Followers

Saturday, October 27, 2018

செத்த மிருகங்களோட எலும்புகள்.... இதெல்லாம் பொடியாக்கி

பட்டு மாமி:
ஏண்ணா... கலி காலத்துல எதெல்லாம் கேட்க வேண்டியதா இருக்கு. நாம பயன்படுத்தற வெள்ளை சர்க்கரை சுடு காட்டுல பொறுக்கிய எலும்புகள். செத்த மிருகங்களோட எலும்புகள். இதெல்லாம் பொடியாக்கி கரும்பு சாறோடு ஒன்றாக்கி வருவதுதான் என்று இந்த பிள்ளையாண்டான் சொல்றானே... உவ்வே.... அப்போ நாமெல்லாம் வெஜிடேரியன் இல்லையா?
கிட்டு மாமா:
அடி போடி அசடு. நாம தினமும் கோமாதா மடியிலிருந்து பால் கறக்குறோமே. அது ரத்தத்துக்கும் சாணத்துக்கும் இடையில் உண்டாகுறதுதானேடி. தாவரங்களிலேயே எத்தனையோ மாமிசம் உண்பவை உண்டு. அது போல சர்க்கரையிலும் எலும்பு துண்டுகளை அவா சேர்த்தாதான் வெள்ளை சர்க்கரை நமக்கு கிடைக்கும். இதெல்லாம் எனக்கு முன்பே தெரியும்டி.
பட்டு மாமி:
ஐயய்யே.... என்னண்ணா இப்படி சொல்றேள். அப்போ சூத்ராள், முஸ்லிம்கள் எல்லாம் மாமிசம் சாப்பிடச்சே அது தப்புண்டு நம்மவா எல்லாம் வாய் கிழிய பேசறது சரியோ!
கிட்டு மாமா:
அது அரசியலுக்காக நம்மவா செய்றதுடி. இந்துக்களையும் முஸ்லிம்களையும் இப்படில்லாம் பகவான் பேரைச் சொல்லி பிரிச்சு வச்சாதான் நாம இந்த நாட்டுல காலம் தள்ள முடியும். இது பத்தி எல்லாம் நீ ரொம்ப யோசிக்காதே.... அதை நாங்க பார்த்துக்கறோம்.





2 comments:

Dr.Anburaj said...

ஒரு ஆரோக்கியமாக கொளு கொளு என்று இருக்கும் ஒரு வயது கன்றுக்கட்டியை ஒரு உழவன் பார்க்கின்றான்.உடனே அவன் மனதில் இந்த கன்றுக்கு சுழி நன்கு அமைந்துள்ளது.இந்த கன்று உழவுக்கும் வண்டி பாரம் இழுக்கவும் நன்கு வேலை செய்யும் . என்று கருத்து சொல்கின்றான்.

ஆனால் ஒரு கறிக்கடைகாரன் அதைப்பார்க்கும் போது ” கொளு கொளு என்று பக்கவமாக உள்ளது. 20 கிலோ இறைச்சி கிடைக்கும். மிகவும் இளமையான கன்று.கறி சமைத்தால் சுவையாக இருக்கும் என்று கருத்து சொல்கிறான்.
அனைவரும் மாட்டுக்க றி சாப்பிட்டால் நாட்டில் பசு காளை இனம் ஏதும் இருக்காது.பால வளம் குன்றி நாடு சீரழியும். உரம் இல்லாது விவசாயம் அழிந்து விடும்.
காட்டரபிகளின் பொருளாதாரம் விவசாயத்தையோ கால்நடை செல்வங்களையோ ஆதாரம் அல்ல. ஆகவேதான் அவன் பசு காளை என்று அனைத்தையும் தின்று தீா்த்தான்.
இந்தியாவில் அந்த நிலை வந்தால் சமூகம் பெரிய அழிவைச் சந்திக்கும்.
பகடு சுமக்கும் பாரம் ஒம்புமின் என்கிறது தமிழ்வேதம். பகடு என்றால் கால்நடைச் செல்வங்கள்.இவற்னை பாதுகாப்பது மிக முக்கியம். சுமையாக இருந்தாலும் சுமப்பதுதான் சுகம் என்று சுமக்க வேண்டும் என்பது பாடலின் பொருள்.

அரேபியாவை நினைத்துக்கொண்டு இந்தியாவை அழித்தது போதும்.
முஸ்லீம்களே இந்தியாவை வாழ விடுங்கள்.

ASHAK SJ said...

நாங்கள் மாட்டை சாப்பிடுகிறோம், நீங்கள் பன்றியை சாப்பிட்டு மாட்டை காப்பாற்றுங்களேன்