கோடீஸ்வரன் நிகழ்ச்சியையும், கோன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியையும் நாம் பார்த்திருப்போம். அதே நிகழ்ச்சி அமெரிக்காவில் நடக்கிறது. போட்டியாளர் ஜான் 1 மில்லியன் டாலருக்கான கேள்விக்கு வருகிறார். 'லைஃப் லைன்' அவர் பயன் படுத்தி தனது உறவினர்களிடம் பதிலை பெறலாம். அவரும் 'லைஃப் லைன்' கேட்கிறார். அவருக்கு கொடுக்கப்படுகிறது. அதில் தனது தந்தையோடு கேள்விக்கான பதிலைக் கேட்காமல் 'தந்தையே.... இன்னும் சற்று நேரத்தில் ஒரு மில்லியன் அமெரிக்கன் டாலரை பரிசாகப் பெறப் போகிறேன்' என்ற செய்தியை மட்டும் சொல்லி விட்டு பரிசை தட்டிச் செல்கிறார். பரிசுக்கு தகுதியான நபர்தான்.
அடுத்து இதில் வரும் முதல் கேள்வி 'ஓரிறைக் கொள்கையை கடை பிடிக்காத மதம் எது?' என்று கேட்டு 1.இஸ்லாம் 2.ஜூதாயிஸம், 3. ஹிந்துயிஸம், 4. கிரிஸ்டியானிடி என்ற நான்கு ஆப்ஷன் வைக்கப்படுகிறது. போட்டியாளர் ஹிந்துயிஸத்தை தேர்ந்தெடுத்து 250000 பரிசை வெல்கிறார். ஒரு காலத்தில் ஓரிறைக் கொள்கையில் சிறந்து விளங்கிய இந்து மதம் இன்று பல தெய்வக் கொள்கையில் வீழ்ந்தது ஆரியப் படையெடுப்பால் என்பது நாம் அறிந்த வரலாறு.
No comments:
Post a Comment