Followers

Monday, June 20, 2016

பிஜே அவர்கள் நலமுடன் வீடு திரும்பியது கண்டு மகிழ்ச்சி!

தர்ஹா, சந்தனக் கூடு, தொப்பி, சாமிபிராணி போடுதல், முஹர்ரம் 10 அன்று நெஞ்சில் அடித்துக் கொள்ளுதல் இவை எல்லாம்தான் இஸ்லாம் என்று பெரும்பாலான இந்து சகோதரர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தின் பட்டி தொட்டி எல்லாம் உண்மையான இஸ்லாத்தை பிஜே அவர்கள் எடுத்துச் சென்றார்கள். அதன் தாக்கம் இன்று இந்து பெருங்குடி மக்கள் குர்ஆன் மொழி பெயர்ப்பை படிக்க ஆரம்பித்துள்ளார்கள். சத்தியத்தை உணர ஆரம்பித்துள்ளார்கள்.

நம் அனைவரின் பிரார்த்தனைகளையும் ஏற்றுக் கொண்ட இறைவன் பிஜே அவர்களை நலமுடன் வீட்டுக்கு அனுப்பியுள்ளான். இவரின் தேவை தமிழகத்துக்கு இன்னும் இருக்கிறது. ஏகத்துவ பிரசாரத்தை மேலும் முடுக்கி விட இறைவன் பிஜே அவர்ககளுக்கு நீண்ட ஆயுளையும் சரீர சுகத்தையும் கொடுத்தருள்வானாக!

15 comments:

Dr.Anburaj said...

இவன் ஒரு முரட்டு அரேபியன். மூா்க்கன்.
ஹஸ்ரத் இப்ராஹீம் நபிக்கு பி.ஜே செய்த அவமரியாதை
25 February 2015 23:21

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 336 இல் நான் நோயாளி எனக் கூறினார் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

இப்ராஹீம் நபி அவர்கள் ஊர் மக்களெல்லாம் திருவிழாவைக் கொண்டாட வெளியேறிய பின் சிலைகளைத் தகர்ப்பதற்காக தாம் நோயாளி என்று கூறி திருவிழாவுக்குச் செல்வதை தவிர்த்துக் கொண்டார்கள் (37:89)

இது போல் ஒரு கொள்கையை நிலைநாட்டுவதற்காக நல்ல விளைவை ஏற்படுத்துவதற்காக கூறப்படும் பொய் குற்றமாகாது என்பதை இதிலிருந்து அறியலாம் என்று எழுதியுள்ளார். மேலும் சத்தியப் பிரச்சாரத்தின் போது இது போன்ற வழிமுறைகளை கையாளுவது தடுக்கப்பட்டதல்ல என்றும் கூறியுள்ளார். (திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 432)

நம் விளக்கம்:

இந்த வசனத்தில் 37:90 இப்ராஹீம் நபி பொய் கூறினார் என்பதை திருக்குர்ஆன் அல்லது நம்பத்தகுந்த நபிமொழியில் இருந்து பி.ஜே நிரூபிக்க முடியுமா?

அல்லாஹ்வும் ரஸுலும் கூறாத ஒன்றை பி.ஜே இட்டுக்கட்டி கூறியுள்ளார் என்பதை அவரால் மறுக்க முடியுமா?

நான் நோயாளி என்று ஒரு நபி கூறுகின்ற போது அவர் நோயாளி இல்லை என்று கூறுகின்ற அதிகாரம் பி.ஜே க்கு எப்படி வந்தது?

இப்ராஹீம் நபி ஒரு உண்மையான நபியாக இருந்தார் என்று அல்லாஹ் கூறுகிறான். (19:42) ஆனால் பி.ஜே இப்ராஹீம் நபி பொய் கூறினார் என்று கூறுகின்றார். அல்லாஹ்வின் வார்த்தையை மறுக்கின்ற பி.ஜே தவ்ஹீதுவாதியா?

ஒரு நபி பொய் சொல்லமாட்டார்: பொய் சொல்லக் கூடியவர் நபியாக இருக்கமாட்டார் என்ற ஒரு நபியைப் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாதவர்களை எவ்வாறு அழைப்பது.?

இப்ராஹீம் நபியின் இந்த சம்பவத்திலிருந்து ஒரு கொள்கையை நிலைநாட்ட பொய் கூறலாம் என்று பி.ஜே கூறுகிறார். இதிலிருந்து தவ்ஹீது ஜமாஅத்தின் கொள்கைகள் பொய்யினால் நிலைநாட்டப்பட்டுள்ளன என்பது நிரூபணமாகவில்லையா?

நல்ல விளைவை ஏற்படுத்துவதற்கு பொய் சொல்லலாம் என்று கூறுகிறார். ஆனால் திருக்குர்ஆனோ பொய்யர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக(3:62) என்றும் ஒவ்வொரு பொய்யரின் மீதும் சைத்தான் இறங்குகின்றனர் (26:223) என்றும் கூறுகிறது. இப்படிப்பட்ட நல்ல விளைவை (!) ஏற்படுத்தும் எத்தனை பொய்களை பிறரை ஏமாற்ற பி.ஜே கூறினாரோ! அல்லாஹ்வே நன்கறிவான்.

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் இல், 432 இப்ராஹீம் நபி பொய் சொன்னது ஏன்? எனும் தலைப்பில் இவ்வாறு எழுதியுள்ளார்:

திருக்குர்ஆன் 21:63 இல், இப்ராஹீமே, நீர் தாம் எங்கள் கடவுள்களை இவ்வாறு செய்தீரா? என்று கேட்டனர். இல்லை அவற்றில் பெரிய சிலை தான் செய்தது என்று தமிழாக்கம் செய்துவிட்டு விளக்க அட்டவணையில் பெரிய சிலைதான் உடைத்தது என்று கூறினார்கள்... ஆனால் அவர் கூறியது உண்மையல்ல.

நம் விளக்கம். பி.ஜெக்கு ஒரு நபியின் இலக்கணமும் தெரியவில்லை. பொய்யின் இலக்கணமும் தெரியவில்லை. ஒரு கூற்று பொய் என்பதற்கு நிபந்தனை, அது பிறரை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லாதது சொல்லப்பட்டிருக்க வேண்டும், சிலை உடைப்பு விசயத்தில் ஹஸ்ரத் இப்ராஹீம் (அலை) அவர்கள் தம்மை ஏமாற்றுவதற்காக அவர்களது சமுதாயத்தினர் துளியும் கருதவில்லை. காரணம் இச்செயலை செய்தவர் ஒருவர் உண்டு, யார் என்று பெரிய சிலையிடம் கேளுங்கள் என்று கூறினார். எனவே அவர்கள் வெட்கத்தால் தலைகுனிந்தவர்களாக, திரும்பிச் சென்றதாக அடுத்து வரும் வசனங்கள் கூறுகிறது. (21:65,66) எனவே ஹஸ்ரத் இப்ராஹீம் (அலை) கூறியது பொய் அல்ல. alim.org இல் மாலிக் அவர்கள் திருக்குர்ஆன் ஆங்கில மொழிபெயர்ப்பில் இந்த வசனத்தை இவ்வாறு மொழி பெயர்த்துள்ளார். He replied, "Surely someone has done it; the chief of them, that is! Ask them, if they can speak!" மேல் உள்ள லிங்கை கிளிக் செய்யவும். ஆனால் சிலை வணங்கிகளாக இருந்த அந்த சமுதாயத்தினர் சுமத்தாத குற்றச் சாட்டை பி.ஜே ஹஸ்ரத் இப்ராஹீம் (அலை) மீது சுமத்துகின்றார் இல்லை என்று பொய் கூறியதுடன் பெரிய சிலை மீது அக்குற்றத்தைப் போட்டதாக எழுதியுள்ளார். இதனை நியாயப்படுத்த திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 432 இல் அவர் கூறுவதாவது, சொல்பவருக்கும் பொய் சொல்கிறோம் என்று தெரிகிறது. கேட்பவருக்கும் வேறு ஒரு அர்த்தத்தில் சொல்லப்படுகின்ற பொய் என்று தெரிகிறது அப்படியிருந்தால் இது பொய் வடிவில் அமைந்த மெய் என்றுதான் கூற வேண்டும் என்று பி.ஜே எழுதுகிறார்.

அதாவது இப்ராஹீம் நபிக்கும், அந்த மக்களுக்கும் அது பொய் என்று தெரிகிறதாம். இப்படியிருந்தால் அது பொய் வடிவில் அமைந்த மெய்தான் என்கிறார். பி.ஜே.

Dr.Anburaj said...

நான் கேட்கிறேன்: இன்று ஏதோ சில அமைப்புகள் செய்கின்ற தீவிரவாத செயல்களுக்கு, ஊடகங்கள் இஸ்லாமிய தீவிரவாதம் என்றும் முஸ்லிம் தீவிரவாதி என்றும் கூறுகின்றன. இதனை பி.ஜே மேலே சொன்ன அளவுகோலின் அடிப்படையில், முஸ்லிம் தீவிரவாதி, இஸ்லாமிய தீவிரவாதம் என்பதை பொய். பொய் வடிவில் அமைந்த மெய் என்று ஏற்றுக் கொள்வார் போலும். உண்மையை வேறு வடிவில் கூற வேண்டுமே ஒழிய பொய்யை எந்த வடிவில் யார் கூறினாலும் அது பொய் தான். மெய்யாகாது. எனவே பி.ஜே எதிர்காலத்தில், பொய்க்கு வரிந்து கட்டிக் கொண்டு வக்காலத்து வாங்குவதை விட்டு விட வேண்டும். என்பதுதான் நம் வேண்டுகோள்.

