



மாடு ஏற்றி வந்த முஸ்லிம்கள் நேற்று கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்!
ராஜஸ்தான் மாநிலம் சோட்டி ஸாத்ரி கிராமத்தில் 31-05-2016 நேற்றைய தினம் மாடு ஏற்றி வந்த லாரியை ஒரு வன்முறை கும்பல் வழி மறித்தது. லாரி ஓட்டுனரும் உடன் இருந்தவர்களும் முஸ்லிம்கள். உடனே அந்த இந்துத்வா வன்முறை கும்பல் அவர்களை கீழே இறக்கி பயங்கர ஆயுதங்களுடன் தாக்கத் தொடங்கினர். காவல் துறையினர் அந்த வன்முறைக் கும்பலை அடக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர். இந்த கொடுஞ் செயலை அவர்களே புகைப்படங்களாக எடுத்து தங்களுக்குள் ஷேர் செய்து மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கினறனர்.
அதில் ஒருவன் 'அவர்கள் இன்னும் இறக்கவில்லை. ஆனால் நாங்கள் அடித்த அடியில் அவர்கள் எழுந்து நடமாட பல நாட்கள் பிடிக்கும் ' என்று பெருமையாக கூறுகிறான். உழைத்து சம்பாரிக்கும் ஒரு குடும்பத்தவரை இவ்வாறு அடிப்பதுதான் இந்து பக்தியா? இந்து மதம் இதைத்தான் போதிக்கிறதா?
மாடு புனிதம் என்பது இந்துக்களின் ஒரு பிரிவினருக்குத்தான். 80 சதமான இந்துக்கள் மாட்டுக் கறி சாப்பிடுபவர்கள். உனக்கு புனிதம் என்றால் உன் அளவில் வைத்துக் கொள். உழைத்து சம்பாரிக்கும் ஒருவனை இவ்வாறு உயிர் போக அடித்துள்ளீர்களே! நீங்கள் மனிதர்களா? மிருகங்களா?
அநியாயத்திற்கும் ஒரு அளவு உண்டு. எல்லை மீறி சென்றால் இந்திய முஸ்லிம்கள் அனைவரும் ஆயுதம் தூக்க ஆரம்பித்தால் இந்திய தேசமே ரத்த களரியாகி விடும். இத்தனை நடந்த பிறகும் முஸ்லிம்கள் பொறுமை காக்கிறார்கள். பொறுமைக்கும் ஒரு அளவுண்டு என்பதை இந்துத்வாவதிகளுக்கும் ஆட்சியில் அமர்ந்திருக்கும் பிஜேபியினருக்கும் சொல்லிக் கொள்கிறோம்.
தகவல் உதவி
மில்லிகெஜட்
01-06-2016
No comments:
Post a Comment