"#நரேந்திர_மோதியே_வந்தாலும்
#தடுத்து_நிறுத்துவேன்" ஊரடங்கை மீறிய அமைச்சரின் மகனிடம் சீறிய பெண் காவலர்
''உங்களை 9 மணிக்கு மேல் வெளியே வர அனுமதித்தது யார்? 12 மணி வரை நிற்கும் நாங்கள் என்ன முட்டாள்களா? இந்த நேரத்தில் பிரதமர் நரேந்திர மோதியே வந்தாலும் தடுத்து நிறுத்துவேன். எனக்கு அதிகாரம் உண்டு. புரிகிறதா?'' - பாஜக அமைச்சர் மகனிடம் சீறிய பெண் காவலர்
குஜராத் மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் குமார் கனானி. இவரது மகன் பிரகாஷ் கனானி. ஊரடங்கை மீறி பிரகாஷ் கனானியின் நண்பர்கள் இரவு நேரத்தில் சாலையில் சுற்றித்திரிந்ததாக தெரிகிறது.
அவர்களை சூரத் போலீஸ் நிலைய பெண் காவலர் சுனிதா தடுத்து நிறுத்தினார்.
இதனை அறிந்த அமைச்சரின் மகன் சம்பவ இடத்திற்குச் சென்று அந்த பெண் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
'நரேந்திர மோதியே வந்தாலும்...'
சுனிதா, "கொரோனா ஊரடங்கு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? இந்த சமயத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியே வந்தாலும் தடுத்து நிறுத்துவேன்," என கூறி உள்ளார்
சமூக ஊடகங்களில் அமைச்சரின் மகனுக்கு எதிராகவும், சுனிதாவிற்கு ஆதரவாகவும் குரல்கள் எழுந்தன.
இந்த சூழலில் அமைச்சரின் மகன் பிரகாஷ் கனானியும், அவரது இரு நண்பர்களும் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 188 (சட்டத்தை மீறியது), இந்திய தண்டனை சட்டம் 269, 270 (உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்றை பரப்புவது )உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது

1 comment:
1)ஊரடங்கை மீறிய குற்றம் செய்தவர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பது கடமை.
2)ஆனால் ”பிரதமா் நரேந்திர மோடி வந்தாலும் நடவடிக்கை எடுப்பன்” என்பது வாய்க் கொளுப்பு. தகுதியை மறந்த பேச்சு.
பெண் காவலா் தவறு செய்து விட்டாா்.
சவுதி அரேபியாவில் இப்படி ஒரு காவலா் பேசுவாரா ? பேசினால் ....தப்புமா ?
தண்டனை நிச்சயம் என்பது உண்மைதானே!
பின் ஏன் இதைப் பதிவு செய்ய வேண்டும். பாரத பிரதமரை அசிங்கப்படுத்தி விட்டதாக உனக்கு ஒரு கற்பனை. மன வியாதி.
Post a Comment