Followers

Sunday, November 10, 2019

பெரும்பான்மையான இந்துக்களே! கோவில் கட்டிக் கொள்ளுங்கள்.

பெரும்பான்மையான இந்துக்களே! கோவில் கட்டிக் கொள்ளுங்கள்.
பாபர் பள்ளி இருந்த இடத்தில் ராமர் கோவில்!
உச்ச நீதி மன்றமே கோவிலை இடித்து பள்ளி கட்டியதாக எந்த ஆதாரமும் இல்லை என்று சொல்லியுள்ளது. இனியாவது பாபர் மசூதி இடமானது ராமர் பிறந்த இடம் என்று வாய் கூசாமல் இந்துத்வாவாதிகள் பொய் கூறி திரிய வேண்டாம்.
இப்போது முஸ்லிம்கள் தங்களின் பள்ளி இடத்தை உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு இணங்க தந்துள்ளார்கள். நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக மேல் முறையீடு செய்யப் போவதில்லை என்றும் சன்னி வக்ப் வாரியம் தெரிவித்துள்ளது.
பெரும்பான்மையான இந்துக்களே! கோவில் கட்டிக் கொள்ளுங்கள்.
இப்போது கட்டப் போகும் அந்த கோவிலிலாவது பார்பனன், ஷத்ரியன் , பஞ்சமன், தலித் என்று பேதங்களை வளர்த்து வருணத்துக்கு தக்கவாறு கோவிலுக்குள் அனுமதிக்காது அனைத்து மக்களையும் கொண்டு செல்லுங்கள்.
பாபர் பள்ளியானது ஆண்டான் அடிமை என்ற பேதம் இல்லாமல் ஐந்து வேளை இறைவனை தொழுது வந்த இடம். அந்த இடத்தில் உளுத்துப் போன வர்ணாசிர கோட்பாடுகளை கொண்டு வந்து மனிதர்களை பிரிக்காதீர்கள். வசதியுள்ளவனுக்கு அருகில் அருள் பாலிப்பதும் வசதியற்றவனுக்கு தூரத்தில் அருள் பாலிப்பதுமான பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை இந்த கோவிலிலாவது தயவு செய்து கடை பிடிக்காதீர்கள்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்” !!
பிறப்பினால் அனைவரும் ஒருவரே. பிறப்பில் வேறுபாடு இல்லை என்பதை உலகிற்கு உரக்க உரைத்திற்று குறள். வள்ளுவர் கூறிய 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வாக்கினை மெய்ப்பித்தது பாபரி பள்ளிவாசல். இனியாவது ராமர் கோவில் கட்டும் அந்த இடத்தில் வர்ண பேதத்தை தயவு செய்து வளர்க்காதீர்கள்.
பாபர் பள்ளி மட்டுமல்ல... இது போன்று நாங்கள் வரலாற்று திரிபு பொய்களை 1500 பள்ளி வாசல்களை கூறி இடிக்க காத்திருக்கிறோம் என்கிறது இந்துத்வா. பிஜேபி அரசும் இதற்கும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காது வேடிக்கை பார்க்கும். இதனால் விளையப் போகும் அபாயம் என்ன? நாடு முழுக்க கலவரங்கள் வரலாம். பொருளாதாரம் மேலும் சீரழியும்.. வெளி நாட்டு முதலீடுகள் மெல்ல மெல்ல அண்டை நாடுகளுக்கு செல்லும். அரசின் கஜானா காலியாகும்.
அரசின் கஜானா காலியாவதால் யாருக்கு நஷ்டம்? பெரும்பான்மை இந்துக்களுக்கே நஷ்டம். ஏனெனில் முஸ்லிம்கள் எத்தகைய வறுமை நிலையிலும் வாழ்ந்து விடுவார்கள். அவர்களை இஸ்லாம் அந்த அளவு பக்குவப்படுத்தியுள்ளது. ஆனால் அரசு வேலையில் உள்ள பெரும்பான்மை இந்துக்களுக்கு சம்பளம் கொடுக்க அரசிடம் கையிருப்பு இருக்காது. பிஎஸ்என்எல், ஏர் இந்தியா, ரயில்வே போன்ற அரசு நிறுவனங்களின் நிலை தற்போது என்ன என்பது நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
அடுத்து பாபரி பள்ளியை இடித்த பல்பீர் எவ்வாறு 90 பள்ளிகளை கட்டினாரோ அது போல் இந்துக்களே மனம் வெறுத்து இஸ்லாமியர்களாக மாறி பல நூறு பள்ளிகளை கட்டும் காலத்தை நோக்கி நாம் செல்கிறோம். இது கண்டிப்பாக இன்னும் 10 வருடங்களில் நடந்தேறும் இறைவன் நாடினால்......



No comments: