Followers

Saturday, October 13, 2018

மத்திய அரசே இந்துத்துவா கொள்கையை கையில் எடுப்பது?.......

செய்தியாளர்: மத்திய அரசே இந்துத்துவா கொள்கையை கையில் எடுப்பது என்பது ஆபத்தானது அல்லவா?
கி.வீரமணி: ஆபத்தானதல்ல. கலவரத்தை உருவாக்கக்கூடியது. இதுவரையில் அமைதிப் பூங்காவாக இருக்கக்கூடிய தமிழ்நாட்டில், கலவரத்தை ஒவ்வொரு வகையில் ஏற்படுத்துவது. பெரியார், அம்பேத்கர் சிலைகளை சீண்டுவது. அவர்களுடைய நோக்கம் என்னவென்றால், மதக் கலவரங்களையும், ஜாதிக் கலவரங்களையும் உருவாக்க வேண்டும் என்பதுதான். அதேநேரத்தில், இந்தக் கலவரங்களைத் தூண்டி விட்டவர்கள்மீது எந்த நடவடிக்கையும் கிடையாது. வெறும் கருவிகளைத் தண்டிக்கிறார்கள். துப்பாக்கியை தண்டிக்கக்கூடாது; துப்பாக்கியைப் பயன்படுத்திய கைகளைத்தான் தண்டிக்கவேண்டும்.
அதுபோன்று வருகின்ற நேரத்தில், எச்.ராஜாக்கள் காவல்துறையினரின் பாதுகாப்போடு உலாவருகிறார்கள். எஸ்.வி.சேகர்கள் உலாவருகிறார்கள். ஆனால், கருணாஸ் போன்றவர்கள், மன்னிப்பு கேட்ட பிறகும்கூட, வருத்தம் தெரிவித்த பிறகும்கூட, அவரை காவல்துறையினர் கைது செய்கிறார்கள். ஏனென்றால், கருணாஸ் முதுகு வெறும் முதுகாக இருக்கிறது; அவர்களுடைய முதுகில் பூணூல் தொங்குகிறது என்பதுதான் மிக முக்கியம்.
இந்த அரசாங்கம் முதுகெலும்போடு நடந்துகொள்ள வேண்டும். இரட்டை அளவுகோல் - மனுதர்ம ஆட்சியை நடத்தக்கூடாது. திராவிட ஆட்சி என்று சொல்லிக்கொண்டு, அம்மா ஆட்சி, அம்மா வழி என்று சொல்லிக்கொண்டு, இவர்களுடைய வழி என்பது டில்லி வழியிலேயே போய்க் கொண்டிருக்கிறார்கள். டில்லி உத்தரவிற்குக் கீழ்படிதல் என்பதைத் தவிர வேறு எதையும் செய்யாத அளவிற்கு இருக்கிறார்கள்.
ஆகவேதான், தமிழக அரசு இதில் தெளிவாக நடந்துகொண்டு, தங்களுக்கு உருவாகிக் கொண்டிருக்கின்ற கெட்ட பெயரைக் குறைத்துக் கொள்ளவேண்டும்; அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும்.
ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கும்மேலாக....
செய்தியாளர்: சாஸ்த்திரா பல்கலைக் கழகம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து உள்ளது என்று நீதிமன்றம் உத்தரவிட்டும், ஏற்கெனவே இருந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வில்லை; இப்பொழுது உள்ள அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்களே?
கி.வீரமணி: இதிலேயும் மனுதர்மம்தான். தஞ்சை செய்தியாளர்களாகிய நீங்கள் இதுபற்றி ஏராளமான செய்திகளை வெளியிட்டிருக்கிறீர்கள். உச்சநீதிமன்றம் வரையில் சென்றாகிவிட்டது. அவர்களும் சக பல்கலைக் கழகத்தினர்தான். நாங்கள் இதுவரையில் எந்த சட்ட மீறலும் இல்லாமல் நடந்துகொண்டிருக்கிறோம்.