Dr.Anburaj said...

ஈமான் கொள்ள வேண்டியவற்றுள் ஓர் அம்சம் மலக்குகள் மீது ஈமான் கொள்வதாகும். மலக்குகளைப்பற்றி பி.ஜே தன் திருக்குர்ஆன் விளக்கம் எனும் நூலில் பில்லி சூனியம் என்ற தலைப்பில் இவ்வாறு எழுதுகிறார்:மனிதனின் தகுதியைப்பற்றி முன்பே விமர்சனம் செய்து அந்த விமர்சனம் தவறு என்று இறைவன் விளக்கிய பிறகு தவறு என்று ஒப்புக் கொண்டவர்கள் வானவர்கள்.இத்தகைய இயல்பு படைத்த வானவர்கள் இன்னொரு முறை எப்படி இறைவனிடம் ஆட்சேபனை செய்திருப்பார்கள்? மலக்குகள் ஆரம்பத்தில் ஆட்சேபனை செய்தபோது அவர்களுடன் செய்த்தான் இருந்தான்.மேற்கண்டவாறு ஆட்சேபனை செய்யுமாறு அவர்களை அவன் தூண்டி விட்டிருக்க முடியும்?செய்த்தான் அவர்களை விட்டும் வெளியேற்றப்பட்ட பிறகு முதல் ஆட்சேபனைக்காக ஏற்கனவே சூடுபட்டிருந்த மலக்குகள் எப்படி மறுபடியும் ஆட்சேபனை செய்திருப்பார்கள்?
நம் விளக்கம்:
சொர்க்கத்தில் மலக்குகளுடன் சைத்தானும் இருந்தால் ஆதமின் படைப்பு பற்றி ஆட்சேபனை செய்யுமாறு அவர்களை அவன் தூண்டி விட்டிருக்க முடியும் – என்று பி.ஜே எழுதுகிறார்.
இந்த அபத்தமான கருத்துக்கு பி,ஜே.
1. திருக்குர்ஆன் மற்றும் நபிமொழி ஆதாரம் தரமுடியுமா?
2. அல்லாஹ் அவர்களுக்கு (மலக்குகளுக்கு) எதைக் கட்டளை இடுகின்றானோ அதற்கு அவர்கள் மாறு செய்யமாட்டார்கள். (திருக்குர்ஆன் 66:6) என்ற இறைவசனத்திற்கு மாற்றமாக சைத்தானின் தூண்டுதலுக்கு இரையாகி மலக்குகள் ஆட்சேபனை செய்து சூடுபட்டார்கள் என்று பி.ஜே யினால் எப்படி என்ன முடிகிறது?
இரண்டாவதாக கலைச் சொற்கள் (அரபி) எனும் தலைப்பில் இப்லீஸ் எனும் சிறு தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:
முதல் மனிதர் ஆதம் படைக்கப்படுவதற்கு முன் நல்லோரில் ஒருவனாக இருந்தால் இப்லீஸ்
நம் விளக்கம்:
இவருடைய இக்கூற்றுக்கு, திருக்குர்ஆன், நபிமொழி ஆதாரங்களை இவர் காட்ட முடியுமா? அவன் (ஏற்கனவே) நிராகரிப்பவர்களைச் சேர்ந்தவனாக இருந்தான். (2:35) என்று திருக்குர்ஆன் கூறுகிறது. எனவே இப்லீஸ் நல்லவனாக இருந்தால் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அவன் நிராகரிப்பவனாகவே இருந்தான் என்றும் இவ்வசனம் கூறுகிறது.
மூன்றாவதாக வானவர்கள் – மலக்குகள் நம்புதல் எனும் தலைப்பில் வானவர்கள் நரகின் காவலர்கள் எனும் சிறு தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:
வானவர்கள் சொர்க்க வாசிகளுக்குப் பணிவிடை செய்வார்கள். – 13:23, 15:46, 21:103, 41:31
நம் விளக்கம்:பி.ஜே குறிப்பிட்டுள்ள திருக்குர்ஆன் வசனங்களை நாம் பார்க்கின்ற போது மலக்குகள் பணிவிடை செய்தார்கள் என்று எங்கும் வரவில்லை. மாறாக, அவர்கள் சொர்க்கத்தில் நுழைந்து சுவர்க்கவாசிகளுக்கு ஸலாம் ச்கூருவார்கள் என்றும் சொர்க்கவாசிகளுக்கு கிடைக்கக்கூடிய அருட்கொடைகளை எடுத்துக்கூறுவார்கள் என்றுமே வருகிறது. எனவே பி.ஜே கூறியுள்ள மலக்குகள் பணிவிடை செய்வார்கள் என்பது தவறான கருத்தாகும்.நான்காவதாக, மரணத்தின் போது ரூஹைக் கைப்பற்றும் மலக்குகளை மலைக்குள் மௌத் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
பி.ஜே சுயமாக தரும் விளக்கத்தின் அடிப்படையில், ஈஸா நபி இறந்தவர்களுக்கு உயிர் கொடுத்தார் என்றால், மலைக்குள் மௌத்தால் கைப்பற்றப்பட்ட உயிர்களைத் திரும்ப அவர்களின் உடலில் புகுத்தும் மலக்கின் பெயர் என்ன? அந்த மலைக்கு அப்படி ஒரு செயலைச் செய்வார் என்பதற்கு திருக்குர்ஆன் மற்றும் நபிமொழி ஆதாரம் உண்டா?
இவ்வுலகில் இறைவனை காணமுடியும்!
25 February 2015 23:16

Dr.Anburaj said...

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 41-இல் இறந்த பின்னர் உயிருடன் இருப்போர் எனும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

ஈஸா நபியவர்கள் இவ்வுலகில் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார்கள்.

நம் விளக்கம்:

பி.ஜே யின் திருமறையின் தோற்றுவாய் எனும் நூலிலும் அந்த அற்புதங்களைப் பட்டியல் போட்டுக் காட்டியுள்ளார்.

1. தந்தையின்றி பிறந்தது.

2. தொட்டிலில் பேசியது.

3. பறவைகளைப் படைத்தது.

4. இறந்தவரை உயிர்ப்பித்தது.

5. பிறவிக் குருட்டையும்

6. குஷ்டத்தையும் நீக்கியது.

இக்கருத்துகள் திருக்குர்ஆனின் 5:110, 3:46, 3:47, 3:49 ஆகிய வசனங்களில் வருகின்றன.

படைத்தல், உயிர் கொடுத்தல் என்று இறைவனுக்கு மட்டும் உரிய செயல்கள் ஈஸா நபிக்கும் வருகிறது. அதற்கு பொருள் கொடுக்கும் போது கருத்தில் கொள்ள வேண்டியவற்றை பி.ஜே போன்றோர் கருத்தில் கொள்ளவில்லை.

ஒரு சொல்லை அல்லாஹ்வுக்கு பயன்படுத்தும் போது அவனது தகுதிக்கும் அந்தஸ்துக்கும் ஏற்றவாறு பொருள் கொடுக்க வேண்டும். அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கு அச்சொல்லைப் பயன்படுத்தும் போது இறைவனின் தகுதியைக் குறைத்து விடாதபடியோ நபியின் தகுதியை அளவுக்கு மீறி உயர்த்தி விடாதபடியோ பொருள் கொடுக்க வேண்டும் என்ற சாதாரணமான உண்மையைக் கூட பி.ஜே உணரவில்லை. இதனால் அவர் அல்லாஹ்வின் தகுதிக்கு ஈஸா நபியின் தகுதியை உயத்தி விட்டார். எப்படி,

மக்களே உங்களிடம் கூறப்படுகின்ற உவமையைக் கவனமாகக் கேளுங்கள். நீங்கள் அல்லாஹ்வையன்றி எவர்களை அழைக்கின்றீர்களோ அவர்களால் ஒரு ஈயைக் கூடப் படைக்க முடியாது. அதற்காக அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தாலும் சரியே, இது மட்டுமின்றி, ஓர் ஈ அவர்களிடமிருந்து ஒரு பொருளைப் பறித்துச் சென்றால், அவர்களால் அதனிடமிருந்து அதனை(க்கூட) விடுவிக்க முடியாது. அழைப்போரும் அழைக்கப்படுவோரும் மிகப் பலவீனமானவர்களேயாவர்.

அவர்கள் அல்லாஹ்வை (அவனது பண்புகளை) கண்ணியப்படுத்த வேண்டியவாறு கண்ணியப்படுத்தவில்லை. நிச்சயமாக அல்லாஹ் மிக்க வல்லமையுள்ளவனும் மிகைத்தவனும் ஆவான். (திருக்குர்ஆன் 22: 74-75) பி.ஜே யின் தமிழாக்கம்.

