரு கீழ் சாதிக்காரரா என்று அந்த மக்கள் பொங்கினர். ஆஹா ... நாட்டக்காக உயிரிழந்தவருக்கு அந்த மக்கள் கொடுத்த மரியாதை மெய் சிலிர்க்க வைக்கிறது.
அதன் பிறகு மேலதிகாரிகள் சமரசம் பேசி வெறொரு இடத்தில் அந்த ராணுவ வீரரின் ஈமக் கிரியைகளை செய்து முடித்தனர்.
இந்துத்வா சித்தாந்தம் வளர வளர அது இந்து மதத்துக்கே கேடாக முடியும். இந்து மதத்தை அழிக்க வெளியிலிருந்து ஆட்கள் தேவையில்லை. மோடியும் அவரது பரிவாரங்களுமே அந்த காரியத்தை கன கச்சிதமாக செய்து முடித்து விடுவார்கள்.
http://www.indiatimes.com/news/india/upper-cast-villagers-delay-pompore-martyrs-funeral-because-he-was-from-a-lower-cast-where-does-this-madness-end-257398.html
1 comment:
இந்துத்வா சித்தாந்தம் வளர வளர அது இந்து மதத்துக்கே கேடாக முடியும். இந்து மதத்தை அழிக்க வெளியிலிருந்து ஆட்கள் தேவையில்லை. மோடியும் அவரது பரிவாரங்களுமே அந்த காரியத்தை கன கச்சிதமாக செய்து முடித்து விடுவார்கள்.
அரேபிய அடிமை என்ன சொல்வாா் .தவறாகத்தான் சொல்வாா்.
இந்துத்துவா இந்துக்களை சென்று முறையாக அடையவில்லை என்பதுதான் பிரச்சனை.
மோடியும் அவரது பரிவாரங்களுமே அந்த காரியத்தை கன கச்சிதமாக செய்து முடித்து விடுவார்கள்.முடிக்க வேண்டும்.யோகக் கலையை உலகம் அறியச் செய்ததில் வெற்றி பெற்ற திரு.நரேந்திரமோடி இந்துக்களுக்கு முறையாக சமய கல்வி கிடைக்க ஆவன செய்வாா்.
Post a Comment