Followers

Thursday, June 16, 2016

100 / 100 மதிப்பெண் போட்ட மாணவன்:



குஜராத் மாநிலத்தில் பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவன், தனது விடைத்தாளை தானே திருத்தி, நூற்றுக்கு நூறு மதிப்பெண் களைப் போட்டுக் கொண்டு அதனை, தேர்வு கண்காணிப் பாளரிடம் கொடுத்துள்ளார்.

ஹர்ஷத் சர்வய்யா என்ற மாணவன் பிளஸ் 2 தேர்வில், பொரு ளியல் பாடத்துக்கான தேர்வை எழுதினார். தேர்வு எழுதும் அறை யிலேயே, தனது விடைத்தாளை சிவப்பு நிற மையால் திருத்தி, அதற்கு மதிப்பெண்களைப் போட்டுக் கொண்டார். பின்னர் அதனை, தேர்வு கண்காணிப் பாளரிடம் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, குஜராத் மேல்நிலை மற்றும் உயர்நிலைக் கல்வி வாரியம், காவல் துறையில் புகார் அளித்துள்ளது. இதற்கு முன் இதுபோன்று நிகழ்ந்ததில்லை என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கல்வித் துறை செயலாளர் (தேர்வு) ஜி.டி. படேல் கூறியதாவது:

அந்த மாணவன் தனது புவியியல் மற்றும் பொருளியல் ஆகிய இரண்டு பாடங்களுக்கான தேர்வில் தனக்குத்தானே மதிப்பெண் போட்டுக் கொண் டுள்ளார். புவியியல் தேர்வுத் தாளை திருத்திய ஆசிரியைகள் முறைகேட்டைக் கண்டுபிடித்து விட்டனர். அதில் அவர் 34 மதிப் பெண்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஆனால், பொருளியல் தாளை திருத்திய ஆசிரியர்கள் இந்த தவறைக் கண்டுபிடிக்கவில்லை. சந்தேகம் வராமல் இருக்க அந்த மாணவன் முதல் பக்கத்தில் ஒட்டுமொத்த மதிப்பெண் கூட்டலை எழுதவில்லை. ஆசிரியர்கள் மதிப்பெண்களைக் கூட்டி, நூற்றுக்கு நூறு என முதல்பக்கத்தில் எழுதி விட்டனர். தனித்தனியாக ஏழு ஆசிரியர்களும் ஒவ்வொரு விடையையும் மதிப்பீடு செய்து, கையொப்பமிட்டிருந்தால் அதனைக் கண்டறிந்திருக்க முடியும். இது தீவிரமான தவறு. சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த மாணவன் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரு தேர்வுகளை எழுத முடியாமல் அவர் நீக்கப்படுவார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஹர்ஷத்தின் தேர்வு முடிவுகள் தயார் செய்யப்பட்டுவிட்டது. ஆனால், கல்வி வாரியத்தின் கணினி மென்பொருளில் தேர்வு முடிவுகளைப் பார்த்தபோது மதிப்பெண்களில் அதிக ஏற்றத்தாழ்வு தெரியவந்தது. அப்போது அவர் மாட்டிக் கொண்டார்.

பொருளியலில் சதமடித்த அவர், குஜராத்தி (13), ஆங்கிலம் (12), சம்ஸ்கிருதம் (4), சமூகவியல் (20), உளவியல் (5), புவியியல் (35) என மிகக் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்!
16-06-2016

நரேந்திர மோடியிடம் பாடம் பெற்றிருப்பானோ இந்த மாணவன்!

No comments: