Followers

Sunday, October 07, 2018

இன, மொழி, நாடு கடந்து ஒலிக்கும் ஒரே அழைப்போசை!

இன, மொழி, நாடு கடந்து ஒலிக்கும் ஒரே அழைப்போசை!

கிராமமான நம் ஊர் உசிலம்பட்டியாக இருக்கட்டும், நாகரிக வளர்ச்சி அடைந்த ஐரோப்பிய அமெரிக்க நகரங்களாட்டும் எங்கும் ஒரே விதமான அழைப்போசை. மொழிகளை கடந்து எந்த நாட்டுக் காரனும் 'ஓ.... இங்கு இறைவனை தொழுவதற்கு ஒரு பள்ளி வாசல் இருக்கிறது' என்று ஆர்வமுடன் வரவழைக்கும் பாங்கின் ஓசை... ஆப்ரிக்கனும், ஐரோப்பியனும், ஆசியனும், அமெரிக்கனும் ஒரு சேர சங்கமிக்கும் ஒரே இடம். எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாங்கோசையை நீங்களும் கேளுங்கள்.

அல்லாஹு அக்பர் — ( அல்லாஹ் மிகப்பெரியவன்)

அல்லாஹு அக்பர் —( அல்லாஹ் மிகப்பெரியவன்)

 அல்லாஹு அக்பர் — ( அல்லாஹ் மிகப்பெரியவன்)

 அல்லாஹு அக்பர் — ( அல்லாஹ் மிகப்பெரியவன்)

அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹ் —( அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை எனசாட்சி கூறுகிறேன்)

அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹ் —( அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை எனசாட்சி கூறுகிறேன்)

அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரசூலுல்லாஹ் —-(முஹம்மது (ஸல்அவர்கள் அல்லாஹ்வின் தூதர்என் சாட்சி கூறுகிறேன்)

அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரசூலுல்லாஹ் —-(முஹம்மது (ஸல்அவர்கள் அல்லாஹ்வின் தூதர்என் சாட்சி கூறுகிறேன்)

ஹை யா லஸ்ஸ்லாஹ் –(தொழுகையின் பக்கம் விரையுங்கள்)

ஹை யா லஸ்ஸ்லாஹ் —(தொழுகையின் பக்கம் விரையுங்கள்)

 ஹை யா லல் ஃபலா —(வெற்றியின் பக்கம் விரையுங்கள்)

 ஹை யா லல் ஃபலா —(வெற்றியின் பக்கம் விரையுங்கள்)

அல்லாஹு அக்பர் — ( அல்லாஹ் மிகப்பெரியவன்)

அல்லாஹு அக்பர் — ( அல்லாஹ் மிகப்பெரியவன்)

லா இலாஹ இல்லல்லாஹ்—(அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை)



7 comments:

vara vijay said...

Why Muhammad only to be testified why not other prophets. This is partiality.

Dr.Anburaj said...


கடவுளுக்கு பிரியமானது அரேபிய கலாச்சாரம், அரேபியன் அரேபிய மொழி என்ற வல்லாதிக்க கருத்தின் பிரதிபலிப்புதான் தங்களின் பதிவு.தவறான பதிவு.ஏமாற்று வேலை.
இந்தியரான தாங்கள் ஏன் இப்படி அரேபியனுக்கு வால் பிடிக்கின்றீா்கள் ?

Dr.Anburaj said...

தமிழின்சிறப்பு
பூமிக்கு தமிழில் 62 சொற்கள்

ஒப்பற்ற தமிழின் உயர்வு!
தமிழின் உயர்வுக்குப் பல காரணங்கள் உண்டு. இறைவன் அருளிய மொழி என்பதிலிருந்து காரணங்களை ஆரம்பித்து, அடுக்கிக் கொண்டே போனால் அது ஒரு கலைக்களஞ்சியம் அளவுக்கு விரிந்து விடும்.

சுயநலமுடைய அரசியல் சார்ந்த திராவிடக் கும்பல்களின் அரசியல் அடிப்படையிலான “பற்றினால்” இதை விளக்கி விட முடியாது.

பல மொழி கற்ற அறிவு, புராண, இதிஹாஸ அறிவு, பண்டைய தமிழ் இலக்கிய அறிவு, சொற்களின் வேர் பற்றிய அறிவு உள்ளிட்ட பல்துறை வித்தகம் இதற்கு வேண்டும்.

தமிழில் உள்ள சொற்களை ஆய்ந்து உற்றுக் கவனித்தால் அதன் வேர் பலமானது எனத் தெரிய வரும்.

ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு ஆழ்ந்த பொருள் உண்டு. வேர்ச் சொற்கள் வழியே சென்றால் பல சொற்களைப் பெற முடியும்.

உதாரணத்திற்கு ஒரே ஒரு சொல்லை இங்கு பார்க்கலாம்.

பூமி உருண்டை என்று சொன்னதற்காக கத்தோலிக்க குருவான போப்பாண்டவரிடம் பிரபல விஞ்ஞானி பட்ட பாடும் மரணமடைந்ததும் நமக்குத் தெரியும்.

ஆனால் தமிழனின் விஞ்ஞான அறிவு தமிழ்ச் சொல்லிலேயே வடிக்கப்பட்டிருப்பதை பூமி என்ற சொல்லிலிருந்தே காண முடியும்.

நம் முன்னோர் பூமி தட்டை என்று மேலை நாட்டினர் கொண்ட கருத்தைக் கொண்டிருக்கவில்லை.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயே இதை அண்டம் என்ற சொல்லால் அழைத்தனர்.

அண்டம் அல்லது முட்டை நீள் உருண்டை வடிவம் கொண்டது பூமி.


அண்டம் என்பதால் உயிர்ப் பொருள்கள் தோன்ற ஆதாரமானதும் கூட என்பதும் பெறப்படுகிறது.

ஞால் என்ற வேரின் அடிப்படையாகப் பிறந்தது ஞாலம். ஞால் என்றால் தொங்குவது என்று பொருள் படும். பூமி பேரண்டத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு சிறு வடிவம் என்பது இதனால் பெறப்படுகிறது.

இது தொங்கிக் கொண்டிருந்தாலும் இதில் வைக்கப்படும் பொருள்கள் பாதுகாப்பாக உள்ளன. அவை விழாது என்பதால் இது வையகம் என அழைக்கப்படுகிறது.

காசியப முனிவர் தானமாகப் பெற்றதால் இது காசினி என அழைக்கப்படுகிறது.

இப்படி ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு பின்னணியும் ஆழ்ந்த அர்த்தமும் கொண்டிருப்பதைக் காணலாம். அதுவே தமிழ் வார்த்தைகளின் மகிமை.

முக்கியமான ஒரு விஷயத்தை இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். சில சொற்கள் சம்ஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்டு தோன்றியவை. ஆனால் அவற்றைத் தமிழ் அறிஞர்கள் தமிழ்ச் சொற்களாகவே கொண்டனர்; கையாண்டனர். சம்ஸ்கிருதம் இது, தமிழ் இது என்று அவர்கள் பாகுபாடு செய்ததில்லை. தமிழ் மற்றும் சம்ஸ்கிருதச் சொற்களை இரு கண்கள் என அவர்கள் கொண்டிருந்த பான்மையை உற்று நோக்குங்கால் மொழி பற்றிய காழ்ப்புணர்ச்சி தமிழகத்தில் ஒரு போதும் இருந்ததில்லை என்பதே தெரிய வரும். இந்தச் சொற்களை அன்றாட பேச்சு வழக்கில் அறிஞர்கள் மட்டுமின்றி சாமான்யரும் பயன்படுத்தி வந்தனர். இன்றும் இப்படிப்பட்ட ஆயிரக் கணக்கான சொற்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
............................ 2

Dr.Anburaj said...

சரி, பூமியைக் குறிக்க மட்டும் எத்தனை சொற்கள் தமிழில் உள்ளன?