ஒருவரை அழைத்து பிராத்தனை செய்ய வேண்டுமானால் அதற்குரிய ஒரு தகுதியை இவ்வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். படைப்பாற்றல் எவனிடம் உள்ளதோ அவன் மட்டுமே பிராத்தனை செய்யப்பட தகுதியுடையவன், இறைவனை விட்டு விட்டு பிராத்திக்கப் படுபவர்கள் நபிமார்களாயினும், இறைநேசர்களாயினும் அவர்கள் எவருமே ஓர் ஈயைக் கூட படைத்ததில்லை. படைக்க இயலாது. எனவே, அல்லாஹ் பறவைகளைப் படைத்ததைப் போன்று ஈஸா நபி பறவையைப் படைக்கவில்லை என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் அவரிடம் பறவையைப் படைக்கும் ஆற்றல் உள்ளதால் அவரிடம் பிராத்தனை செய்யலாம் என்று ஏற்க வேண்டும். பி.ஜே எதனை ஏற்கப் போகிறார்?

22:75 - இல் அல்லாஹ் கூறுகின்றான். அவர்கள் அல்லாஹ்வை (அவனது பண்புகளை) கண்ணியப்படுத்த வேண்டியவாறு கண்ணியப்படுத்தவில்லை. அதாவது ஈஸா நபிக்கும் அல்லாஹ்வைப் போல் படைப்பாற்றல் இருக்கின்றது என்று நம்புவதன் மூலம் அல்லாஹ்வின் கண்ணியத்தை ஈஸா நபிக்கு கொடுத்து அல்லாஹ்வின் கண்ணியத்தை குறைத்து விட்டார்கள்.

இதிலிருந்து நாம் தெரிவது என்னவென்றால், படைத்தல் பண்பு அல்லாஹ்வுக்கு வரும் போது அவனுடைய கண்ணியத்துக்கும் தகுதிக்கும் ஏற்ப பொருள் கொடுக்க வேண்டும். அப்பண்பு ஒரு நபிக்கு வரும் போது ஒரு மனித நபி என்ற அளவில் களிமண் போன்ற மனிதர்களை பச்சை நிறப் பறவைகள் போன்று சொர்க்கத்தில் பறந்து திரிபவர்களாக மாற்றுபவர் என்று நம்பவேண்டும்.

Dr.Anburaj said...

இதிலிருந்து நாம் தெரிவது என்னவென்றால், படைத்தல் பண்பு அல்லாஹ்வுக்கு வரும் போது அவனுடைய கண்ணியத்துக்கும் தகுதிக்கும் ஏற்ப பொருள் கொடுக்க வேண்டும். அப்பண்பு ஒரு நபிக்கு வரும் போது ஒரு மனித நபி என்ற அளவில் களிமண் போன்ற மனிதர்களை பச்சை நிறப் பறவைகள் போன்று சொர்க்கத்தில் பறந்து திரிபவர்களாக மாற்றுபவர் என்று நம்பவேண்டும்.

அடுத்து திருக்குர்ஆன் 16:20-21 வது வசனத்தில் அவர்கள் அல்லாஹ்வையன்றி எவர்களை அழைக்கின்றார்களோ அவர்களால் (பொய்க்கடவுள்களால்) எதனையும் படைக்க முடியாது. மேலும் அவர்களோ (இறைவனால்) படைக்கப்பட்டவர்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். இன்று கிறித்துவ மக்களால் கடவுள் என்று அழைக்கப்படும் ஈஸா நபி எதனையும் படைக்க முடியாது என்று கூறும்போது அவர் பறவையைப் படைத்தார் என்று நம்புவது சரியா?

அப்படி நம்பினால், ஈஸா நபி இறைவனால் படைக்கப்பட்டவர் என்றால் அவரால் பறவையை படைக்க முடியாது என்று நம்பவேண்டும். பறவையை படைத்தார் எனில் இறைவனால் படைக்கப்பட்டவர் அல்லர் என்று நம்ப வேண்டும். பி.ஜே எதனை நம்ப போகிறார்?

(பொய்க்) கடவுளர் எதனையும் படைத்ததில்லை. அவர்களோ படைக்கப் படுகின்றனர். (திருக்குர்ஆன் 16:17 ). பி.ஜே யின் தமிழாக்கம்.

இவ்வசனத்தில் அல்லாஹ்வால் படைக்கப்பட்டவர்கள் எதனையும் படைக்க முடியாது என்ற கருத்து கூறப்பட்டுள்ளது.

இது அல்லாஹ்வின் படைப்பாகும். எனவே, நீங்கள் அவனையன்றி மற்றவர்கள் எதனைப் படைத்துள்ளனர் என்பதை எனக்குக் காட்டுங்கள். (திருக்குர்ஆன் 31:12)

(பொய்த் தெய்வங்கள்) அவை பூமியில் படைத்திருப்பதை நீங்கள் எனக்குக் காட்டுங்கள். (35:40; 46:5 )

அல்லாஹ்தான் அனைத்தையும் படைத்தவன். வேறுயாரும் எதனையும் படைத்ததில்லை. என்றால், ஈஸா நபி பறவையைப் படைத்திருக்கிறார் என்று நம்புபவர்கள் அல்லாஹ்விடம் ஈஸா நபி படைத்த பறவையைக் கொண்டு காட்டுவார்களா?

முதன் முறையாகப் படைத்து அதனையும் திரும்பவும் செய்கின்ற எவராவது இணை வைப்பவர்களுள் இருக்கின்றனரா? முதன் முறையாகப் படைத்து அதனைத் திரும்பவும் செய்கின்றவன் அல்லாஹ் (மட்டும்) தான் (10:35 )

எதோ ஒரு பறவையை முதலில் படைத்தவர் ஈஸா நபி தான் என்று இவர்கள் ஈஸா நபியை இறைவன் முன் நிறுத்தப் போகிறார்களா?

அவன் படைத்ததைப் போன்று அவை (பொய்க் கடவுள்கள்) படைத்ததன் காரணமாகவா அவற்றை அவர்கள் அல்லாஹ்வுக்கு இணையாக ஆக்கிக் கொண்டனர்? எனவே (தான் இரு) படைப்புகளும் அவர்களுக்கு ஒன்று போல் தெரிகிறதோ? (திருக்குர்ஆன் 13:17)

ஈஸா நபி பறவையைப் படைத்தார் என்று நம்பும் பி.ஜே ஈஸா நபியை அல்லாஹ்வுக்கு இணையாக ஆக்கிக் கொள்கிறார். மேலும் ஈஸா நபி படைத்த பறவையையும் அல்லாஹ் படைத்த பறவைகளும் ஒன்று போல் அவர்களுக்குத் தெரிகிறது என்று இந்த வசனத்தின் மூலம் விளங்கிக் கொள்கிறோம்.

அல்லாஹ்வே உங்களைப் படைத்தவன். பின்னர் அவனே உங்களுக்கு உணவு அளித்தான். பின்னர் அவன் உங்களை மரணிக்கச் செய்தான். பின்னர் அவன் உங்களை உயிர் பெறச் செய்வான். உங்களால் இறைவனுக்கு இணையாக்கப்பட்டவர்களுள் எவரேனும் இச்செயல்களில் எதையாவது செய்கின்றனரா? அவன் தூயவனும் மேலும் அவர்கள் (அவனுக்கு) ஏற்படுத்தும் இணைகளை விட்டும் அவன் மிக்க மேலானவன். (திருக்குர்ஆன் 30:41)

ஈஸா நபி பறவையைப் படைத்துள்ளார். இறந்தவர்களுக்கு உயிர் கொடுத்துள்ளார். எனவே இரண்டு செயல்களைச் செய்துள்ளார் என்று நம்பும் பி.ஜே இறைவனின் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? அப்படி நம்பினால் அவர் இறைவனுக்கு இணை வைத்தவரும் அல்லாஹ்வின் தூய்மைக்கும் அல்லாஹ்வின் மேன்மைத் தன்மைக்கும் களங்கம் கற்பித்தவரும் ஆவார்.

அப்படி என்றால், ஈஸா நபி களி மண்ணால் பறவையைப் படைத்துள்ளார் என்று திருக்குர்ஆன் 2 இடங்களில் கூறுகிறதே? என்ற கேள்வி எழும்.

அல்லாஹ் உலகில் உள்ள பறவைகள் முதல் ஈஸா நபி போன்ற மனிதர்கள் வரை அனைத்துப் படைப்புகளையும் படைத்தது போன்று ஈஸா நபி படைக்கவில்லை. மாறாக ஒரு மனித நபி களிமண் போன்ற மனிதர்களை மனிதனாக மாற்றி பிறகு அவனை மனிதப் புனிதனாக்கி ஆத்மீக வானில் பறந்து திரியும் பறவை போல் மாற்றினார் என்று பொருள்.

Dr.Anburaj said...

உயிர் கொடுத்தல்

அல்லாஹ் மட்டுமே இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கிறான். அவனைத் தவிர வேறு யாரும் இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்க முடியாது. இதுவே இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.

1. ஈஸா நபி இறந்தவர்க்கு உயிர் கொடுத்தார் என்று திருக்குர்ஆனில் வருகிறதே என்றால் இறந்தவர்கள் மீண்டும் இந்த உலகிற்கு வர முடியாது என்று ஏறக்குறைய 16 இடங்களில் வருகிறது. இதில் ஒன்று 23:100 வசனம். இந்த வசனத்தைப் பற்றி பி.ஜே திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 298 இல்.

