40 நாட்கள் தொடர்ந்து ஃபஜ்ர் (விடிகாலைத் தொழுகை) தொழுத சிறாருக்கு சைக்கிள் பரிசு!
பெங்களூருவில் உள்ள ஹாஜி சர் இஸ்மாயில் சேட் பள்ளிவாசலில் ஒரு வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டனர். அதாவது சிறுவர்களில் தொடர்ந்து 40 நாட்கள் யார் பள்ளிக்கு வந்து தொழுகிறார்களோ அவர்களுக்கு அழகிய சைக்கிள் பரிசளிக்கப்படும் என்று பள்ளி நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து சிறுவர்கள் ஆர்வமாக காலைத் தொழுகைக்கு வர ஆரம்பித்தனர். பள்ளி நிரம்பி வழிந்தது. 99 சிறுவர்கள் காலைத் தொழுகைக்கு 40 நாட்கள் தொடர்ந்து வந்தனர். 13 சிறுவர்கள் 35 நாட்கள் தொடர்ந்து வந்துள்ளனர்.
சிறார்களை கவுரவிக்கும் முகமாக இன்று பள்ளி வளாகத்தில் காலை 11 மணியிலிருந்து 12.30 மணி வரை விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர் பள்ளி நிர்வாகிகள். அதன்படி இன்று 99 சிறார்களுக்கு சைக்கிளும் 13 சிறார்களுக்கு கைக்கடிகாரமும் வழங்கப்பட்டது. துருக்கி, எகிப்து போன்ற நாடுகளில் இவ்வாறு சிறுவர்களை தொழுகையில் ஈடுபடுத்துவதற்காக பரிசுகளை அறிவிப்பது வழக்கம். இதனை பின் பற்றி இப்பள்ளி நிர்வாகமும் ஏற்பாடு செய்திருந்தது. இதன் மூலம் பல சிறார்கள் ஐந்து வேளை தொழுகையாளிகளாக மாறி விட்டனர். செல்வந்தர்கள் தங்கள் ஊர்களிலும் இது போன்ற ஏற்பாடுகளை செய்யலாமே!
மொழி பெயர்ப்பு
சுவனப்பிரியன்
சுவனப்பிரியன்
தகவல் உதவி
கோக்னட்.காம்
03-11-2019
கோக்னட்.காம்
03-11-2019
No comments:
Post a Comment