Followers

Tuesday, October 23, 2018

எதற்கும் இலாயக்கில்லாத மகன்!

எதற்கும் இலாயக்கில்லாத மகன்!
ஒரு மகன் என்னதான் மோசமானவனாக, உருப்படாதவனாக, எதற்கும் இலாயக்கில்லாதவனாக இருந்தாலும் பணமதிப்பழிப்புக்குப் பிறகு தன்னுடைய 90 வயது தாயை ஏடிஎம்முக்கு வெளியே வரிசையில் நிற்கத் துணிய மாட்டான் என்றே நான் நம்புகின்றேன்.
ஆனாலும்-
ஒரு உருப்படாத பையன் தன்னுடைய கையாலாகாத தனத்தை மறைப்பதற்காக தன்னுடைய 90 வயது தாயை ஏடிஎம்முக்கு வெளியே வரிசையில் நிற்க வைக்க முற்படுகின்றான் எனில், அதுதான் மார்க்கெட்டிங்.
அந்தத் தாயை நான் பெரிதும் போற்றுகின்றேன். மதிக்கின்றேன். ஆனால் அவளுடைய உருப்படாத பையன் அவளை வைத்துக்கொண்டு மார்க்கெட்டிங் செய்வதைத்தான் கண்டிக்கின்றேன்.
ஒவ்வொரு முறை உங்களுடைய தாயின் காலைத் தொட்டு நீங்கள் வணங்கும்போதும் அதனைப் படம் எடுக்கின்றீர்கள் எனில் அதுதான் மார்க்கெட்டிங். தாயைச் சந்திக்கப் போகின்ற போதெல்லாம் காமிரா மேனுடன் போவது மார்க்கெட்டிங்தான். இதனைக் கண்டிக்கின்றேன்.
-----------
நீங்கள் திருமணமானவர் எனில் ஏன் அதை மறைப்பதற்காக பெரும் முயற்சி எடுக்கின்றீர்கள்? திருமணம் செய்வது என்ன பெரும் பாவமா? மணமானவர் என்கிற நிலையை மறைப்பதற்காக ஏன் இத்துணை பிரயத்தனம்?
குடும்பம் இருந்தால்தான் ஊழல் செய்வார்கள். குடும்பமே இல்லை. யாருக்காகத்தான் பொருளீட்டுவார் என்கிற நிலையை மார்க்கெட்டிங் செய்கின்ற உத்திதான் இது. இதற்கு முன்பு வாஜ்பாய் பிரதமரான போதும் இப்படித்தான் சொன்னார்கள். அவருக்குக் கல்யாணமே ஆகவில்லைங்க. மனைவி இல்லை. குழந்தைகள் இல்லை. யாருக்காக ஊழல் செய்வார்?
ஒன்றைக் கவனியுங்கள். மணமானவர்கள் அனைவருமே திருடர்கள் கிடையாது. குடும்பம் இல்லாதவர்கள் எல்லோருமே யோக்கியர்களும் கிடையாது. கப்பர் சிங் கூட கல்யாணம் செய்யாதவர்தான். சம்பல் பள்ளத்தாக்கில் ஆட்டம் போட்ட கொள்ளையர்கள் அனைவருமே குடும்பம் இல்லாதவர்கள்தாம்.
கன்னையாவின் கர்ஜனை பரவசப்படுத்துகின்றது.
Azeez Luthfullah அவர்களின் பதிவிலிருந்து....


1 comment:

ASHAK SJ said...

இவரின் சித்தாந்தம் அப்படி, மக்களை கூறுபோட்ட எதேச்சதிகார கும்பலின் சித்தாந்தம், ஆங்கிலேயனுக்கு காட்டிக்கொடுத்த சித்தாந்தம், ஒரே வரியில் சொல்வதென்றால் இவர்கள் வாழ எதையும் செய்வார்கள்