உயிர்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை எனும் தலைப்பில் எழுதியுள்ளார். அதில், ஒருவர் மரணித்துவிட்டால் அவருக்கும் இந்த உலகத்திற்கும் இடையில் எந்த விதமான தொடர்பும் கிடையாது. அவர்களுக்குப் பின்னால் புலனுக்குத் தெரியாத மிகப் பெரிய திரை போடப்பட்டு விடுகிறது என்று இந்த வசனம் (திருக்குர்ஆன் 23:100) கூறுகிறது என்று எழுதியுள்ளார்.

பி.ஜே உண்மையில் இவ்வாறு நம்புகிறார் என்றால் ஈஸா நபி உயிர் பெறச் செய்த அந்த ரூஹ் அந்தத் திரையைத் தாண்டி எப்படி வந்தது?

மலக்குல் மவ்த் – ரூஹைப் பறித்துச் செல்வார். ஆனால் பறித்த உயிரை திரையைக் கிழித்துக் கொண்டு எந்த மலைக்கு அந்த ரூஹைக் கொண்டு வந்து அந்த சடலத்தில் புகுத்தினார்? மலக்குல் மவ்த் போன்று மலக்குல் ஹயாத் பற்றி திருக்குரானிலோ நபிமொழியிலோ இல்லையே ஏன்?

2. பேய் பிசாசு உண்டா எனும் தலைப்பில் பி.ஜே எழுதியுள்ள நூலில் இறந்து போன உயிர்கள் மீண்டும் இந்த உலகிற்கு வருவதில்லை என்பதற்கு பி.ஜே காட்டும் திருக்குர்ஆன், நபிமொழி ஆதாரங்கள் ஊருக்குத் தான் உபதேசமா? அந்நூலில் பி.ஜே எடுத்து வைக்கும் ஆதாரங்கள் ஈஸா நபி இறந்தவர்க்கு உயிர் கொடுக்கவில்லை என்பதற்குப் பொருந்தாதா?

3. திருக்குர்ஆன் 8:25 வசனத்தில், நபி (ஸல்) உயிர் கொடுப்பதற்காக உங்களை அழைக்கும் போது அவர்க்குப் பதிலளியுங்கள் என்று வருகிறதே, நபி (ஸல்) அவர்கள் இறந்தவர்க்கு உயிர் கொடுத்தார் என்று பி.ஜே ஏற்றுக் கொள்வாரா? ஈஸா நபியுடனும் நபி (ஸல்) அவர்களுடனும் உயிர் கொடுத்தல் எனும் ஒரே சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

4. என் இறைவன் உயிர் கொடுப்பவன். மரணிக்க செய்பவன் என்று இப்ராஹீம் நபி அவர்கள் கூறியபோது நானும் உயிர் கொடுப்பேன்: மரணிக்க செய்வேன் என்று அவன் (இறைமறுப்பாளன்) கூறினான் என்று வருகிறது. (திருக்குர்ஆன் 2:259)

இப்ராஹீம் நபியுடன் வாதிட்ட இறைமறுப்பாளனுக்கும் அல்லாஹ்வைப் போல் இறந்தவனுக்கு உயிர் கொடுக்கும் ஆற்றல் உள்ளது என்று பி.ஜே ஏற்றுக் கொள்வாரா?

5. தஜ்ஜால் இறந்தவரை உயிர்பிப்பான். ஆனால் மற்றொரு தடவை அவனால் இதைச் செய்ய முடியாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி விட்டனர் என்று பி.ஜே திருமறையின் தோற்றுவாய் எனும் நூலில் அவ்லியாக்களின் அற்புதங்கள் எனும் தலைப்பில் எழுதியுள்ளார்.

முழுக்க முழுக்க இறைத்தன்மை பெற்றவர்களாக மற்றவர்களை எண்ணுவது மாத்திரம் இணை வைத்தல் அன்று, மாறாக இறைவனது தன்மையில் ஏதேனும் ஒரு தன்மை இறைவனுக்கு இருப்பது போல மற்றவர்களுக்கும் இருப்பதாக எண்ணுவதும் இணை வைத்தலாகும். ஷிர்க்கின் இந்த இலக்கணத்தை பி.ஜே திருமறையின் தோற்றுவாய் எனும் நூலில் பரிந்துரையை வேண்டுவது குற்றமா எனும் தலைப்பில் எழுதியுள்ளார். இதன் அடிப்படையில் தஜ்ஜால் அல்லாஹ்வின் ஒரு பண்பாகிய உயிர் கொடுத்தல் எனும் பண்பை, ஒரே ஒரு முறை செய்ததாக பி.ஜே நம்புகிறார். இது இணை வைத்தல் இல்லையா? இணை வைத்தல் எனும் கொடிய விஷத்தை ஒருவன் ஒரே ஒரு முறை சாப்பிட்டால் அவன் சாக மாட்டான் என பி.ஜே நம்புகிறாரா?

Dr.Anburaj said...

6. பி.ஜே திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 24 இல் கொலையாளியைக் கண்டு பிடித்தல் எனும் தலைப்பில் 2:72 வசனத்திற்கு விளக்கமாக, மூஸா நபியவர்கள் இறந்தவனை மாட்டின் ஒரு பகுதியால் அடித்து அவனை உயிர் பெறச் செய்திருப்பதாக நம்புகிறார். ஆனால் மூஸா நபியின் மீது அவரது சமுதாயம் ஹரூன் நபியைக் கொன்றதாக பழி சுமத்திய போது மூஸா நபி, தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க மாட்டின் ஒரு பகுதியால் ஹாரூன் நபியின் உடலில் அடித்து உயிர் பெறச் செய்யவில்லையே ஏன்? (பி.ஜே திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 394 காண்க)

7. மேலே கூறியவற்றை தொகுத்துப் பார்க்கும் போது,

1) அல்லாஹ்வுக்கு மட்டுமே இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கும் ஆற்றல் உள்ளது. வேறு எவர்க்கும் இல்லை.

2) இறந்த உயிர்கள் மீண்டும் திரும்பி இந்த உலகத்திற்கு வராது என்ற கருத்தை நிரூபிக்கும் திருக்குர்ஆன், நபிமொழி சான்று பற்பல உள்ளன. இது ஒரு பக்கம், இன்னொரு பக்கம் ஈஸா நபி , நபி (ஸல்) மூஸா நபி, இறை மறுப்பாளன், தஜ்ஜால் ஆகியோர் இறந்தவருக்கு உயிர் கொடுத்துள்ளார் என்ற தவறான நம்பிக்கை காணப்படுகிறது. அப்படியெனில், திருக்குர்ஆனில் முரண்பட்ட கருத்துக்கள் உள்ளன என்று பி.ஜே நம்புகிறாரா?

8. அல்லாஹ் இறந்தவர்க்கு உயிர் கொடுத்து எழுப்புவது கியாமத் நாளில்தான், அதற்கு முன் உயிர் கொடுப்பதில்லை, ஆனால் ஈஸா நபி (அலை) உடனே உயிர் கொடுத்து எழுப்பியதாக பி.ஜே நம்புகிறார். அப்படி எனில் ஈஸா நபியை அவர் அல்லாஹ்வை விட அதிகமாக உயர்த்தியிருப்பதாக தெரிகிறது (நவூதுபில்லாஹ்)

9. திருக்குர்ஆனில் இரண்டு வகை வசனங்கள் உள்ளன. ஒன்று அடிப்படை வசனங்கள். இரண்டு உவமை வடிவிலான வசனங்கள்.

அல்லாஹ் ஒருவனே: அவனே அனைத்தையும் படைப்பவன்: அவன் அனைத்தையும் மரணிக்கச் செய்பவன்: அவனே இறந்தவர்களை உயிர்பிப்பவன், இவை திருக்குர்ஆனின் அடிப்படை வசனங்களாகும்.

ஈஸா நபி படைத்தார்; உயிர் கொடுத்தார்; குருடர்களை குணப்படுத்தினார்; தொழு நோயாளிகளை குணப்படுத்தினார் என்பவை உவமை வடிவிலானவை. இவற்றிற்கு, அடிப்படை வசனங்களுக்கு முரண்படாத வகையில் பொருள் கொடுக்க வேண்டும். உதாரணமாக, ஈஸா நபி இறந்த பிறகு மறுமையில் அவர்க்கு உயிர் கொடுத்து எழுப்புபவன் அல்லாஹ்வே, ஆனால் ஈஸா, நபி என்ற அடிப்படையில் அவரது சமுதாய மக்கள் ஆன்மீக மரணம் அடைந்து கிடந்த போது அம்மக்களுக்கு ஆத்மீக உயிர் கொடுத்து எழுப்பியவர் ஈஸா நபி என்று அதற்குப் பொருள் கொடுக்க வேண்டும். ஈமான் இல்லாதவர்கள் இறந்தவர்கள் ஆவர். அவர்களுக்கு ஈமானை கொடுப்பது உயிர் ஊட்டுவதாகும்.

இக்கருத்தை திருக்குர்ஆன் 6:123 வசனம் விளக்குகிறது. ஒருவன் (நிராகரிப்பினால்) மரணித்தவனாக இருந்த பிறகு (நேர்வழியின் மூலம்) அவனை நாம் உயிர்ப்பித்து அவனுக்கு (ஈமான் எனும்) ஒளியை நாம் கொடுத்து அதன் மூலம் மனிதர்களிடையே நடக்கிற அவன் (குப்ர் எனும்) இருள்களில் (சிக்கி) இருந்து அவற்றை விட்டும் வெளியேற முடியாதவனைப் போல் ஆவானா?

