சென்ற வெள்ளிக் கிழமை தவ்ஹீத் ஜமாத் ரியாத் மண்டலம் சார்பாக கிங் ஃபஹத் மெடிகல் சிட்டியில் மிகச் சிறப்பாக ரத்த தான முகாம் நடைபெற்றது. மொத்தம் 71 பேர் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்களின் குருதியை தானமாக கொடுத்தனர். 10க்கும் மேற்பட்ட நபர்கள் சில உடல் சார்ந்த பிரச்னைகளால் திருப்பி அனுப்பப் பட்டனர். காலை 7 மணியிலிருந்தே சகோதரர்கள் களத்தில் இறங்கி சுறு சுறுப்பாக ஆட்களை அழைத்து வருவதும் அவர்களுக்கு வழிகாட்டுதலுமாக இயங்கிக் கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் எனக்கும் ஒரு பொருப்பு கொடுக்கப்பட்டிருந்தது. குருதிக் கொடை கொடுக்க வருபவர்களின் சுய விபரம் ஒரு ஃபார்மில் பூர்த்தி செய்து அவர்களிடம் கையெழுத்து பெற்று உள்ளே அனுப்ப வேண்டும். அந்த பணியை நான் மேற்கொண்டேன். அந்த விண்ணப்ப படிவத்தில் 25க்கு மேற்பட்ட கேள்விகள் இருக்கும். சுகர், ப்ரஸ்ஸர் உள்ளதா? உணவு உட்கொண்டு விட்டீர்களா? மாத்திரைகள் தொடர்ந்து சாப்பிடுபவரா? இதற்கு முன் எப்போது ரத்த தானம் செய்துள்ளீர்கள்? போன்ற கேள்விகள் இருக்கும். அவை அனைத்திற்கும் ஆம், இல்லை என்று டிக் செய்து வருபவர்களை அனுப்ப வேண்டும். இந்து நண்பர்கள், பாகிஸ்தானிகள், மலையாளிகள் என்று பல தரப்பட்ட மக்கள் தங்களின் குருதியை கொடுக்க வந்திருந்தனர். கடைசியாக நானும் ரத்த தானம் செய்து விட்டு மாலை ஐந்து மணிக்கு வீட்டை அடைந்தேன்.
No comments:
Post a Comment