ஏன் சங்கிகள் பொய்களை பரப்பவதில் கூச்சப்படுவதே இல்லை?
ஏனெனில், அதைத்தான் ஆரியம் காலம் காலமாக செய்து வந்திருக்கிறது. அதில் ஆரியம் வெற்றியும் பெற்று இருக்கிறது. ஆகவே, இத்தனையாண்டு தமிழர்களை பொய்கள் கொண்டு அடிமையாக்கியது சாத்தியம் என்றால், திராவிடம் மீதும்/ திமுக மீதும் தொடர்ந்து பொய்கள்/ அவதூறுகள் பரப்பினால் வெற்றி பெறலாம் என அவர்கள் நம்புகிறார்கள். முதலில், இவர்களின் வழிமுறைகள் சிலவற்றை சாம்பிளாக பார்க்கலாம். (மற்றவைகளை நீங்கள் கமெண்டில் சொல்லவும்)
1) ஆரியர்கள் உள்ளே வந்தபோது இங்கே பூர்வகுடிகளாக இருந்தவர்களிடம் ஒரு நெடிய பண்பாடு இருந்தது. மொழிவளம் இருந்தது. வழிபாட்டு முறை இருந்தது. பண்பட்ட மனிதர்களாக பூர்வகுடி திராவிடர்கள் இருந்தார்கள். காட்டுமிராண்டிகளாக ஆரியர்கள் இருந்தார்கள். காட்டுமிராண்டிகளே வென்றார்கள். பேரறிஞர் அண்ணா எழுதுகிறார்.. உலகில் வேறெங்கும் நடக்காத கொடுமை இங்கே தான் நடந்தது. போரே இல்லாமல், ஒரு இனம் இன்னொரு இனத்திற்கு அடிமையான கொடுமை தான் அது. அமெரிக்க செவ்விந்தியர்கள் சொல்வார்கள். அவர்கள் வந்தபோது, எங்கள் கையில் வேல்கம்புகள் இருந்தது. அவர்கள் கையில் துப்பாக்கிகள் இருந்தது என்று. திராவிடர்கள் எப்படி சொல்ல வேண்டும் தெரியுமா? அவர்கள் வந்த போது, எங்களிடம் ஒரு பெரிய பண்பாடு இருந்தது. அவர்களிடம் வேள்விகளும், பொய்யான புராணங்களும், வர்ணாசிரம ஏற்றத்தாழ்வும் இருந்தது. நாங்கள் அதை நம்பினோம். அடிமைப்பட்டோம்.
2) தெற்காசியா முழுவதும் படையெடுத்து வென்ற தமிழ்மன்னர்கள், யாரிடம் வீழ்ந்தார்கள்? மன்னா, இன்னக்கி போருக்கு அந்தப்பக்கம் போகாத.. வடக்குல சூலம், தெற்குல மூலம்ன்னு சொன்ன புரோகிதர்களை நம்பினார்கள். தன் வீரத்தையும், அறத்தையும் நம்பாமல் புரோகித, புராண, இராமாயண, மகாபாரத கதைகளை நம்பினார்கள். பயந்தார்கள். பதிலுக்கு, ராஜாதி ராஜ குலந்துங்க ராஜ மார்தாண்ட என்று அவர்களுக்கு பட்டங்களை ஆரியம் தந்தது. ஆனால், தமிழர்கள் வீழ்ந்தார்கள்!
3) “இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்” என்று மன்னனையே கேள்விக்கேட்பது தான் திராவிடம். சூது செய்தும் போரில் ஜெயிக்கலாம் என்று சொல்வது தான் ஆரிய மகாபாரதம். சங்கிகள் இதைத் தான் பின்பற்றுகிறார்கள்.
4) குரங்குகள் சேர்ந்து ஒரு பாலத்தை கட்டியது என்று சொல்வதை உண்மையென நம்பும் ஒரு கூட்டமும், அதை நாசாவே சொன்னதாக சொன்னாலும் அதை ஆராயாமல் பரப்பும் கூட்டமும் பொன்னியின் செல்வன் வாசகர் வட்டமாக இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
5) நாமெல்லாம் இந்துக்கள். நமக்கு எதிரிகள் இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்கள், திமுக, திக, திராவிடர்கள், கம்யுனிஸ்டுகள், தலித்தியம் பேசுபவர்கள் என்று சொன்னால் அதை யோசிக்காமல் நம்பும் கூட்டம் தான் ஆரியத்தின் மூலதனம்.
ஆனால், ஆரியம் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். காலம் மாறிவிட்டது. கட்டைவிரல் கேட்டால் பட்டை உரியும் காலமிது. பொய்கள் நிலைக்காது. உண்மை நின்று கொல்லும்!
- ராஜராஜன் ஆர்.ஜெ
1 comment:
அல் தக்கியா முறைகள் அனைத்தும் அரேபிய காடையர்களுக்கும் பொருந்தும். இணையதளம் வந்தபின் முஸ்லீம்களின் மதம் கடும்பாடு படுகிறது.
இயலாமமை காரணமாக பிறாமணர்களை துவேசிக்கும் கலையை கையில் எடுத்து வீசுகின்றார் சு...ன்.
நாடாரை எழுத முடியாது.
பல பகுதிகளில் முஸ்லிம்கள் வைத்ததுதான் சட்டம்என்று உள்ளது. அது குறித்து சு..ன் எழுதமாட்டாா்.
அரேபிய படையெடுப்பு அழகிய நந்தவனமாக இருந்த இந்துஸ்தானில் பெரும் அழிவைஏற்படுத்தியது.
ஆரியா்கள் என்பது கட்டுக்கதை.
Post a Comment