10. ஈஸா நபியின் சிறப்பு எதுவென்றால் அவர் உவமை வடிவில் தான் தூதுச் செய்தியை மக்களுக்கு ஊட்டினார். எனவே அவர் பற்றிய இந்த செய்திகளும் உவமை வடிவில் கூறப்பட்டுள்ளன.

Dr.Anburaj said...

1. அல்லாஹ்வுக்கும் உவமை கூறாதீர்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது ( )

இதற்கு பி.ஜே அல்லாஹ்வைப் பற்றி கூறுவதென்றால் வக்கீல், நீதிபதி, அதிகாரி என்றெல்லாம் உதாரணம் கூறுவதைத் தவிர்க்க வேண்டும். ஆல்லாஹ்வைப் போல் எதுவும் இல்லாததால் எதையும் உதாரணம் காட்டிப் பேசலாகாது என அல்லாஹ் சொல்லித் தருகிறான் என்று திருமறையின் தோற்றுவாய் எனும் நூலில், உதாரணங்கள் ஆதாரங்களாகுமா? எனும் தலைப்பில் எழுதியுள்ளார்.

அல்லாஹ் தனக்கு உவமை கூறாதீர்கள் எனக் கூறியது வக்கீல், நீதிபதி என்று கூறும் உவமைகள் அல்ல. ஈஸா நபி இறந்தவர்க்கு அல்லாஹ்வை போல் உயிர் கொடுத்தார் என்று கூறுவது தான் அல்லாஹ்வுக்கு, ஈஸா நபியை உவமை கூறுவதாகும். எனவே அவனைப் போல் எதுவுமில்லை. (திருக்குர்ஆன் 42:11) என்றும் அவனுக்கு நிகராக எவனுமில்லை (112:4) என்றும் திருக்குர்ஆன் கூறுவதால் ஈஸா நபி இறந்தவர்க்கு அல்லாஹ்வைப் போல் உயிர் கொடுத்தார் என்று கூறுவது அல்லாஹ்வுக்கு உவமை கூறுவதாகும். அதாவது ஈஸா நபி அல்லாஹ்வைப் போல அவனுக்கு நிகராக உள்ளார் என்று நம்புவதாகும்.

குருடர்களையும் நோயாளிகளையும் குணப்படுத்துதல்:

இவையும் உவமை வடிவில் கூறப்பட்டவையாகும். ஈஸா நபி புறக்கண் குருடர்களையும், உடல் நோயாளிகளையும் குணப்படுத்த வரவில்லை. அவர் அகக் குருடர்களையும் அறிவுக் குருடர்களையும் ஆத்மீக நோயாளிகளையுமே குணப்படுத்த வந்தார். உலகில் வந்த அனைத்து நபிமார்களும் இந்தப் பணியைச் செய்யத்தான் வந்தனர். திருக்குர்ஆனில் புறக்கண் குருடர்களைப் பற்றி பொதுவாக சில இடங்களில் வருகிறது. (அவை 25:74, 6:105, 47:24, 41:18 ஆகிய வசனங்களாகும்.)

1) உங்கள் வீடுகளிலோ சாப்பிடுவது நோயாளியின் மீதும் குற்றமில்லை. ஊனமுற்றவர் மீதும் குற்றமில்லை. குருடர் மீதும் குற்றமில்லை. நீங்கள் அனைவரும் சேர்ந்தோ தனித்தனியாகவோ சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. (திருக்குர்ஆன் 24:62)

இந்த வசனங்களில் சில வீடுகளைக் குறிப்பிட்டு இவர்களின் வீடுகளில் நோயாளி, குருடர், ஊனமுற்றவர்கள் சாப்பிடுவது குற்றமில்லை என்று கூறப்பட்டுள்ளது.

2) போருக்குச் செல்லாமல் இருப்பது குருடர் மீதும் குற்றமில்லை. நொண்டியின் மீதும் குற்றமில்லை. நோயாளியின் மீதும் குற்றமில்லை. (திருக்குர்ஆன் 48:18)

3) தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக அவர் முகம் சுளித்து புறக்கணித்து விட்டார். (80:1-2)

இந்த இடங்களில் மட்டுமே புறக்கண் குருடர்களைப் பற்றி வந்துள்ளன. ஏனைய எல்லா இடங்களிலும் அகக்கண் குருடர்களைப் பற்றியே வந்துள்ளன. இத்தகு கருத்துக் குருடர்களை குணப்படுத்தவே ஈஸா நபி வந்தார்கள். ஏன் எல்லா நபிமார்களும் வந்துள்ளனர். (2:19, 2:172, 10:44, 27:82, 30:54, 43:21, 22:47, 5:72, 6:105, 17:98, 25:74) இவ்வாறே உடல் நோயாளிகளைப் பற்றியும் சில வசனங்களில் (24:62, 48:18, 9:91, 73:21, 26:81, 2:185-186, 2:196, 4:44,107, 5:7 ) வந்துள்ளன. நான் நோயாளியாக இருக்கின்றேன் (37:39) என இப்ராஹீம் நபி (அலை) அவர்கள் கூறினார்கள். இவை உடல் நோயாளிகளைப் பற்றி வரும் இடங்களாகும். ஏனைய இடங்களில் ஆத்மீக நோய்களைக் குறித்தே வருகிறது. ஈஸா நபி குணப்படுத்திய நோய் ஆத்மீக நோய் ஆகும். ஏனென்றால் உடல் நோய்களைக் குணப்படுத்த உலகில் பல மருத்துவர்களும், மருந்துகளும் உள்ளன. ஆனால் இறைவனுடன் தொடர்புடைய ஆத்மீக நோய்களைக் குணப்படுத்தவே நபிமார்களை அல்லாஹ் அனுப்புகின்றான்.

(உள்ளத்தின் நோயைப் பற்றி திருக்குரானில் 2:11, 5:53, 8:50, 9:125, 22:54, 24:51, 33:13, 33:33, 33:61, 47:21, 47:30, 74:32, 24:6 26:81, 48:18, 2:185-186,196; 4:44,103; 5:7, 9:91, 73:21 போன்ற வசனங்களில் கூறப்பட்டுள்ளன.)

2:19,172; 10:44, 27:82, 30:54, 43:41, 17:98, 25:74, 6:105, 5:72, 22:47, 47:24, 41:18 போன்ற வசனங்களில் ஆத்மீகக் குருடர்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளன. ஒரு வாதத்திற்காக அவை உடல் நோய்கள் என்று வைத்துக் கொண்டால்,

முஸ்லிம் ஹதீஸ் எண் 5735:
ஒரு சாதாரண சிறுவன் குருடர்களைக் குணப்படுத்துகின்றான். தொழு நோயாளிகளையும் பிற நோய்களையும் குணப்படுத்துகின்றான். தன்னை மலையிலிருந்து உருட்டிக் கொள்வதற்கு அனுப்பட்ட அரச வீரர்களை மலையை குலுங்க வைத்து தப்புகிறான். தன்னைப் படகில் ஏற்றி கடலில் எறிந்து கொல்ல வந்த வீரர்களை மறக்களைத்திளிருந்து விழ வைத்து தப்புகிறான் என்று அந்த நபிமொழி கூறுகிறது. எனவே ஒரு சாதாரண சிறுவனும். துஆவினால் அந்த அற்புதங்களைச் செய்துள்ளான். எனவே ஈசா நபி மட்டும் செய்தார் என்பதற்கு இடமில்லை.

Dr.Anburaj said...

இசுலாமும் பயங்கரவாதமும் - ஒன்றாய் பிணைந்தவை
உலகில் தோன்றிய எந்த சமயம் எதுவும் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை. குறைகளற்ற இறைமார்க்கமான இஸ்லாத்தில் பயங்கரவாததிற்கு அறவே இடமில்லை. அது மட்டுமல்ல, பயங்கரவாதத்திற்கு பதிலடியாக போது மன்னிப்பையும், கருணையையும் இஸ்லாம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

நபி (ஸல்) அவர்கள், தமது அன்பு மகளை கீழே தள்ளி அவளுடைய அகால மரணத்திற்கு காரணமான பயங்கரவாதிக்கும் தமது உற்ற தோழரின் உடலைக்கிழித்து அவருடைய ஈரலைக் கடித்து துப்பிய பயங்கரவாதிக்கும் இன்னும் தமக்கும் தம்மைச் தார்ந்தவர்களுக்கும், கொடுமைகள் பல இழைத்த கொடியவர்களுக்கும் பொது மன்னிப்பை வழங்கியதன் மூலம்

பயங்கரவாதத்தை அன்பால், அரவணைப்பால், மன்னிக்கும் மனோபாவத்தால் வென்றிட முடியும் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் போர்கள் பலவற்றைக் கண்டிருந்தாலும் அவையாவும் தற்காப்பு நடவடிக்கையாகவும் எதிரிகளை நேருக்கு நேர் சந்திக்கின்ற களங்களாகவும் இருந்திருக்கின்றன. அப்பாவி மக்களும் ஆலயங்களும், மடங்களும் அவர்களின் இலக்குகளாக எப்போதும் இருந்ததில்லை.

