Followers

Tuesday, October 16, 2018

காவல் துறையில் பணியாற்றிட ஹிஜாப் தடையில்லை இந்த பெண்ணுக்கு!

காவல் துறையில் பணியாற்றிட ஹிஜாப் தடையில்லை இந்த பெண்ணுக்கு!
கனடாவில் காவல் துறையில் பணியாற்றும் ஹனீன் உத்மான் ஹிஜாபுடனேயே தனது பணியை செய்கிறார். இவரது பணிக்கு ஹிஜாப் ஒரு தடையே அல்ல. நாகரிகத்தின் உச்சியில் இருக்கும் கனடா போன்ற நாடுகள் பெண்களுக்கு முக்காடு இட்டு அழகு பார்க்கின்றன.
ஆனால் தொன்மையான நாகரிகத்துக்கு சொந்தக்காரர்கள் என்று சொல்லும் நாம் திருமணம் ஆகாமலேயே கூடி வாழலாம் என்று சட்டம் இயற்றுகிறோம். குடும்பங்கள் சிதைவதைப் பற்றி ஆளும் வர்க்கமோ நீதித் துறையோ கவலைப்படுவதாக தெரியவில்லை.
இங்கு பள்ளியின் நடுவே அந்த இஸ்லாமிய பெண்மணி நின்று மத போதகரோடு பேசிக் கொண்டிருப்பதை பார்க்கிறோம். பெண்கள் பள்ளிக்கு வருவதை இஸ்லாம் தடை செய்யவில்லை என்பதையும் இதிலிருந்து அறிகிறோம். சபரி மலை கோவிலுக்கு பெண்களை அனுமதிப்பது கூடுமா? கூடாதா? என்று சர்ச்சை செய்து கொண்டிருக்கிறோம் நமது நாட்டில். ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களை பள்ளி வாசலுக்குள் அனுமதித்து புரட்சியை ஏற்படுத்தியது இஸ்லாம்.


No comments: