அமீர் கான் நடத்தும் நிகழ்ச்சியில் 'இஸ்லாமிய திருமணம்'
மும்பை பிவாண்டி பகுதி இஸ்லாமிய திருமணங்களை மிக மிக எளிமையாக பள்ளிவாசலில் நடத்தி அசத்துகின்றனர். மணமக்களை வாழ்த்த வந்தவர்களுக்கு சர்பத் மட்டும் கொடுத்து அனுப்பியும் வரதட்சனை இல்லாமல் பேன்ட் வாத்தியங்கள் பட்டாசு இல்லாத செலவில்லாத திருமணங்களை கடந்த 30 ஆண்டு காலமாக நடத்திவருகின்றனர்.
இன்று வரதட்சனைக்காக தீ குளிக்கும் மணமகளையே காண முடியாது என்றும் ஒரு சாமானிய ஏழைக்கூட தன் மகளுக்கு திருமணம் ஆகவில்லையே என்கிற நிலமையை மாற்றி விட்டோம் என்கிற இந்த பகுதி மக்களின் அனுபவங்களை டிவி நிகழ்ச்சியில் கூறுகின்றனர்.
இதில் ஒருவர் வசதி படைத்தவர்களோ ஏழைகளோ அழைத்தால் திருமணத்திற்கு கட்டாயம் செல்வோம். பிரியாணி போட்டாலும் சாப்பிட மாட்டோம் என்கிறார்..
ஆனால்... நம் ஊர்களில் இன்றும் 99 % வீதம் பேர் தகுதிக்கு மீறி செலவு செய்து திருமணத்தால் கடனாளியாகி விடுகின்றனர்..
இவர்களை பார்த்தாவது திருந்துவார்களா.?
-----------------------------------------
”குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிக பரகத் (இறைவனின் மறைமுகமான பேரருள்) நிறைந்தது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: அஹ்மத் 23388
1 comment:
எளிமையான திருணம் என்பது இந்துக்களுக்கு மிக அவசியம் தேவை.1980 ல் என்று நினைக்கின்றேன்.கேரளத்தில் மூவாற்றுப்புழா என்ற ஊரில் எனது நண்பா் ஒரு ஈழவர் குடும்ப திருமணத்தில் கலந்து கொண்டேன்.மிக எளிமையாக நடைபெற்ற திருமணம் குறித்து ஆச்சரியப்பட்டேன்.
இந்த வகையில் ஸ்ரீநாராயணகுரு அவர்கள் ”ஒரு குத்து விளக்கை மணமக்கள் 3 முறை சுற்றி வந்து தாலி அணிந்து கொள்வார்கள் .ஒரு வேளை விருந்து.நிறைவு பெற்றது திருமணம்”. இதுதான் மிக பழமையான காலத்தில் தோன்றிய திருமண நடைமுறை.அதை மீட்டு மக்கள் மத்தியில் கொண்டு வந்தவர் ஸ்ரீநாராயணகுரு.
ஸ்ரீநாராயணகுருவை தமிழக மக்கள் அறிந்தி்ருக்கவில்லை. பண்டை காலங்களில் இந்து நாடாா் வீட்டு திருமணங்களும் இப்படித்தான் நடைபெற்றது. ....அதற்கு பின் ஆடம்பரங்கள் ........பகடடு .....படோபடங்கள் ....... வீண் டம்பீகம் ....... விளம்பரம் என்று பணத்தை பாழாக்கி ..... அவன் செய்கிறான் என்று இவனும் கடன் வாங்கி கல்யாணம் செய்து கடன் வாங்கி பாழாய் போகின்றான். அடுத்த பிள்ளைக்கு திருமணம் செய்ய வக்கத்து முழிக்கின்றான்.அரசு பொது அமைப்பகள் இது குறித்து எந்த விவாதத்ததையும் செய்யவில்லை. ஏதோ ஒரு மயக்கத்தில் மக்கள் நலனை மறந்து மீடியாக்கள் மத அமைப்புகள் இந்து நலன் பேசும் அமைப்புகள் இருக்கின்றன்.
Post a Comment