பங்களாதேஷ்.....
கொரானாவினால் இறந்த கிருத்துவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் பணியை மேற்கொண்டிருக்கின்றனர் இஸ்லாமிய தன்னார்வல குழுக்கள் (பார்க்க படங்கள்). இதுக்குறித்த படங்கள் மற்றும் காட்சிகள் வைரலாகி மிகப்பெரும் பாராட்டை இவர்களுக்கு பெற்றுத்தந்திருக்கின்றது. இருபதுக்கும் மேற்பட்ட பங்களாதேஷிய கிருத்துவர்கள் கொரானாவினால் இறந்திருக்கின்றனர். அச்சம் காரணமாக உறவினர்கள் முன்வராத நிலையில், அரசின் வழிகாட்டுதலுடன் உடல்களை அடக்கம் செய்கின்றனர் இஸ்லாமிய அமைப்புகள்.
இப்பணியில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்கள், தங்கள் குடும்பத்துடன் இணையாது தனித்திருக்கின்றனர். மேலும் பங்களாதேஷ் சுகாதாரத்துறையின் வழிகாட்டல்படி, பாதுகாப்புடன், இறந்தவர் உடலை குளிப்பாட்டி சுத்தப்படுத்தும் பணியையும் செய்கினறனர். பின்னர் கிருத்துவ சடங்குகளின்படி அடக்கம் செய்கின்றனர். பங்களாதேஷ் கத்தோலிக்க பாஸ்டர் ஆல்பர்ட் ரொசாரியோ, இஸ்லாமிய அமைப்புகளுக்கு நன்றி தெரிவித்ததுடன், கிருத்துவர்கள் இதிலிருந்து கற்றுக்கொண்டு எதிர்காலத்தில் பணியாற்றுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
சமூகப் பணிகளும், விருந்தோம்பலும் உலகலாவிய முஸ்லிம்களிடம் பரவலாக காணப்படும் பண்புகளாகும். சிறு வயதில் இருந்தே புகட்டப்படும் இஸ்லாமிய கல்வியில், அது குறைந்தபட்சமாக இருந்தாலும் கூட இந்த பண்புகள் நிச்சயம் இடம்பெறும். ஒரு நாட்டில், முஸ்லிம்கள் பெரும்பான்மையோ அல்லது சிறுபான்மையோ, சமூகப் பணிகளில் அவர்களிடம் தொய்வு இருக்காது. நபியவர்களை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு முதல் ஆளாக வந்து நிற்பார்கள்.
யாரையும் திருப்திபடுத்தவோ, கவர்வதற்காகவோ அல்லது நல்எண்ணம் வரவைக்க வேண்டுமென்பற்காகவோ இவை மேற்கொள்ளப்படுவதில்லை.
மாறாக, மறுமை மட்டுமே நிரந்தரம் என்பதில் தீர்க்கமான நம்பிக்கை கொண்ட சமூகம், சமுதாயப் பணிகள் மூலம் இறைவனின் திருப்தியை மட்டுமே நாடி, நன்மைகளை கொள்ளையடிக்க கடும் சவால்களையும் எதிர்க்கொள்கிறது. இம்மகத்தான பணியில் ஈடுபட்டிருக்கிற சகோதர சகோதரிகளின் செயல்களை இறைவன் அங்கீகரித்து ஏற்றுக்கொள்வானாக....
1 comment:
காபீர்களை அடக்கம் செய்வதில் இருக்கும் ஆா்வம் சிறுபான்மையினருக்கு அரசியல் சமூக
உரிமைகள் வழங்குவதில் இல்லை.
பங்களாதேஷ் நாடு மத கொடுமைகளுக்கு புகழ் பெற்ற நாடு. இந்து கிறிஸ்தவ மக்கள் கணிசமாக வாழ்ந்த போதிலும் காலித்தனமாக முஸ்லீம்கள் நாட்டை கைபற்றி அரேபிய அடிமை தேசமாக -இசுலாமிய சமயகுடியரசாக அறிவித்து அரசு பதவிகளில் காபிர்கள் யாரும் இல்லாது பார்த்துக் கொண்டார்கள். பொது வாழ்விலும் இந்துக்களுக்கும் பெரும் அநீதி தான்.
இந்தியாவில் முஸ்லீம்களுக்கு இருக்கும் உரிமைகள் கல்வி உதவித்தொகை போன்ற சிறப்பு திட்டங்கள் பங்களா தேஷயில் இந்துக்களுக்கும் கிறிஷ்தவர்களுக்கும் உண்டு என்று தங்களால் அறிவிக்க முடியுமா ?
Post a Comment