சந்த்ரயான் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது இந்தியன் என்ற முறையில் வருத்தமளிக்கிறது. சிவன் இதற்காக கண் கலங்கியதையும் பார்க்க முடிந்தது. தோல்விதான் வெற்றிக்கான முதல்படி என்று மீண்டும் முயற்சியுங்கள் இஸ்ரோ விஞ்ஞானிகளே
பூமியைத் தவிர உலகின் மற்ற எந்த கோள்களிலும் மனிதன் வாழ முடியாது: அதற்கான வசதிகள் இல்லை என்று குர்ஆன் அடித்து சொல்கிறது. இதைப்பற்றியும் பார்ப்போம்.
பூமியிலேயே வாழ்வீர்கள்! பூமியிலேயே மரணிப்பீர்கள்! அதிலிருந்தே பிறகு வெளிப் படுத்தப் படுவீர்கள்'
- குர்ஆன் 7;175
பூமியில் உங்களை நாம் வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறோம். (ஆனால்) குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்.
- குர்ஆன் 7;10
இது சம்பந்தமாக வரும் வேறு வசனங்கள் (2;36- 7;24- 30;25)பூமியில் மட்டுமே மனிதன் வாழ முடியும் என்று மேற் கண்ட வசனங்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது. வேற்று கிரகத்திலிருந்து மனிதர்கள் வந்தார்கள், பறக்கும் தட்டு வந்தது என்பதெல்லாம் நிரூபிக்கப் படாத செவி வழி செய்திகள். உயிர் வாழ தேவையான ஆக்சிஜன் பூமியில் தான் உள்ளது. சந்திரனுக்கு, செவ்வாய்க்கு மனிதன் சென்றாலும் நிரந்தர தங்குதல் என்பது பூமி மட்டுமே!மனிதனின் உடலுக்கு ஏற்றவாறு வெப்பமும் குளிரும் அளவோடு இருப்பது பூமியில் மட்டுமே!
சில கோள்களில் காணப்படும் குளிர் மனித இரத்தத்தை உறைந்து போகச் செய்து விடும். இன்னும் சில கோள்களில் காணப்படும் வெப்பம் மனிதனை சாம்பலாக்கி விடும்.மேலும் கவனிக்க வேண்டியது பூமி மட்டுமே சூரியனிலிருந்து 23 டிகிரி சாய்வாக சுழல்கிறது. இப்படி சாய்வாக சுழல்வதால் தான் கோடை, குளிர்,வசந்தம், மற்றும் இலையுதிர் காலங்கள் என்று கால மாற்றங்கள் ஏற்படுகின்றன. வருடம் எல்லாம் ஒரே சீரான வெப்பமோ, குளிரோ இருந்தால் அதுவும் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்காது. எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்கு 'இதில் தான் வாழ்வீர்கள்' என்று எவ்வாறு அடித்துக் கூற முடியும்? எல்லாக் கோள்களையும் படைத்த இறைவனால் மட்டுமே அன்றைய நிலையில் இதனைக் கூற முடியும். எனவே இந்த வசனமும் இது இறைவனின் சொல்தான் என்பதை நிரூபிக்கும் சான்றாக உள்ளது.
மேற்கண்ட இரண்டு குர்ஆன் வசனங்களிலிருந்தும் நமக்கு தெரிய வருவது மனித இனமும் மற்ற பூமியில் உள்ள உயிரினங்களும் பூமியில் மாத்திரமே உள்ளன. வேற்று கிரகங்களிலும் உயிரினங்கள் உள்ளன. ஆனால் அவை பூமியை ஒத்த உயிரினங்களாக இருக்க வாய்ப்பில்லை. அந்த கோள்களின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப அங்குள்ள உயிர்களின் உடல்வாகு அமைக்கப்பட்டிருக்கும். இனி வருங்காலத்தில் செவ்வாயிலோ, புதனிலோ, வியாழனிலோ உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவை பூமியில் உள்ள உயிரினங்களை ஒத்து இருக்காது என்பது மட்டும் நிச்சயமாக தெரிகிறது. நம் காலத்திலேயே அந்த உயிரினங்கள் கண்டு பிடிக்கப்படலாம். இறைவன் நாடினால் நாமும் அந்த உயிரினங்களை பார்க்கலாம்.
'வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும் உயிரினங்களை அவ்விரண்டிலும் பரவச் செய்திருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை.' - குர்ஆன் 42:29
2 comments:
Now you got the point, how much important for a calendar to have 365 days. So that we can calculate seasons which are essential for agriculture.
பாக்கிஸ்தான் மந்திரி ஒருவனும் சந்திராயன் திட்டம் தோல்வி அடைந்தபின்புதான் கிண்டல் செய்திருக்கின்றான்.
அது போல் தாங்களும் ராக்கெட் ஏவப்பட்ட நாள்களில் பாக்கிஸ்தான்காரன் போல் மௌனமாக இருந்து விட்டு நடப்பதை கவனிப்போம் என்று இருந்து விட்டது ஏதோ தோல்வியில் முடிந்த உடனே பெரிய புடுங்கி போல் கருத்து சொல்ல வந்து விட்டாா்.
சும்மா குரானில் புண்ணாக்கு இருக்கின்றது வெங்காயம் இருக்கின்றது என்று பீற்ற வேண்டாம்.
சமிக்கைகள் வெளியிடாத லேண்டரில் இருந்து சமிக்கை பெற குரானில் ஏதும் வழி காட்டப்பட்டுள்ளது என்றால் தெரிவிக்கலாம்..
அரேபிய புத்தகத்தில் பொதுவான சில கருத்துக்களும் முட்டாள்தனங்களும் மூடத்தனங்களும் கொலை வெறியை தூண்டும் கருத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றது.வேறு என்ன அதில் உள்ளது ?முஹம்மதவிற்கு யுத்தம் பெண்கள் ஆகிய இரண்டும் தெரியும். விண்வெளியியல்-Astronomy - எல்லாம் காட்டறவிகளுக்கு ஏதும் தெரியாது.குருட்டு புளைவிட்டத்தில் பாயந்த கதைதான்.
Post a Comment