Followers

Monday, October 15, 2018

புனித மக்கா மதினா நகரங்களுக்கிடையேயான ரயில் சேவை

புனித மக்கா மதினா நகரங்களுக்கிடையேயான ரயில் சேவை துவங்கி விட்டது. இனிப்பு வழங்கி பயணிகளை அழகுற வரவேற்கின்றனர். இனி ஹஜ் மற்றும் உம்ரா காலங்களில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிபார்க்கலாம்.
நம் நாட்டு ரயில்வே துறையையும் இங்கு ஒப்பிட்டு பார்த்தேன். குடும்பத்தோடு ஆக்ரா சென்றிருந்தபோது டெல்லி செல்ல ரயிலுக்காக காத்திருந்தோம். அடுத்த ட்ராக்கில் ஒரு ரயில் 20 நிமிடம் வந்து நின்று விட்டு சென்றது. அந்த வண்டி சென்றவுடன் அந்த ரயில்வே ட்ராக்கில் மனித மலம் எங்கும் காணப்பட்டது. 10 தொழிலாளர்கள் மண்ணைக் கொண்டு அதனை மூடி பிறகு கூடையில் சுமந்து சென்றார்கள். எங்களுக்கு குமட்டல் வந்தது. பிளாட்பாரங்களில் மலம் கழிக்கக் கூடாது என்ற சிற்றறிவு கூட எந்த பயணிக்கும் இல்லை. விண்வெளிக்கு ராக்கெட்டை எல்லாம் விடுகிறோம். ரயிலில் மலம் தண்டவாளத்தில் விழாமல் இருக்க ஒரு கண்டுபிடிப்பை இவர்களால் நடைமுறைப்படுத்த முடியவில்லை. மனிதர்கள் மலம் அள்ளும் வழக்கத்தையும் குறைப்பதாக இல்லை. மோடி டிஜிட்டல் இந்தியா என்று வாய் கிழிய கத்திக் கொண்டுள்ளார்.





No comments: