உமர் வயது ஆறு: அஹமத் வயது பத்து: - உழைப்பாளிகள்
'நானும் எல்லா குழந்தைகளையும் போலவே படிக்க ஆசைப்படுகிறேன். நான் ஒரு மருத்துவராக வேண்டும் என்று கனவு கண்டேன். ஆனால் போர் சூழலும் எனது தந்தையின் சுகவீனமும் எனது கனவுகளை கலைத்து விட்டன. எனது தந்தைக்கு ஒரு கிட்னி பழுதாகி படுத்த படுக்கையாக உள்ளார். எனது தாயார் எனது தந்தையையும் வீட்டையும் கவனித்துக் கொள்கிறார். வேறு வழியின்றி தெரு ஓரங்களில் நின்று ரோஜாப் பூக்களை விற்று எனது குடும்பத்தை நானும் எனது தம்பியும் காப்பாற்றுகிறோம். சில நேரம் எனது தம்பி உடம்பு சரியில்லாமல் வீட்டில் படுத்து விட்டால் நான் தனியே புறப்பட்டு வந்து பூக்களை விற்க ஆரம்பிப்பேன்.'
'நானும் எனது சகோதரன் உமரும் தினமும் காலை 5.30 மணி அல்லது ஆறு மணிக்கு விழித்தெழுவோம். அந்த நேரம் முதல் வேலை: வேலை என்று சுற்றித் திரிந்து அன்றைக்கு தேவையான ஓரளவு பொருளை திரட்டி விடுவோம். பள்ளிக்கு செல்லாமல் நாங்கள் சிறு வயதில் பூக்கள் விற்பதை பார்த்து சிலர் கோபத்தில் எங்களை அடிக்கின்றனர். அது போன்ற நேரங்களில் ஒரு ஓரத்தில் சென்று அழுது எனது வலியை போக்கிக் கொள்வேன். எங்களின் வறுமை அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லைதானே! நானும் எனது தம்பியும் மற்ற சிறுவர்களைப் போல படிக்கத்தான் ஆசைப்படுகிறோம். ஏதேனும் தொண்டு நிறுவனங்கள் உதவினால் படிப்பதற்காக நாங்கள் அவர்கள் கூட வரத் தயாராக உள்ளோம்.'
சிறு வயதில் குடும்ப பாரத்தை சுமந்து திரியும் உமர், அஹமது போன்ற சிறுவர்கள் லட்சக் கணக்கில் லெபனான் சிரிய தெருக்களில் சுற்றித் திரிகின்றனர். நபிகள் நாயகம் காலத்திலேயே நாகரிகத்தின் உச்சத்தில் இருந்தது சிரியா. படிப்பிலும் நாகரிகத்திலும் அழகிலும் மார்க்கத்தை பேணுவதிலும் சிறந்து விளங்கிய சமுதாயம் இன்று வல்லரசுகளின் பார்வையால் நிலை குலைந்து போயுள்ளது. இந்த மக்களின் சிரமங்களை போக்கி அவர்களின் கனவுகளை இறைவன் நனவாக்குவானாக!
--------------------------------------------------------
”உங்களில் ஒருவன் ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு தன்னுடைய முதுகில் விறகுக்கட்டைச் சுமந்து விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். இதன் மூலம் அல்லாஹ் அவனுக்கு இழிவு ஏற்படாமல் தடுத்து விடுவான். மக்கள் அவனுக்குக் கொடுக்கவும் செய்யலாம் அல்லது மறுக்கவும் செய்யலாம். ”என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.
புகாரி: 1470, 1471.
புகாரி: 1470, 1471.
” (தம் தேவைக்கு அதிகமாக) மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவுகூட சதை இல்லாதவனாக மறுமை நாளில் வருவான்… ‘யார் சுயமரியாதையைப் பேணிக் கொள்கிறானோ அவனை அல்லாஹ் சுயமரியாதையோடு வாழச் செய்வான் யார் பிறரிடம் தேவையற்றவனாக இருக்கிறானோ அல்லாஹ் அவனைத் தேவையற்றவனாக ஆக்குகிறான். யார் பொறுமையை மேற்கொள்ள முயற்சி செய்கிறானோ அவனை அல்லாஹ் பொறுமையாளனாக ஆக்குவான் மேலும், பொறுமையை விடச் சிறந்த, விசாலமானஅருட்கொடை எவருக்கும் கொடுக்கப்படுவதில்லை” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’.
புகாரி: 1474, 1475.
புகாரி: 1474, 1475.
No comments:
Post a Comment