

குஜராத்தில் உள்ள அஹமதாபாத்தில் கல்லூரியில் படித்து வருபவர் ஜர்னா ஜோஸி. பிபிஏ ஸ்டூடண்ட். மோர்பியில் இருக்கும் தனது உறவினர் வீட்டுக்கு சில நாள் முன்பு வந்துள்ளார். அங்குள்ள செராமைக் தொழிற்சாலையில் சிறுவர்களும் சிறுமிகளும் அதிகம் குறைந்த ஊதியத்துக்கு வேலை வாங்கப்படுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனை வெளி உலகுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக அந்த தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்தார். வேலை செய்து கொண்டிருக்கும் போதே அங்குள்ள சட்ட விரோத செயல்களை புகைப்படமாக்கினார். பிறகு அதனை வெளி உலகுக்கும் கொண்டு வந்தார்.
சும்மா இருக்குமா அதிகார வர்க்கம். இரு சக்கர வாகனத்தில் வந்த இரு குண்டர்கள் அவரது பெயரை விசாரித்துக் கொண்டு சராமாரியாக தாக்க ஆரம்பித்தனர். அவருக்கு பயங்கர காயங்களை ஏற்படுத்தி விட்டு தப்பி விட்டனர். தற்போhது ஜர்னா ஜோஸி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குஜராத் ஒளிர்கிறது என்று மோடி கூறுவது இதைத்தானா?
தகவல் உதவி
இந்தியா டைம்ஸ்
07-06-2016
http://www.indiatimes.com/news/india/gujarat-college-girl-who-rescued-111-child-workers-through-a-covert-operation-attacked-by-unidentified-assailants-256323.html
No comments:
Post a Comment