Followers

Saturday, October 13, 2018

வைர முத்து - சின்மயி விவகாரம்!

வைர முத்து - சின்மயி விவகாரம்!
14 வருடங்களுக்கு முன்பு சின்மயி வைரமுத்துவால் பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கப்பட்டாராம். அந்த நேரத்தில் இதனை பெரிதாக்கினால் தனக்கு சினிமா பட வாய்ப்புகள் குறைய வாய்ப்புண்டு என்பதால் கள்ள மவுனியாக இருந்து விட்டு இப்போது வாய் திறப்பதேன். இவர் சொல்லும் சம்பவத்துக்கு பிறகு நடந்த இவரது திருமண வரவேற்புக்கு அழைத்த போது இவரது பாலியல் தொந்தரவு ஞாபகம் வரவில்லையா? தற்போது சினிமா பட வாய்ப்புகள் முன்பு போல் இல்லை: இனி எதை வேண்டுமானாலும் பேசலாம் என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் இல்லையா?
ஏ ஆர் ரஹ்மான் குடும்பமும், சின்மயி குடும்பமும் அடிக்கடி சந்தித்துக் கொள்வர். அப்போதாவது வைர முத்து பிரச்னையை ரஹ்மானிடம் கொண்டு சென்றிருக்கலாமே. அப்போதே ஏ ஆர் ரஹ்மான் கண்டித்திருப்பாரே? இப்போது பிரச்னையை கையிலெடுப்பது ஏதோ உள் நோக்கம் கொண்டதாகவே தெரிகிறது.
பொதுவாக கூத்தாடிகளின் இந்த சினிமா துறையானது 90 சதவீதம் அசிங்கங்களை தன் மீது படரவிட்டிருக்கும் துறை. அதிலும் பெண்களின் கற்புக்கு இங்கு மதிப்பேதும் இல்லை. புதிதாக வாய்ப்பு கேட்டு வரும் பெண்கள் புரோக்கர், லைட் பாய், டைரக்டர், தயாரிப்பாளர், கதாநாயகன் என்று பலராலும் சீரழிக்கப்பட்டுத்தான் முடிவில் கதாநாயகியாக வலம் வர முடிகிறது. இது ஒளிவு மறைவு இல்லாமல் பகிரங்கமாகவே நடைபெறுகிறது. காசுக்காக மானத்தை விற்கும் விபசாரிகள் கூட ஒரு அறைக்குள்தான் தங்களின் தொழிலை செய்கின்றனர். ஆனால் இந்த சினிமா கூத்தாடிகளோ ஆயிரம் பேர் முன்னிலையில் கட்டி பிடித்து ஆடி, படுக்கையறை காட்சிகளையும் விரசமாக எடுத்து வெட்கமில்லாமல் அதனை வெளியிடவும் செய்கின்றனர். சென்சார் போர்டு மட்டும் இல்லை என்றால் உடலில் ஒட்டுத் துணி கூட இல்லாமல் நடிக்க தயாராகவே உள்ளனர் இந்த கூத்தாடிகள்.
ஒரு கொலையை எப்படி செய்யலாம்: அதனை போலீஸூக்கு தெரியாமல் எப்படி மறைக்கலாம்: ஒரு பெண்ணை எப்படி காதலிக்கலாம்: அப்படி காதலித்து விட்டு அவளை எப்படி நிர்கதியாக விட்டு விட்டு ஓடலாம் என்பதை எல்லாம் அழகாக பாடம் எடுத்து இந்த சமூகத்தை கெட்டுக் குட்டிச் சுவராக்கும் ஒரு துறைதான் இந்த சினிமா கூத்தாடிகளின் துறை. இவ்வளவு கேவலமான இந்த துறைக்கு வந்து விட்டு 'என்னை கிள்ளி விட்டான், என்னை பின்னால் தட்டி விட்டான்' என்று மூக்கை சிந்துவது பார்ப்போரை எள்ளி நகையாடச் சொல்லும்.
இங்கு நான் வைரமுத்துவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. அவர் புனிதர் என்றும் சொல்ல வரவில்லை. ஆண்களை பொருத்த வரை வாய்ப்பு கிடைக்காத வரை எல்லோரும் யோக்கியன்தான். தனிமையில் ஒரு பெண் இவனிடம் அகப்பட்டுக் கொண்டால் 90 சதமான ஆண்கள் அந்த பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளவே முயற்சிப்பர். இறைவன் அவ்வாறுதான் மனிதனை படைத்துள்ளான். இறைவனுக்கு முற்றிலுமாக பயந்தவர்களே இந்த பாவத்திலிருந்து விடுபடுவர். அரசியல்வாதிகள், ஆன்மீக வாதிகள், விளையாட்டு வீரர்கள் என்று அனைவருமே சருக்கி விடுவது இந்த பெண் பிரச்னையில்தான்.
எனவே பாலியல் தொல்லைகள் குறைய வேண்டுமானால் முதலில் பெண்களின் ஆபாச ஆடைகளுக்கு தடை விதியுங்கள். ஆண்களும் பெண்களும் சேர்ந்து பணிபுரியாத அளவில் பள்ளி கல்லூரிகளை தனித் தனியாக மாற்றுங்கள். அலுவலகங்கள், மற்றும் தொழிற்சாலைகளிலும் ஆண்களையும் பெண்களையும் தனித் தனியாக மாற்றுங்கள். அதிக பட்சமாக இரு பாலாரும் சந்திக்கும் வாய்ப்புகளை குறையுங்கள். சட்டத்தை கடுமையாக்குங்கள். இது சாத்தியப்படாத ஒன்றல்ல. சவுதி அரேபியால் இதனை நடைமுறை படுத்தியுள்ளார்கள். சவுதியிலும் ஒன்றிரண்டு தவறுகள் நடைபெறுகிறது. அது பெண் சம்மதத்துடனேயே நடக்கிறது. வலுக்கட்டாயமாக இங்கு எந்த பெண்ணும் சீண்டப்படுவதில்லை. சீண்டினால் கை போய் விடும், தலை போய் விடும் என்று சவுதியின் சட்டத்துக்கு பயப்படுகின்றனர். இந்த நிலை இந்தியாவுக்கு வந்தால் அதன் பிறகு பாருங்கள் இரவு 12 மணிக்கும் பெண்கள் தனியாக செல்லலாம்.


