Followers

Wednesday, October 24, 2018

நாம் திருந்தவில்லை என்றால் நமக்கு மோடியும் பழனிச்சாமியுமே கதி.

இட ஒதுக்கீடு உன்னுடைய பார்வை இன்னும் தெளிவடையவில்லை என்று தோன்றுகிறது.
இட ஒதுக்கீடு பற்றி விமர்ச்சிப்பவர்கள் வரலாற்று பார்வையற்றவர்களாக இருக்கிறார்கள்.
இரெண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அந்தந்த நாட்டு அரசர்களை யாகங்கள் செய்துவளைத்துப்போட்டு, அரசனைமட்டும் சத்திரியன் என்று புகழ்ந்து அவனையும் தனக்கு கீழே வைத்துக்கொண்டு, மான்ய நிலங்களையும் பசுக்களையும் தானமாக வாங்கிக்கொண்டு, கல்வியை அவர்களுக்கு 100% ஒதுக்கீடாக வைத்துக்கொண்டு, அவர்களுக்கென்று ஒரு தெரு வைத்துக்கொண்டு அங்கே செருப்பு போட்டு நடக்க கூடாது என்றெல்லாம் ஆணவம் காட்டிக்கொண்டிருக்கும் அந்த சிறுபான்மைதான் இட ஒதுக்கீடு வரக்காரணம்.
அவர்கள் நிறைவேற்ற எண்ணி இருப்பது மனுதர்மம். அவர்களுக்கு அரசர்கள் இருந்தவரை அது சுலபமாக இருந்தது. 100% அவர்களுக்குத்தான் இட ஒதுக்கீடு. அவர்களுக்கும் மட்டுமே கல்வி. அரசன் போரிடுவான். விவசாயி மகன் விவசாயிதான். நெசவாளி மகன் நெசவாளிதான். செருப்பு தைத்தவர்கள் செருப்புதான் தைக்க வேண்டும். முடிவெட்டுபவர்கள் முடித்தான் வெட்டவேண்டும். கல்வி வேறு யாருக்கும் இல்லை.
இதை மாற்றியவர்கள் வெள்ளைக்காரர்கள்தான். அவன் ஆட்சியில் அனைவருக்கும் ஒரு நீதிதான். அதனால்தான் அவனுடைய ஆட்சியில் இருந்து விடுதலை அடையவேண்டும் என்று போராடினார்கள். அப்போதுதான் இந்த சிறுபான்மை மறுபடியும் தங்கள் தர்மத்தை கொண்டுவரமுடியும்.
இந்தியா என்று ஒரு நாடு உருவாக்கப்பட்டு நமது சொந்த சட்டங்கள் உருவாக்கப்பட்டபோது சட்டங்களை இயற்றிய நமது சான்றோர்கள் 2000 ஆண்டுகளாக மறுக்கப்பட்ட சமூக நீதியை நிலைநாட்டவே இட ஒதுக்கீடு.
ஒருவன் வீதியில் நடந்தாலே தீட்டு என்ற நிலைமாறி இப்போது எல்லோரும் அவர்கள் விரும்பியதை செய்யலாம் என்பதே இந்த ஜனநாயகத்தில் வெற்றிதானே.
மனித குலத்தில் பிறந்த அனைவரும் சமம் என்பதுதானே இயற்கையின் நியதியாக இருக்க முடியும்?.