பூமி, பிருதுவி, பார், பூ,அகலிடம்,தரணி, கோ, மகி, அளக்கர், பொறை,கு, அசலை, நேமி, படி, பாரி, அகிலம், குவலயம், காசினி, அவனி, தாரணி, வசுந்தரை, தலம்

தாத்திரி, தரை, தரித்திரி, பணாதரி, மண், கோத்திரி, கிடக்கை, சதுக்கோணி, தறை, பாத்திபம், சக்கரம், நிலம், புவி, சலாம்பரி, மாதிரம், விமலை, வசுதை

தாலம், உலகு, இம்பர், வையம், சாந்தை, விசுவம், புடவி, ஞாலம், வசுமதி, நகம், ப்வளம், பாலம், உகம், பூதியம், ஏமாங்கி, வையகம், பொழில், இகம், பவனி,மேதினி, சகம், புவனம்

ஆக இப்படி 62 பெயர்களை நாமதீப நிகண்டு குறிப்பிடுகிறது.

நிகண்டின் பூமிக்கு உரித்தான சொற்களைச் சொல்லும் பாடல்கள் இதோ:

பூமி பிருதுவிபார் பூவகலி பந்தரணி
கோமகிய ளக்கர்பொறை குவ்வசலை - நேமிபடி

பாரியகி லங்குவல யங்கா சினியவனி

தாரணிவ சுந்தரைத லம்


தாத்திரி யேதரைத ரித்திரிப ணாதரிமண்

கோத்திரிகி டக்கை சதுக் கோணிதறை - பாத்திபம்

சக்கரநி லம்புவிச லாம்பரியே மாதிரமே

தக்க விபுலைவசு தை

தாலமுல கிம்பர்வையஞ் சாந்தைவிசு வம்புடவி

ஞாலம் வசுமதிந கம்பவளம் - பாலமுகம்

பூதியமே மாங்கிவைய கம்பொழிலி கம்புவனி

மேதினிச கம்புவன மே

இன்னும் சில நிகண்டுகளைப் பார்த்தால் இன்னும் பல பெயர்கள் கிடைக்கும்.

ஒவ்வொரு சொல்லையும் ஊன்றிக் கவனித்தால் அந்தப் பெயரால் பூமி அழைக்கப்படுவதன் காரணத்தையும் உணர முடியும்.

இப்படித் தமிழ்ச் சொற்கள் பல்லாயிரத்திற்கும் அர்த்தம் காண எத்தனை நாட்கள் வேண்டும்!

தமிழனாக வாழ்வதில் பெருமைப் படுவதோடு தமிழ்ச் சொற்களின் ஆழம் கண்டு ஆனந்திப்போம்; அதை உலகறியச் செய்வோம்!

***

ASHAK SJ said...

Blogger vara vijay said...
Why Muhammad only to be testified why not other prophets. This is partiality.
-----
because we are followers of prophet Muhammadhu (sal), this is not partiality

ASHAK SJ said...

கடவுளுக்கு பிரியமானது அரேபிய கலாச்சாரம், அரேபியன் அரேபிய மொழி என்ற வல்லாதிக்க கருத்தின் பிரதிபலிப்புதான் தங்களின் பதிவு.தவறான பதிவு.ஏமாற்று வேலை.
இந்தியரான தாங்கள் ஏன் இப்படி அரேபியனுக்கு வால் பிடிக்கின்றீா்கள் ?

---------------
ஒவ்வொரு வேதமும் ஒவ்வொரு மொழியில் இறக்கப்பட்டுள்ளது, கடைசி வேதமான குரான் அராபிய மொழியில் உள்ளது, அதற்க்கான மொழிபெயர்ப்புகள் பல மொழிகளில் உள்ளது, அதில் ஒன்றும் அன்புராஜை சூத்திரன் என்று சொல்லப்படவில்லை, நீ உண்மையான மானிடன் என்றால் உன்னை சூத்திரன் என்ற மதத்தை தூக்கிபிடிக்கமாட்டாய்

ASHAK SJ said...

தமிழுக்கு அமிழ்த்தென்று பேர், இன்ப தமிழ் எண்கள் உயிருக்கு நேர் என்பது என்ன? தமிழில் சமஸ்கிருதம் கலந்தால் ஒன்று தவறில்லை என்பது என்ன? இந்த சூத்திரன் அன்புராஜின் அறிவு இவ்வளவே .

ஏன் தமிழ்மொழியின் எல்லாவற்றையும் விளக்கும் ஆற்றல் இல்லையா? எதற்கு பார்ப்பன மொழி என்று கேட்கவேண்டிய அன்புராஜ் சமஸ்கிருதத்தை தூக்கிப்பிடிப்பதே சூத்திரன் என்பதற்கு ஆதாரம்