2 comments:

Dr.Anburaj said...

எனவே பாலியல் தொல்லைகள் குறைய வேண்டுமானால் முதலில் பெண்களின் ஆபாச ஆடைகளுக்கு தடை விதியுங்கள்.
---------------------------------------------------------------
இப்படி ஒரு சட்டம் அவசியம் தேவை.
----------------------------------------------------------
இந்த ஆலோசனையும் முக்கியமானது.

ஆண்களும் பெண்களும் சேர்ந்து பணிபுரியாத அளவில் பள்ளி கல்லூரிகளை தனித் தனியாக மாற்றுங்கள். அலுவலகங்கள், மற்றும் தொழிற்சாலைகளிலும் ஆண்களையும் பெண்களையும் தனித் தனியாக மாற்றுங்கள். அதிக பட்சமாக இரு பாலாரும் சந்திக்கும் வாய்ப்புகளை குறையுங்கள். சட்டத்தை கடுமையாக்குங்கள். இது சாத்தியப்படாத ஒன்றல்ல. சவுதி அரேபியால் இதனை நடைமுறை படுத்தியுள்ளார்கள். சவுதியிலும் ஒன்றிரண்டு தவறுகள் நடைபெறுகிறது. அது பெண் சம்மதத்துடனேயே நடக்கிறது. வலுக்கட்டாயமாக இங்கு எந்த பெண்ணும் சீண்டப்படுவதில்லை. சீண்டினால் கை போய் விடும், தலை போய் விடும் என்று சவுதியின் சட்டத்துக்கு பயப்படுகின்றனர். இந்த நிலை இந்தியாவுக்கு வந்தால் அதன் பிறகு பாருங்கள் இரவு 12 மணிக்கும் பெண்கள் தனியாக செல்லலாம்.
--------------------------------------------------------------------------

நல்லகருத்து.நன்றி.பாராட்டுக்கள்.

ASHAK SJ said...

அன்புராஜின் உருப்புடியான கருத்துக்கு வாழ்த்துக்கள்