அஜ்மானில் மரணமடைந்த மேற்கு வங்க இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் ஒத்துழைப்புடன் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது
துபாய் :
அஜ்மானில் உள்ள தமிழ் நிறுவனம் ஒன்றில் மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாபூர் பகுதியைச் சேர்ந்த பிஸ்வாஸ் ஹலிம் வேலை செய்து வந்தார். இவர் அந்த நிறுவனத்தில் இருந்து திடீரென காணாமல் போய்விட்டார். அதன் பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் 23-ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார்.
அவரது உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க இந்திய துணை தூதரகம் மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்த உடலை கொண்டு செல்ல ஒரு நபர் தேவை என ஈமான் அமைப்பின் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் இடம் தெரிவித்தனர்.
ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம்.ஹபிபுல்லா கான் மற்றும் பொதுச்செயலாளர் ஏ. ஹமீது யாசின் ஆகியோரது ஆலோசனைப்படி செயற்குழு உறுப்ப்பினர் கவுசரை அனுப்பி வைப்பது என முடிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் துபாயில் இருந்து 08-ஆம் தேதி இரவு ஏர் இந்தியா விமானம் மூலம் புறப்பட்டு இன்று 09-ஆம் தேதி கொல்கத்தா விமான நிலையத்தில் அவரது குடும்பத்தினரிடம் கவுசர் ஒப்படைத்தார்.
பிஸ்வாஸ் ஹலிமின் குடும்பத்தினர் ஈமான் அமைப்பின் மனிதாபிமான பணிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.
No comments:
Post a Comment