ஆனால், இன்று பயங்கரவாதத்திற்கு இஸ்லாமிய முலாம் பூசப்படுகிறது. இஸ்லாத்தின் எதிரிகளுக்கு இதில் பங்கிருந்தாலும் முஸ்லிம்களின் சிறுபகுதியினர் பயங்கரவாதத்திற்கு துணை போயிருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. மனித நேயத்தை பெரிதும் மதிக்கின்ற ஒரு மார்க்கத்தை சார்ந்த இவர்கள், பயங்கரவாதப் படுகுழியில் விழக் காரணமானவர்கள் யார்?

மாறுபட்ட சமயக் கருத்து கொண்ட ஒரே காரணத்திற்காக மக்கள் கொடுமைகளுக்கு இலக்காவது வரலாற்றில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் ஒன்று, இந்தக் கொடுமைகளுக்கும் பயங்கரவாதத்திற்க்கும் அடிகோலியவர்கள் சீர் கெட்ட மதக் குருமார்களே! மாற்றுக் கருத்துக் கூறியதற்காக மக்கள் கழுமரத்தில் ஏற்றப்பட்டிருக்கிறார்கள். இதற்க்கு காரண கர்த்தாக்கள் புரோகிதர்களே! இயேசுவை சிலுவையில் அறைந்து பயங்கரவாதத்திற்கு வித்திட்டவர்கள் யூத மதப் பண்டிதர்களே! இவர்களின் வழியில் இஸ்லாத்தின் பெயரால், அல்லாஹ்வின் பெயரால் அராஜகத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் அடித்தளம் அமைத்தவர்கள் பெயர்தாங்கி முல்லாக்களே!

பிரசித்தி பெற்ற முல்லாக்களில் ஒருவரான மௌலான மௌதூதி கூறுவதைப் பாருங்கள்:

"இது (ஜமாஅத்தே இஸ்லாமி) ஒரு பிரச்சார அமைப்பல்ல. பிரச்சாரகர்கள், போதகர்கள் ஆகியவர்களின் கூட்டமல்ல. மாறாக இது அல்லாஹ்வின் இராணுவமாகும்" (ஹகீகத்தே ஜிஹாத் - பக்கம் , லாஹூர் தாஜ் நிறுவன வெளியீடு - ஆண்டு)

Dr.Anburaj said...

மார்க்கப் பிரச்சாரம் செய்வதிலோ மக்களை நல்வழிப்படுத்த அவர்களுக்குப் போதனை செய்வதிலோ இவர்களுக்கு நம்பிக்கை இல்லை. மாறாக வன்முறை மூலம் இவர்களின் தவறான கொள்கைகளை நிலைநாட்டுவதே இவர்கின் குறிக்கோள் என்பது இந்த வாசகங்களின் மூலம் புலனாகிறது. இதனை உறுதிப்பாடுத்தும் வகையில் மௌதூதி சாஹிப் தொடர்ந்து கூறுவதைப் பாருங்கள்:

"குழப்பங்களையும் தவறான கொள்கைகளையும் இந்த உலகிலிருந்து அகற்றி மனித இனத்தை சீர்திருத்த எவரேனும் விரும்பினால் அதனை சொர்ப்பொழிவுகள் அறிவுரைகள் மூலமாக செய்ய முடியாது என்பதை உணர வேண்டும். அவை பயனற்றவை!" (ஹகீகத்தே ஜிஹாத் - பக்கம்11 )

"நீர் நினைவூட்டிக் கொண்டே இருப்பீராக, நினைவூட்டிக் கொண்டிருப்பது நிச்சயமாக பயனளிக்கக் கூடியதாகும். இறைவனுக்கு அஞ்சுபவர் நிச்சயமாக அறிவுரையை ஏற்றுக்கொள்வார்" (திருக்குர்ஆன்,87:10,11 )

போதனை, அறிவுரை ஆகியன நிச்சயமாகப் பயனளிக்கும் எனத் திருக்குரானிலே இறைவன் கூறுகின்றான். நபி (ஸல்) அவர்களும் மக்களை சீர்திருத்த இதே முறையைத்தான் தன் வாழ் நாள் முழுவதும் கடைப்பிடித்து வந்தார்கள். ஆனால் மௌதூதி சாஹிபோ முற்றிலும் கோணலான ஒரு வழியையே காட்டுகிறார். அவர் தொடர்ந்து கூறுவதைப் பாருங்கள்:

"தவறான ஆட்சிக்கெதிராக அவர் எழ வேண்டும். அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். அதிகார பீடத்திலிருந்து தவறிழைப்பவர்களை அகற்ற வேண்டும். உறுதியான கொள்கைகளையும் நியாயமான நிர்வாகத்தையும் கொண்ட ஓர் அரசை நியமிக்க வேண்டும். (ஹகீகத்தே ஜிஹாத் - பக்கம்11 )

ஓர் அரசு தவறான கொள்கையுடையது என்று இவர்கள் கருதினால் அதற்க்கெதிராக கிளர்ச்சி செய்ய வேண்டும்: அதன் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்; என்கிறார் மௌதூதி!இது திருக்குரானின் போதனைகளுக்கும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் நடைமுறைகளுக்கும் முற்றிலும் முரணானதாகும்.

இஸ்லாத்திற்கு முரண்பாடான இத்தகைய நச்சுக் கருத்துக்களையே உலகெங்கும் வாழும் முஸ்லிம்களிடையே இந்த சீர்கெட்ட முல்லாக்கள் பரப்பி வந்திருக்கிறார்கள். இவையே நாளடைவில் வழுப்பெற்று நாசகார செயல்களில் பாமர முஸ்லிம்களை ஈடுபட வைக்கிறது. இவையே ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற முஸ்லிம் நாடுகளின் சீரழிவுக்கு காரணம்.

இறுதி காலத்தில் தோன்றும் இத்தகைய சீர்கெட்ட முல்லாக்கள் பற்றி நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள். வானத்தின் கீழ் இந்த முல்லாக்கள் கெட்ட உயிரினங்களாக இருப்பார்கள் எனவும் குழப்பங்கள் அவர்களிலிருந்தே தோன்றி அவர்களிடமே முடிவுபெறும் எனவும் அவர்கள் அறிவித்துள்ளார்கள். .

எனவேதான் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலை நாட்டவும் நபி(ஸல்) அவர்களின் உயரிய நடைமுறைகளை செயல்படுத்தவும் இக்காலத்தில் தோன்றியுள்ள இமாம் மஹ்தி (அலை) அவர்களை நாம் பின்பற்றியாகவேண்டும்.

முஸ்லிம்கள் அவர்கள் பெற்றிருந்த மகோன்னத நிலையை மீண்டும் பெறுவதற்கு திருக்குர்ஆன் கூறுவதற்கேற்ப உயர்ந்த சமுதாயமாக உலகில் ஒளிர்வதர்க்கும் முல்லாயிசம் முற்றாகத் தொலைக்கப்பட வேண்டும்.

Dr.Anburaj said...

நபி (ஸல்) அவர்கள் இறுதிகாலத்தில் தமது சமுதாயம் எவ்வாறு இருக்கும் என்பதைக் கீழ்வருமாறு முன்னறிவித்துள்ளார்கள்:-

"ஒரு ஜோடி காலனிகளுள் ஒன்றோடொன்று ஒத்திருப்பது போன்று இஸ்ரவேல் சமுதாயத்திற்கு நிகழ்ந்தது அனைத்தும் எனது சமுதாயத்திற்கும் நிகழும். இஸ்ரவேலர்கள் எழுபத்துஇரண்டு பிரிவுகளாகப் பிரிந்தனர். எனது சமுதாயமோ எழுபத்துமூன்று பிரிவுகளாகப் பிரியும் (அவற்றுள்) ஒரு பிரிவாரைதவிர ஏனைய பிரிவினர் அனைவரும் 'நரகை அடைவர்' இறை தூதரே! அந்த பிரிவு எது? என்று வினவப்பட்டபோது நானும் எனது சஹாபாக்களும் எவ்வாறிருப்பார்களோ அந்தப் பிரிவு என நபிபெருமானாரவர்கள் பதிலளித்தார்கள்"

இந்த நபிமொழியின் இறுதிப்பகுதியை அஹ்மத், அபூதாவூத் ஆகியோர் கீழ்வருமாறு அறிவித்துள்ளார்கள்:-

'எழுபத்து இரண்டு கூட்டமும் நரகிலும், ஒரு கூட்டம் சுவர்க்கத்திலும் நுழைவார்கள். அந்த ஒரு பிரிவு ஜமாத்தாக இருக்கும்" (மிஷ்காத்)

இந்த நபிமொழி இப்போது சில முஸ்லிம் பத்திரிகைகளில் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. அனாச்சாரங்களிலிருந்தும், ஆலிம்சாக்களின் பிடியிலிருந்தும் தம்மை சிறிது விடுவித்துக் கொண்ட சிலர் தாமே இந்த வெற்றிக்குரிய பிரிவு என தம்பட்டம் அடித்துக்கொள்ளவும் மற்றவர்கள் அதற்க்கு அருகதையற்றவர்கள் என்பதற்கு 'ஆதாரங்கள்' காட்டவும் முயல்கின்றனர். இது இவர்களின் அறியாமையையே பறைசாற்றுகிறது.

அந்-நஜாத் ஏடு, வெற்றிக்குரிய அந்தப் பிரிவு எது என்பதை ஆய்வு செய்வதற்க்குப் பகரமாக அந்தப் பிரிவைச் சாராதவர்கள் யார் என்ற ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளது. அந்-நஜாத் இதழில் இவ்வாறு காணப்படுகிறது:-

"நபி (ஸல்) அவர்களிடம் மன்ஹும் யாரசூலுல்லாஹ் என்றே கேட்கப்பட்டது, அதாவது அவர்கள் யார் என்றே கேட்கப்பட்டது. அவர்களின் பெயர் என்ன என்றோ? அவர்கள் என்ன அகீதாவில் இருப்பார்கள் என்றோ கேட்கப்படவில்லை. எனவே இஷ்டப்பட்ட பெயரை வைத்துக் கொள்ளலாம் என்று சொல்பவர்கள் விதண்டா வாதம் செய்கிறார்கள் என்பதே உண்மையாகும்"

மேற்கண்ட நபிமொழியில் "மன்ஹும்" (அவர்கள் யார்) என்று கேட்டதாக இல்லை. மாறாக மன்ஹிய (அது எது?) அதாவது அந்தப் பிரிவு எது என்றே கேட்கப்பட்டது. நஜாத் ஆசிரியர் தமது இஷ்டம்போல் ஹதீஸை மாற்றுகிறாரா?

முஸ்லிம் சமதாயத்தில் நபி(ஸல்)அவர்களையும் சஹாபாப் பெருமக்களையும் பின்பற்றுபவர்கள் வெற்றிக்குரியவர்கள் என்று இங்கு குறிப்பிடப்படவில்லை. அவ்வாறென்றால் எழுபத்துமூன்று பிரிவுகளிலும் அவ்வாறு நடப்பவர்கள் இருக்கலாம். இங்கு 'மன்ஹிய' - அந்தப் பிரிவு எது? என்று கேட்கப்பட்டு தாமும் தமது சஹாபாக்களும் இருப்பது போன்று இருப்பவர்களே என்று நபி(ஸல்) அவர்களால் கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளது. எனவே அவ்வாறு இருக்கும் ஒரு பிரிவாறே வெற்றிக்குரிய பிரிவார் என்றும் அப்படி ஒரு பிரிவார் இருந்தால் அவர்கள் தம்மை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்ட தமக்கு ஒரு பெயரை வைத்துக் கொள்ளவே வேண்டும் என்பதும் தெளிவாகிறது.

"நபி (ஸல்) அவர்களே எனது உம்மத்து எழுபத்துமூன்று பிரிவினர்களாகப் பிரிவார்கள் என்று சொல்லப்பட்டபின் அதை எப்படி நாம் மறுக்க முடியும்"(பக்கம் 13)

என்று கூறி முஸ்லிம் சமுதாயத்தில் பிரிவுகள் உண்டு என்பதை ஒப்புக் கொள்ளும் அந்-நஜாத் வெற்றிக்குரியவர்கள் ஒரு தனிப் பிரிவாறே என்பதை உணர்ந்துக் கொள்ளத் தவறுவது ஏன்?மேலே குறிப்பிட்ட படி இந்த நபிமொழியில் மற்றொரு அறிவிப்பில் 'அந்தப் பிரிவு ஜமாத்தாக இருக்கும்" என்று கூறப்பட்டிருக்கிறது. இதிலிருந்து வெற்றிக்குரியவர்கள் தனி நபர்கள் அல்ல மாறாக அது ஒரு ஜமாஅத் என்பது புலனாகவில்லையா?
இஸ்லாம் தனிநபர் மார்க்கமன்று, அது கூட்டாகச் செயல் படுத்தப்படவேண்டிய மார்க்கம். இயக்கம் இல்லாமல் இஸ்லாம் இல்லை. இதனை 'நஜாத்' புரிந்துக் கொள்ளவேண்டும்.

Dr.Anburaj said...

இனி வெற்றிக்குரிய அந்தப் பிரிவு எது என்பதை ஆராய்வோம். அந்தப் பிரிவுக் குரிய இலக்கணம் இன்றைய முஸ்லிம்களில் பெரும்பாலோரிடத்தில் காணப்பட வில்லை. என்பதை அவர்களின் தலைவர்களே கூறுகின்றனர்.

மௌலானா மௌதூதி சாகிப் இவ்வாறு கூறுகிறார்:-

பெயரளவிலான இன்றைய முஸ்லிம் சமுதாயத்தை காணுகின்ற போது அதில் விதவிதமான முஸ்லிம்களைக் காணமுடியும். முஸ்லிம் சமுதாயம் இன்று ஒரு மிருகக் காட்சி சாலையாக காட்சி தருகின்றது. அதிலே பருந்து, காகம், கழுகு போன்ற ஆயிரக்கணக்கான பறவைகளையும் மிருகங்களையும் காணலாம். இன்று முஸ்லிம்களென்று சொல்லப்படும் மக்களின் நிலை எவ்வாறென்றால் அவர்களில் 1000 பேரில் 999 பேர் மார்க்க அறிவில்லாதவர்களாகவும் உண்மைக்கும் பொய்யிற்கும் உள்ள வேறுபாட்டினை உணராதவர்களாகவும் உள்ளனர். அவர்களின் எண்ணங்கள் இஸ்லாத்திற்கு முரண்பாடானவை. பரம்பரை பரம்பரையாக முஸ்லிம் என்ற பெயரை அவர்கள் பெற்றிருக்கிறார்களேயொழிய வேறொன்றும் அவர்களிடத்தில் இல்லை. (முஸல்மான் அவர் மௌஜூதா ஸியாசி கஷ்மகஷ் பக்கம் 44, 105-106)

மௌலானா அதாவுல்லா ஷாஹ் புகாரி இவ்வாறு கூறுகிறார் -

நாம் இஸ்லாத்தின் பெயரால் செய்வதனைத்தும் வெளிப்படையான குப்ராகும். நமது இதயங்கள் மார்க்க அறிவு இல்லாதவையாகவும் கண்கள் அகப்பார்வை (ஆன்மீகப் பார்வை) அற்றவையாயும் காதுகள் உண்மையை கேட்க மறுப்பவையாகவும் இருக்கின்றன. சிலைகள் (கப்ருகள்) மீது உங்களுக்குள்ள நம்பிக்கையும் அல்லாஹ் மீதுள்ள அவ நம்பிக்கையும் குப்ர் அல்லாமல் வேறென்ன? நாம் ஏற்றிருப்பது நபி (ஸல்) அவர்கள் கொண்டுவந்த இஸ்லாமா? நமது அமைப்புகள் அனைத்தும் குப்ரியத் ஆகும்........ (ஆஸாத், லாகூர்)

இப்படி ஒட்டு மொத்தமாக முஸ்லிம் சமுதாயம் - நபி பெருமானாரின் சீர்கெட்டு விட்டதென்றால் வெற்றிக்குரிய அந்தப் பிரிவுதான் எது? அதனை நபி(ஸல்) அவர்களே கோடிட்டுக் காட்டுகிறார்கள்:

"இந்தச் சமுதாயத்தின் சிறந்த காலக்கட்டங்கள் அதன் ஆரம்பத்திலும் இறுதியிலும் உள்ளவையாகும். ஆரம்பக் கட்டத்தில் நானும் இறுதி கட்டத்தில் வாக்களிக்கப்பட்ட மஸீஹும் இருப்பார்கள்." (கன்சுல் உம்மால்)

"நான் ஆரம்பத்திலும் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் இறுதியிலும் உள்ள ஒரு சமுதாயம் எவ்வாறு அழியும்" (இப்னு மாஜா)

இவற்றிலிருந்து வாக்களிக்கப்பட்ட மஸீஹை ஏற்பவர்களே அந்தச் சீர்கேட்டிலிருந்து தப்பியவர்கள் என்பதும் அவர்களே அந்த வெற்றிக்குரிய பிரிவார் என்பதும் புலனாகும்.

அடுத்து வெற்றிக்குரிய அந்த பிரிவார் ஒரு "ஜமாஅத்" ஆக விளங்கும் என மேற்கண்ட ஹதீதிலிருந்து தெளிவாகிறது. இங்கு ஜமாஅத் என்பது வெறும் கூட்டத்தைக் குறிக்காது.

"லைசல் ஜமாஅது இல்லா பி இமாமின்"

இமாம் இல்லாமல் ஜமாஅத் இல்லை.

என்பது நபி(ஸல்) அவர்களின் வாக்காகும். ஜமாஅத் என்றால் அது ஒரு தலைமையின் கீழ் இயங்கக்கூடியதொன்றாகும். இஸ்லாமிய சமுதாயம் தலைமையின் கீழ் இயங்கக்கூடியதாகும். தலைமை இல்லாத எந்தக் கூட்டமும் இஸ்லாமிய சமுதாயமாக அழைக்கப்பட இயலாது. அந்த அளவுக்கு தலைமை முக்கியத்துவம் வாய்ந்தது.

ஹஸ்ரத் இப்னு உமர் அவர்களின் ஓர் அறிவிப்பு இவ்வாறு காணப்படுகிறது:- யாராவது ஜமாத்திலிருந்து விலகி நிற்கிறார்கள் என்றால் அவர் இஸ்லாமிய வளையத்திலிருந்து வெளியேற்றப்படுவார். (திர்மிதி) ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்களிடம் பையத் செய்தது எப்போது என ஹஸ்ரத் யாகூபிப்னு இப்ராஹிமிடம் வினவப்பட்டபோது, நபி(ஸல்) அவர்கள் மறைந்த அன்றே! ஹஸ்ரத் அபூபக்கர் அவர்களை இமாமாக ஏற்றார்கள். சஹாபாக்கள் ஒரு நாளில் ஒரு பகுதி கூட ஜமாத்தாக இல்லாமலிருக்க விரும்பவில்லை. என்றார்கள். (திப்ரி பாகம் 3 பக்கம் 301)

இவற்றிலிருந்து "ஜமாஅத்" "இமாம்" ஆகியன எத்துனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணரலாம்.

