Followers

Wednesday, October 31, 2018

ஒரு பள்ளியை இடித்தவர் 90 பள்ளியை கட்டியுள்ளார்.

ஒரு பள்ளியை இடித்தவர் 90 பள்ளியை கட்டியுள்ளார்.
1992ல் பாபரி பள்ளியை உடைப்பதில் மும்முரமாக நின்றவர் பல்பீர் சிங். இவரது நண்பரான ரன்வீரும் இவரோடு சேர்ந்து பள்ளியை இடித்தார். செய்த தவறுக்கு மனம் வருந்திய இருவரும் அடுத்த வருடமே இஸலாத்தை ஏற்றுக் கொண்டனர். பல்பீர் தனது பெயரை முஹம்மது அமீர் என்று மாற்றிக் கொண்டார். இவரது தம்பி மற்றும் இவரது குடும்பமே இன்று இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளது.
பல்பீர் தனது பேட்டியில் கூறுகிறார் 'எந்த ஒரு தவறை செய்பவருக்கும் அதன் குற்றவுணர்ச்சி அவர் மனதில் இருந்து கொண்டிருக்கும். அது போல்தான் எனது மனத்தையும் அந்த பாவச் செயல் அரித்துக கொண்டிருந்தது. சில நேரம் பைத்தியம் பிடித்தவனைப் போல் மாறிக் கொண்டிருந்தேன். குற்றவுணர்ச்சியிலிருந்து மீள்வதற்காக இடித்த பள்ளியைப் போல பல கட்ட வேண்டும் என்று முடிவெடுத்தேன். இன்று வரை 90 பள்ளிவாசல்களுக்கு மேல் கட்டியுள்ளேன். இஸ்லாத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளேன். என்னோடு பாபரி பள்ளியை இடித்த ரன்வீரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். எனது குடும்பம் முழுமையும் இன்று இஸ்லாத்தில் உள்ளது. எல்லா புகழும் இறைவனுக்கே!' என்கிறார்.
பள்ளியை இடித்த பல்பீர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். பள்ளி இடிக்க காரணமான அத்வானியின் மனதிலும் இறைவன் மாற்றத்தை ஏற்படுத்துவானாக!


No comments: