Followers

Thursday, October 18, 2018

'ஹதியாவுக்கு இருந்தது காதல்தான்: லவ் ஜிஹாத் அல்ல'

'ஹதியாவுக்கு இருந்தது காதல்தான்: லவ் ஜிஹாத் அல்ல'
சில ஆண்டுகளுக்கு முன்பு ஹதியா இஸ்லாமிய கொள்கைகளால் கவரப்பட்டு மன மாற்றம் அடைந்து இஸ்லாத்தை தழுவிக் கொண்டார். ஒரு இஸ்லாமியரையே திருமணம் முடிப்பேன் என்று உறுதியாக இருந்து ஷஃபின் ஜஹான் என்ற இளைஞரை மணந்து கொண்டார். ஆனால் இந்துத்வாவை சேர்ந்த ஹதியாவின் தந்தை 'தனது மகள் லவ் ஜிஹாதால்' மிரட்டப்பட்டு மதம் மாற்றப்பட்டுள்ளார் என்று வழக்கு தொடர்ந்தார். மனித வெடி குண்டாக மாறவும் வாய்ப்புள்ளது என்றார். சில காலம் நீதி மன்ற உத்தரவால் தனது வீட்டில் சாமியார்களை கொண்டு வந்து மன மாற்றம் ஏற்படுத்த முயற்சித்தார். எதுவும் பலிக்கவில்லை. ஹதியா உறுதியோடு இருந்தார்.
இன்று தீர்ப்பு வந்துள்ளது. 'ஹதியாவுக்கு இருந்தது உண்மையான காதல்: அது லவ் ஜிஹாதல்ல' என்று. உண்மையை வெளிக் கொண்டு வந்த National Investigation Agency’s (NIA) க்கு பாராட்டுக்கள். லவ் ஜிகாத்திற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லையென்று தெரிவித்துள்ள இவ்வமைப்பு, வழக்குகளை முடித்து கொள்வதால் மேற்கொண்டு உச்ச நீதிமன்றத்தை அணுக போவதில்லை என்றும் தெரிவித்துள்ளது. 'லவ் ஜிஹாத்' என்ற பெயரில் உள்ள அனைத்து வழக்குகளும் இதன் மூலம் தள்ளுபடி செய்யப்படும்.
எல்லா புகழும் இறைவனுக்கே!
தகவல் உதவி
ஹிந்துஸ்தான் டைம்ஸ்
18-10-2018


1 comment:

ASHAK SJ said...

ஹாதியாவுக்காக முழு மூச்சாக பல இயக்கங்கள் உதவினாலும் பாப்புலர் பிரண்டின் உதவி மகத்தானது, உச்சநீதிமன்றம் வரை போய் ஹாதியாவுக்காக உதவியதால் ஜார்கண்டில் தடைசெய்யப்பட்டது, தடையை உடைந்தது பிஜேபி அரசின் முகத்தில் கறியை பூசியது பாப்புலர் பிரண்ட்