இந்த 'ஜமாஅத்" தும் இமாமும் தம்மிடத்தில் இல்லை என்பதை இக்கால முஸ்லிம் அறிஞர்கள் உணர்ந்தே இருக்கின்றனர்.

அல்லாமா சித்திக் ஹசன் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள்:-

"இன்றைய முஸ்லிம்களுக்கு ஒரு ஜமாத்தோ இமாமோ இல்லை. மாறாக இது இவர்கள் சின்னாபின்னமாயிருக்கும் காலகட்டமாக இருக்கிறது.(இக்திராபுஸஆ , பக்கம் 56)

ஜம்மியத்துல் உலமாயே ஹிந்தின் ஏடான அல்ஜம்மியத் (டெல்லி) தில் இவ்வாறு காணப்படுகிறது:-

"முஸ்லிம்சமுதாயமென்பது ஒரு சரடில் கோர்க்கப்பட்ட மாலை போன்ற கட்டுப்பாடுமிக்க ஓர் அமைப்பென்றால் இன்று முஸ்லிம் சமதாயம் என்ற ஒன்று இல்லவே இல்லை! சிதறிக் கிடக்கும் மணிகள் போலவும் இடையனில்லாத ஆடுகள் போலவும் முஸ்லிம்கள் இருக்கின்றனர்." (அல் - ஜம்மிய்யத் 14-4-31)

Dr.Anburaj said...

லாஹூரிலிருந்து வெளிவரும் ஸம்ஸம் எனும் ஏட்டில் இவ்வாறு காணப்படுகிறது.

அந்தோ பரிதாபம், உயிருள்ள ஓர் இமாம் இல்லாத சமுதாயம் நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பதை காண்கிறோம். சொர்கத்திற்குரிய வழி என்று எதனை எண்ணிக்கொண்டிருக்கிரார்களோ அது நரகத்தின் பாதையே யாகும். தலைமையற்ற ஒரு சமூகத்தின் தலை மீது வீழ்ச்சியின் மேகங்களே காணப்படும். (ஸம்ஸம் 11-5-39)

நம்பிக்கையிலும் நடைமுறையிலும் திருமறையின் கட்டளை பேணியும் அண்ணல் நபிபெருமாநாரை முழுக்க முழுக்க பின்பற்றியும் ஒரு இமாமின் கீழ் ஒன்றுபட்டு அல் ஜமாத்தாக இயங்கி வருவது இன்றைய உலகில் அஹ்மதியா இயக்கம் மட்டுமே

இத்தகைய ஒரு உன்னத ஜமாஅத் உருவாகுமென்றும் அதுவே நபிபெருமானார் முன்னறிவித்த அந்த வெற்றிக்குரிய பிரிவு என்றும் இஸ்லாமிய நல்லறிஞர்களும் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்துள்ளார்கள்.

மேற்கண்ட நபிமொழிக்கு விளக்கமாக ஹஸ்ரத் முஹிய்யுத்தீன் இப்னு அரபி (ரஹ்) அவர்கள் தமது மிர்காத் ஷரஹ் மிஷ்காத் எனும் ஹதீது விளக்கவுரை நூலில் இவ்வாறு வரைந்துள்ளார்கள்:

"எழுபத்திரண்டு பிரிவுகளும் நரகத்திற்காளாவார்கள். சுவர்க்கம் செல்லும் அந்த ஒரு ஜமாஅத் நபிபெருமானார் (ஸல்) அவர்களின் நடைமுறைகளைப் பேணும் 'அத்தரீத்துன் நக்கிய்யதுல் அஹ்மதிய்யது" புனித அஹ்மதிய்யா இயக்கத்தை சார்ந்தவர்களாக இருப்பார்கள். (மிர்காத் பாகம் 1 பக்கம் 201)

ஹஸ்ரத் முஜத்திது அல்பிஸானி (ரஹ்) அவர்கள் இவ்வாறு வரைந்துள்ளார்கள்: அக்காலத்தில் ஹக்கீகத்து முஹம்மதியாவின் பெயர் ஹக்கிகத்து அஹ்மதிய்யா என்றிருக்கும். அது (அஹமதிய்யத்) அல்லாஹ்வின் அஹத் (ஏகத்துவம்) எனும் குணயியல்பை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும். (ரிஸாலா மப்தக்மா ஆத் பக்கம் 58)

அஹ்மதியா இயக்கம் தோன்றுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னே அதன் பெயரை இந்த இஸ்லாமிய அறிஞர்கள் தெரிவித்திருப்பது அற்புதமும் இறைசெயலும் ஆகும். தனிப் பெயர் கொண்டவர்கள் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்ற கருத்தை கூறி மறைமுகமாக அஹ்மதிய்யா இயக்கத்தை தாக்க விழைகின்றவர்கள் இதனை தெரிந்துகொள்ளவேண்டும். இவர்களின் 'நஜாத்'திற்க்காகவும் இஸ்லாத்தின் மறுமலர்ச்சிக்காகவும் முஸ்லிம் சமுதாயத்தின் எழுச்சிக்காகவும் திறக்கப்பட்ட ஒரே வழி அஹமதிய்யா இயக்கமே என்பதையும் இவர்கள் உணரவேண்டும்.

Dr.Anburaj said...


முஹமமதுவின் நற்பண்புக்கு உதாரணம்.
றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் திருவாய் மலர்ந்தருளினார்கள்.

‘எனது தோழர்களைத் திட்டாதீர்கள். எவராவது அவர்களை ஏசினால், அவர் மீது அல்லாஹ்வின் மலக்குகளினதும் அனைத்து மனிதர்களினதும் சாபம் உண்டாகும். அவரின் நபிலான வணக்கத்தையோ (தௌபாவையோ) பர்ழான வணக்கத்தையோ அல்லாஹுத்தஆலா ஏற்க மாட்டான்’.

‘எனது தோழர்களை ஏச வேண்டாம். எனது தோழர்களை ஏசுகின்ற ஒரு கூட்டம் இறுதிக் காலத்தில் வரும். அவர்கள் மரணித்தால் அவர்களைத் தொழுவிக்காதீர்கள். (அவர்களை இமாமாக்கி) அவர்களுடன் தொழாதீர்கள். அவர்களுக்கு திருணம் செய்து வைக்காதீர்கள். (தேவையின்றி) அவர்களுடன் உட்காதீர்கள். அவர்கள் வியாதியுற்றால் நோய் விசாரிக்கச் செல்லாதீர்கள்’.

‘அல்லாஹ்! அல்லாஹ்! எனது தோழர்கள் விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்! அல்லாஹ்! எனது தோழர்கள் விஷயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்!

Dr.Anburaj said...

எனது தோழர்களை ஏச வேண்டாம். எனது தோழர்களை ஏசுகின்ற ஒரு கூட்டம் இறுதிக் காலத்தில் வரும். அவர்கள் மரணித்தால் அவர்களைத் தொழுவிக்காதீர்கள். (அவர்களை இமாமாக்கி) அவர்களுடன் தொழாதீர்கள். அவர்களுக்கு திருணம் செய்து வைக்காதீர்கள். (தேவையின்றி) அவர்களுடன் உட்காதீர்கள். அவர்கள் வியாதியுற்றால் நோய் விசாரிக்கச் செல்லாதீர்கள்

முஹம்மதுவின் கூற்றி பொய்யானது. அவரது தோழா்களை திட்டும் கூட்டம் முஹம்மதுவின் மரணத்திற்கு பின் உருவாகிவிட்டது.கலிபாவிற்கான பதவிச் சண்டை முதல் ஆரம்பம்.
பகைவனுக்கும் அன்பு செய்வாய் என்ற இயேசுவின் போதனைகளுடம் முஹம்மதுவின் அழுக்கு போதனை .... ?
அவர்கள் மரணித்தால் அவர்களைத் தொழுவிக்காதீர்கள். (அவர்களை இமாமாக்கி) அவர்களுடன் தொழாதீர்கள். அவர்களுக்கு திருணம் செய்து வைக்காதீர்கள். (தேவையின்றி) அவர்களுடன் உட்காதீர்கள். அவர்கள் வியாதியுற்றால் நோய் விசாரிக்கச் செல்லாதீர்கள்
என்ற கருத்து படிப்பதற்கு அருவருப்பாக உள்ளது.பாவம் படிப்பறிவில்லாத ஒரு காட்டுமிராண்டி காலத்து நபா் முஹம்மது. காலத்தின் பண்பாடு அவரையும் தொற்றிக் கொண்டுவிட்டதுஃ

எப்படி இத்தனை பதிவுகளையும் துணிந்து வெளியிட்டு விட்டீர்கள் ? நன்றி.நன்றி.
அஹமதியா இயக்கத்தை சோ்ந்தவன் எனது நண்பனாக உள்ளான். அவனிடம் கற்றதுதான்.