ஏற்றதாழ்வுகள் எப்படி வந்தன. அவன் தலையில் பிறந்தான் என்கிறான். தலையில் எப்படி பிறக்க முடியும். மார்பில் எப்படி பிறக்க முடியும்?, தொடையில் எப்படி பிறக்க முடியம் ?, காலில் எப்படி பிறக்க முடியும் ?. இப்போதும் அப்படி பிறக்கிறார்களா ?. அப்படிப்பிறந்தால் நான் அவர்கள் சொல்லும் ஏற்றத்தாழ்வை ஏற்றுக்கொள்கிறேன். நீயும் நானும் சென்று சரிபார்க்க முடியாத காலத்தில் பிரம்மாவிடம் நடந்ததாக கூறுவதை நமது பகுத்தறிவு ஏற்கிறதா ?
பெரியார் தலைவர் மட்டும்வராது போயிருந்தால், அவர் சிந்தனைகளை நடைமுறை படுத்திய காமராஜர் போன்ற தலைவர்கள் இல்லை என்றால் இன்று நாமெல்லாம் நமது குலத்தொழில்களைத்தான் செய்துகொண்டிருந்திருப்போம். பள்ளிக்கூடம் எங்கேபோவது. அவர்களுக்கு நிகராக எப்படி அலுவலகங்களில் வேலைசெய்வது. இப்போதும் அவர்களுடைய அரசியல் இருந்துகொண்டுதான் இருக்கிறது. மறுக்க முடியுமா.
உயர்சாதி என்று அவர்கள் ஒருபுறம் தங்களை சொல்லிக்கொள்ள, ஒடுக்க பட்டவர்களுக்கு உயர் சாதியினருக்கும் இடையில் இருக்கும் அவர்கள் செய்யும் கொடுமைகள் வேறு.
சமூக நீதி நூற்றாண்டுகளாக மறுக்கப்பட்டவர்களை கைதூக்கிவிடத்தான் இட ஒதுக்கீடு. இட ஒதுக்கீடு சிலருக்கு வாய்ப்புகளை பறிக்கலாம். அதுதானே ஒடுக்கப்பட்டவர்களுக்கும்?. வாய்ப்புகள் நூற்றாண்டுகளாக மறுக்கப்பட்டவர்கள்தானே ஒடுக்க பட்டவர்களும். மனசாட்சியும் சிந்தித்தால் நாம் இந்த இடத்துக்குத்தான் வருவோம்.
மேலும், நான் நாம் செய்யும் எதுவும் professionதான். ஜோதிடம் பார்ப்பதும், மந்திரம் ஓதுவதும் profession தான் டாக்டர் , என்ஜினீயர் மட்டும் profession அல்ல. நான் டாக்டர் ஆவதற்கு முயற்சி செய்யவில்லை. நான் வணிகவியலில்தான் சேர்ந்தேன்.
இது உனக்கும் எனக்கும் ஆனது மட்டும் அல்ல. பொதுவெளியில் இருக்கும் நாம் நம்மை சூழ்ந்திருக்கும் சமூகத்திற்கும் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். நம்மை சுற்றி சூழ்ந்திருக்கும் இருள் பற்றி நாம் முணு முணுத்து கொண்டிருப்பதைவிட ஒரு விளக்கேற்றி வைப்பது மேல் அல்லவா?
பகுத்தறிவு என்ற விளக்கை அனைவரும் ஏந்தவேண்டும். இவன் வந்தால் நன்றாக இருக்கும் அவன்வந்தால் நன்றாக இருக்கும் என்று மாறி மாறி வோட்டுப்போடுவதை விட , நம்முடைய இன்றைய நிலைக்கு நாம்தான் காரணம் என்று உணர்ந்து கொண்டாலே நம்மை ஆள்பவன் திருந்துவான். நாம் திருந்தவில்லை என்றால் நமக்கு மோடியும் பழனிச்சாமியுமே கதி.

12 comments:

Dr.Anburaj said...

இந்தியாவில் முஸ்லீம்கள் உயா்சாதி மக்கள். தீண்டாமை பின்பற்றி பிற மக்களை நசுக்கி வாழ்ந்தவா்கள். என்பது உண்மை.எ னது ஊரில் திண்டாமையை எங்கள் மேல் திணித்து இறுமாந்து வாழ்ந்தவா்கள் முஸ்லீம்கள்தான். முஸ்லீம்கள் தோட்டத்தில் வேலைக்கு செல்லும் இந்து பெண்களுக்கு முஸ்லீம்கள் கொடுத்த தொல்லை காரணமாக ஒரு கோடீஸ்வர முஸ்லீமின் 24 வயது மகன் 17 துண்டுகளாக வெட்டப்பட்டான். பாதிக்கப்பட்ட பெண்ணால்.

அன்று எங்கள் ஊரில் சமூக நீதி மலர்ந்தது. ஏராளமான மாற்றம் வந்தது. எந்த இந்து பெண்ணும் முஸ்லிம்கள் தோட்டத்திற்கு வேலைக்குச் செல்லவில்லை. போராட்டம் 7 மாதங்கள் நீடித்தது.முஸ்லீம்கள் பல் உடைந்து பணிந்து கூனி குறுகி நின்றார்கள். சமாதானம் ஆனாலும் பெணகள் முஸ்லீம்களை தவிர்த்தே வந்தாா்கள். அப்படீயே எற்பட்ட மாற்றம் எங்களின் பொருளாதார வளா்ச்சிக்கு வித்திட்டது.

முஸ்லீம்களுக்க அடிமையாக முதலாளி என்று அழைக்க மறுத்தது
முதல்நடவடிக்கை.

தொடா்ந்தது பல. இன்று நாங்களும் மாட மாளிகை கட்டி பணபலம் ஆள்பலம் கல்வி பலம் ஆன்மீக பலம் பெற்று முஸ்லீம்களைவிட சிறப்பாகக வாழ்ந்து வருகின்றோம்.

பார்பன தீண்ாமையை நான் அறிவவில்லை.

Dr.Anburaj said...

இட ஒதுக்கீடு உன்னுடைய பார்வை இன்னும் தெளிவடையவில்லை என்று தோன்றுகிறது.
இட ஒதுக்கீடு பற்றி விமர்ச்சிப்பவர்கள் வரலாற்று பார்வையற்றவர்களாக இருக்கிறார்கள்.
இரெண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அந்தந்த நாட்டு அரசர்களை யாகங்கள் செய்துவளைத்துப்போட்டு, அரசனைமட்டும் சத்திரியன் என்று புகழ்ந்து அவனையும் தனக்கு கீழே வைத்துக்கொண்டு, மான்ய நிலங்களையும் பசுக்களையும் தானமாக வாங்கிக்கொண்டு, கல்வியை அவர்களுக்கு 100% ஒதுக்கீடாக வைத்துக்கொண்டு, அவர்களுக்கென்று ஒரு தெரு வைத்துக்கொண்டு அங்கே செருப்பு போட்டு நடக்க கூடாது என்றெல்லாம் ஆணவம் காட்டிக்கொண்டிருக்கும் அந்த சிறுபான்மைதான் இட ஒதுக்கீடு வரக்காரணம்.
அவர்கள் நிறைவேற்ற எண்ணி இருப்பது மனுதர்மம்
-------------------------------------------------------------------
இந்திய மண்ணில் பிறந்தாலும் அரேபிய விசுவாசத்தோடு வாழும் சுவனப்பிரியன் வேறுவிதமாக கருத்தை பதிவு செய்வாா் என்று நான் நினைக்கவில்லை.இந்து இயக்கங்கள் இந்து சமூகத்தின் நல்வாழ்விற்கு பாடுபடுகின்றன.மதமாற்றம் ஒரு பேரபாயம். மதம்மாறிப்போன காந்தாரம் பஞ்சாப் வங்காளம் இன்று இந்துஸ்தானத்தில் இல்லை. இந்துக்களின் பகை நாடாக அவைகள் மாறியுள்ளது.மதம்மாறிய இந்துக்கள் மதம்மாறாத இந்துக்களை அழிக்க அலைகின்றாா்கள். இந்த அவலம் தொடர முடியாது. ஒரு முஸ்லீம்க்கு இது சந்தோசத்தை தரும். ஆனால் சரித்திரம் அறிந்த ஒரு இந்து இதை விரும்ப முடியாது. மதம்மாறிப்போன மோன் லாசரஸ் தமிழ் பண்பாட்டின் அடையாளமாக இருக்கும் கோவில் கோபுரங்களை சாத்தானின் அரண்கள் என்று பகிரங்கமாக இழிவாக விமா்சனம் செய்கின்றாா். ஒரு அரசியல் கட்சிக் காரனுக்காவது அதை தவறு என்று கண்டிக்க தைரியம் இருக்கின்றதா ? இந்துக்கள் மனதால் இன்றம் முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவா்களுக்கும் அடிமைகள்தாம்.
இதை மாற்ற இந்து இயக்கங்கள் முயன்று வருகின்றோம். சமூக வெறுப்பையும் வீண் பயத்தையும் முஸ்லீம்கள் மத்தியில் பரப்ப வேண்டாம்.

