ஐந்து டன் தங்கம் கொடுத்த உஸ்மான் அலி கான்!
இந்தியா வெள்ளையரிடமிருந்து விடுதலையானவுடன் பெரும் பொருளாதார சிக்கலை எதிர் கொண்டது. பாகிஸ்தானோடு போரிட்டு வெற்றி கண்டது. அந்த போரினால் எழுந்த இழப்பு. ஹிந்து முஸ்லிம் கலவரத்தினால் ஏற்பட்ட இழப்பு. பாகிஸ்தான் பிரிவினையால் ஏற்பட்ட இழப்பு: என்று ஒன்றன் பின் ஒன்றாக வந்தன. இந்த நேரத்தில் சீனாவும் தனது பங்குக்கு வாலாட்ட ஆரம்பித்தது. ஏற்கெனவே பொருளாதாரத்தி நொடித்திருந்த இந்தியாவுக்கு சீனாவோடு போர் தொடுக்க பொருளாதாரம் இல்லை. அன்றைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி வானொலியில் நிலைமையை விளக்கி மக்களிடம் பொருளாதாரத்தை வாரி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார். நாட்டு மக்கள் பொருளாதாரத்தை அள்ளி கொடுத்தனர். இந்த நேரத்தில் உலக கோடீஸ்வரர்களில் ஒருவராக அன்று திகழ்ந்த ஹைதராபாத் நிஜாம் உஸ்மான் அலி பிரதமரை தொடர்பு கொண்டு தான் உதவ விரும்புவதாக சொன்னார். நிஜாமை சந்திக்க பிரதமர் ஹைதராபாத் விரைந்தார். யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 5 டன் தங்கக் கட்டிகளை இந்திய பாதுகாப்புக்காக அளித்தார் ஹைதராபாத் நிஜாம். இந்த உதவியால் இந்தியாவின் பாதுகாப்பு உறுதியானது. சீனாவும் பின்வாங்கியது.
இது ஒரு சம்பவம். இதுபோல் மறைக்கப்பட்ட சம்பவங்கள் ஓராயிரம். இவ்வாறு இந்திய விடுதலைக்காகவும், இந்திய பாதுகாப்புக்காகவும் தங்களின் சதவீதத்துக்கும் அதிகமாக தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தந்த இஸ்லாமியர்களை பார்த்து ஒரு வந்தேறி கூட்டம் 'நீங்கள் பாகிஸ்தானுக்கு ஓடுங்கள்' என்கிறது.
7 comments:
நாட்டு மக்கள் பொருளாதாரத்தை அள்ளி கொடுத்தனர். இந்த நேரத்தில் உலக கோடீஸ்வரர்களில் ஒருவராக அன்று திகழ்ந்த ஹைதராபாத் நிஜாம் உஸ்மான் அலி பிரதமரை தொடர்பு கொண்டு தான் உதவ விரும்புவதாக சொன்னார். நிஜாமை சந்திக்க பிரதமர் ஹைதராபாத் விரைந்தார். யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 5 டன் தங்கக் கட்டிகளை இந்திய பாதுகாப்புக்காக அளித்தார் ஹைதராபாத் நிஜாம். இந்த உதவியால் இந்தியாவின் பாதுகாப்பு உறுதியானது. சீனாவும் பின்வாங்கியது.
----------------------------------------------------------------------------------------
1.நாட்டு மக்கள் பொருளாதாரத்தை அள்ளிக்கொடுத்தனா்.
பாராட்டுக்குரியது. பெரும்பாலும் ஏழைகள். இவர்கள் எவ்வளவு கொடுத்தாலும் அது பெரும் தியாகம்.
-----------------------------------------------------
ஹைதராபாத் நிஜாம் எத்தனை கோடி கொடுத்தாலும் அது அவா் ஒன்றும் கல் உடைத்து சம்பாதித்த பணம் அல்ல.பதவி மக்களின் அறியாமை அரச அதிகாரம் ஆகியவற்றை கொண்டு சுலபமாக சம்பாதித்த பணம். வருமானவரி சோதனை யிட்டாலே 5 டன் னுக்கு மேல் கைபற்றவலாம். ஹைதராபாத் நிஜாம் கொடுத்தது சாதாரண நிகழ்வு என்பது எனது கருத்து.
30 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம். உள்ளுா் கோவில் நிா்வாகத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு கட்டட வசதிகள் குறைவாக இருந்தது. கூடுதலாக சோ்க்கை .எனவே ஓட்டுக் கட்டடம் கொண்ட 5 வகுப்பறைகள் கட்ட முடிவு செய்தோம்.பனை மரங்கள் மற்றும் பணங்கள் நன்கொடை கேட்டு வீடு வீடாகச் சென்று தர்மம் கேட்டோம். ஒரு கணவன் இல்லாத குழந்தைகள் இல்லாத தினக்கூலி செய்யும் சற்று வயதான பெண்மணி வீட்டில் தர்மம் கேட்க பயந்து கடந்து சென்று விட்டோம். அந்த பெண்மணி வலிந்து வந்து எனக்கு சொந்தமான 30 சென்ட விவசாய இடத்தில் ஒரே ஒரு பனை மரம் உள்ளது. அதை இரண்டு மாதங்கள் கழித்து பள்ளிக்காக வெட்டிக்கொள்ளுங்கள் என்றாா். அனைவரும்அசந்து விட்டோம். 30 ஆண்டுகள் கழிந்த பின்னும் என்மனதில் இரத்தினம் என்ற அந்த அம்மையாா் நிறைந்து உள்ளாா். பனைமரம் தந்து 8 ஆண்டுகள் கழித்து இரத்தினம் அம்மையாா் அமரரானாா். பள்ளிக் கூட நிா்வாகிகள் அனைவரும் அவரது நல்லடக்கத்தில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினோம்.
இரத்தினம் அம்மாள் தியாகத்தின் முன் ஹைதராபாத் நிஜாம் அளித்த பணம் அல்லதமானது
மன்னரின் பொருள் இல்லையென்றாலும், கொடுப்பதற்கு மனம் வேண்டும், எல்லா வளங்களையும் தன் படோபட வாழ்க்கைக்கும் பயன்படுத்தாமல் நாட்டுக்கு கொடுத்தது ஏன் ?
ஆம் கொடுத்தவரைக்கும் நாம் பாராட்டுதல்தான் நல்ல பண்பு.பாராட்டுவோம்.வாழ்க நிஜாம். பாக்கிஸ்தானோடு இணைவேன் என்று ஒற்றைக்காலில் நின்று, ரசாக்கர்களை தூண்டி விட்டு கலகம் விளைவித்து ஹைதரபாத்தில் உள்ள இந்துக்களை கொன்று குவித்த புண்ணியவான் இவரா ?
அடிச்சி விடு, ஹைட்ரபாத் நிசாம் தான் யாருடனும் சேரமாட்டேன் என்றுதான் சொன்னாரே தவிர பாகிஸ்தானுடன் சேருவேன் என்றும் சொல்லவில்ல்லை , ஹிந்துக்களை கொல்லவும் இல்லை
better luck next time with new lies
ரசாக்கா்களுடன் இந்திய போலீஸ் மோதல் நடக்கவேயில்லையா ?
ஆஷிக்.
அண்டப்புளுகு ஏன் புளுகுக வேண்டும்.
நான் புழுகவில்லை, ஐதராபாத் நிஜாம் இந்தியாவோடு சேரவிருப்பம் இல்லை என்றுதான் சொன்னார் , அதை ஏற்கனவே ஏற்றுகொண்டாகிவிட்டது ,
Post a Comment