இங்கே, இவ்வளவு பெரிய அக்கிரமம் ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு மேலே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் என்ன? தமிழக தலைமைச் செயலாளராக ஒரு பார்ப்பன அம்மையார் இருக்கிறார்; குருமூர்த்தி அய்யர் இந்தப் பல்கலைக் கழகத்திற்கு வருகிறார். ஆகவே, இந்தப் பல்கலைக் கழகத்திற்கு தனிச் சலுகை காட்டலாமா என்று நினைக்கிறார்கள்.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரையில் சென்று எல்லாம் வந்த பிறகுகூட, இப்படி நடந்துகொள்வது என்பது தவறு. இந்த அரசாங்கம் முதுகெலும்போடு நடந்துகொள்ளவேண்டும். எங்களைப் பொருத்தவரையில் அவர்களும் கல்வி நிறுவனங்களை நடத்துபவர்கள்தான். அதேநேரத்தில் அதனை சட்டப்படி செய்யவேண்டும். சட்டக் கல்லூரியை நடத்திக்கொண்டிருப்பவர்கள், சட்ட விரோதமாக நடத்துவோம் என்றால், அங்கே படிப்பவர்கள் எப்படி இருப்பார்கள் என்கிற கேள்வி எங்கும் பரவலாக இருக்கிறது.
ஆகவேதான், அவர்களாவது தங்களுடைய பெயரினைக் காப்பாற்றிக்கொள்ள எவ்வளவு விரைவிலே இந்த ஆக்கிரமிப்பிலிருந்து விடுபடவேண்டுமோ அவ்வளவு விரைவில் விடுபடவேண்டும். அரசாங்கம் இதில் தயவு தாட்சண்யம் காட்டக்கூடாது.
ஒரு மடங்கு அல்ல; இருமடங்கு பணம் கொடுத்து வாங்கியிருக்கிறோம்
செய்தியாளர்: பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திலும் இதுபோன்று அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறது என்று சொல்கிறார்களே, அதுபற்றி...?
கி.வீரமணி: பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திற்காக அரசு நிலத்தினை ஒரு மடங்கு அல்ல - இரு மடங்கு பணம் கொடுத்து அந்த நிலத்தினை சட்டப்படி வாங்கியிருக்கிறோம். எல்லாமே சட்டப்படிதான் நடந்திருக்கிறது. ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுதும், பணம் கொடுத்து வாங்கியிருக்கிறோம்.
கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுதும், பணம் கொடுத்து ஒரு மடங்கு அல்ல, இரண்டு மடங்கு பணம் கொடுத்து வாங்கி, சட்டப்பூர்வமாக வாங்கிப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
ஏற்கெனவே, உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு வந்து, உயர்நீதிமன்றமே சொன்னபடிதான், எங்களுடைய கல்வி நிறுவனங்களில், அவர்கள் கொடுத்த தீர்ப்பின்படி எந்தவித சட்ட மீறல்களும் கிடையாது. அப்படி நடந்திருந்தால், ஆகாயத்திற்கும், பூமிக்குமாக குதித்திருப்பார்கள். ஆனால், இது சூத்திரப் பல்கலைக் கழகம், ஆகவேதான், இதைப் பொருத்தவரையில், எதையாவது கிளப்பிப் பார்க்கலாம் என்று நினைக்கிறார்கள். நம்மைப் பொறுத்தவரையில், எந்தவிதக் கோளாறுகளும் கிடையாது.
இவ்வாறு செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி குறிப்பிட்டார்.
நன்றி:
விடுதலை நாளிதழ்
14-10-2018


2 comments:

Dr.Anburaj said...


சாஸ்திரா பல்கலைக்கழகம் மிக சிறந்த முறையில்நிா்வகிக்கப்படும் பல்கலைக்கழகம்.கல்வித்தரம் நன்றாக உள்ளது.அரசு நிலத்தை எடுத்து கடடியிருந்தால்நிலவாடகை போட்டு வாங்கிக்கொள்ள வேண்டியதுதானே. இதில் என்ன விவகாரம் வேண்டிகிடக்கு. வீரமணி ஒரு கொள்ளைக்காரன்.

ASHAK SJ said...

ராமன் என்ற கற்பனை கடவுளுக்காக நானூறு வருட பள்ளியை பிடிப்பீர்கள், ஆனால் பல்கலைக்கழகத்திற்கு மட்டும் வாடகை கொடுப்பீர்கள், நல்ல சிந்தனை