திரு.நரோந்திர மோடி அவர்களை பிரதமா் ஆக்கியது அல்லாதான்.
திரு.பழனிச்சாமி அவர்களை முதல் மந்திரி ஆக்கியதும் அல்லாதான் .

மறுக்க முடியுமா ?

ASHAK SJ said...

நீ சூத்திரனா? இல்லையா? முதலில் தெளிவுபடுத்து

ASHAK SJ said...

நரேந்திரமோடியை யும் பழனிச்சாமியையும் அதிகாரத்தில் கொண்டுவந்த அல்லாஹ் வை மட்டும் எப்போ வணங்கப்போகிறீர்? மக்கள் தவறுகளை எதிர்க்காதபோது மோசமான ஆட்சியாளர்களை இறைவன் கொடுப்பான் என்பதற்கான சாட்சி

suvanappiriyan said...

சகோ அசாக்!

சூத்திரன், மூடன் என்று வார்த்தைகளை அடிக்கடி உபயோகப்படுத்துகிறீர்கள். இஸ்லாம் இவ்வாறு விவாதிக்க நமக்கு கற்றுத் தரவில்லை. இதனால் நடுநிலை ஹிந்துக்களும் இந்துத்வாவை ஆதரிக்கும் நிலை ஏற்படும். புரிந்து கொளிவீர்கள் என்று நினைக்கிறேன்.

ASHAK SJ said...

ஒன்று செய்யுங்கள், அன்புராஜின் முட்டாள் தனமாக கருத்துக்களை தடைசெய்யுங்கள், நானும் சூத்திரன் மூடன் என்ற வார்த்தையை நிறுத்திக்கொள்கிறேன்

Dr.Anburaj said...

ஆஷிக் அவர்களை கண்டித்து பதிவு செய்ததற்கு மிக்க நன்றி.

ASHAK SJ said...

ஒன்று செய்யுங்கள், அன்புராஜின் முட்டாள் தனமாக கருத்துக்களை தடைசெய்யுங்கள், நானும் சூத்திரன் மூடன் என்ற வார்த்தையை நிறுத்திக்கொள்கிறேன்

மேலே உள்ள கருத்தை பதிவு செய்ததற்கு நன்றி,

Dr.Anburaj said...

அசக் எப்படியோ தனக்கு தோன்றிய வண்ணம் பதிவு செய்யட்டும்.விடுங்கள். உள்ளத்தனையது உயா்வு.

மனதில் சாக்கடையிருப்பவர்களுக்கு வார்த்தையில் நாற்றம் வரும்தான்.

ASHAK SJ said...

ஈனனே, என் கருத்துக்கள் நடுநிலையான வரலாற்று கருத்துக்கள், ஆனால் நீ பதிவு செய்வதோ கட்டுக்கதையும் கற்பனைகளையும் தான், அதனால் நீ சொன்னது உனக்குத்தான் எனக்கல்ல

Dr.Anburaj said...

ஈனனே,ஈனனே,ஈனனே,ஈனனே,ஈனனே,ஈனனே,ஈனனே,ஈனனே,ஈனனே,ஈனனே,ஈனனே,ஈனனே,ஈனனே,ஈனனே,ஈனனே,ஈனனே,ஈனனே,ஈனனே,ஈனனே,ஈனனே,ஈனனே,ஈனனே,ஈனனே,ஈனனே,-
----------------------------------------------------------------
நன்றி.ஆசக்
உள்ளத்தனையது உயா்வு.தங்களின் பதிவுகள் தங்களை சுத்திரன் என்று காட்டுகின்றது.

ASHAK SJ said...

சூத்திரன் என்று சொல்லியும் பார்ப்பன மதத்தை தூக்கி பிடிக்கும் நீ ஈனனா? இல்லை நான் ஈனனா?