இன்ஸூரன்ஸ் கம்பெனியை நொறுக்கிய சிவ சேனா!
விவசாயிகளுக்கு தர வேண்டிய இன்ஸூரன்ஸ் தொகையை தரச் சொல்லி புனேயில் உள்ள இஃப்கோ IFFCO கம்பெனியை முற்றுகையிட்டு அதன் அலுவலகத்தை உடைத்து நாசமாக்கியுள்ளனர் சிவசேனா அமைப்பினர்.
45 லேப்டாப், 10 பிரிண்டர்கள் மற்றும் அலுவலக பொருட்கள் நாசமாயின. 35 பேர் உள்ளே புகுந்து இந்த காரியத்தை செய்துள்ளனர்.
விவசாயிகளுக்கு இழப்பீடு தர போராடுவதற்கு இது தான் வழியா? இவர்கள் கையில் ஆட்சி சென்றால் என்னவாகும் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு. இவ்வாறு சட்டத்தை இவர்களே கையில் எடுத்துக் கொண்டால் நீதித் துறை எதற்கு? காவல் துறை எதற்கு?
இவ்வாறு அலுவலகத்தை அடித்து நொறுக்கினால் வெளி நாட்டு முதலீடுகள் எவ்வாறு நம் நாட்டை நோக்கி வரும்.? இன்னும் 5 நாட்களில் பாபரி பள்ளி வழக்கு தீர்ப்பும் வருகிறது. உபியில் தற்காலிக திறந்த வெளி சிறைச்சாலையை உண்டாக்கி யிருக்கிறார்களாம்.
பாபர் பள்ளி இருந்த இடத்தில் எந்த ஆதாரமும் இல்லாமல் வம்படியாக ராமனுக்கு கோவில் கட்டுவதால் இந்து மதம் வளர்ந்து விடுமா? நாட்டில் உள்ள வேலையில்லா திண்டாட்டம் முடிவுக்கு வந்து விடுமா? வெளி நாட்டு முதலீடுகள் நம்மை நோக்கி வருமா? அல்லது விலகுமா?
இந்துக்களையும் முஸ்லிம்களையும் இவ்வாறு பிரித்து குரோதத்தை வளர்த்து எதை சாதிக்கப் போகிறீர்கள்?
இதற்கெல்லாம் ஆளும் பாஜகவிடம் பதில் உள்ளதா?
இதுதான் தேச பக்தியா?
இந்த நாட்டை வறுமைக்கு தெரிந்தே கொண்டு செல்பவன் தேச பக்தனா? தேச விரோதியா?
1 comment:
காலிகளை காவல்துறை பிய்த்து எறிந்திருப்பார்கள் கவலைப்பட வேண்டாம். பல பேர்கள் ஜெயில் வாசம் பெறுவார்கள்.
யேமனிலும் ஆப்கானிலும் சிரியாவிலும் வங்க தேசத்திலும் தினம் தினம் 100 கணக்கான முஸ்லீம்கள் முஸ்லீம்களோடு சண்டையிட்டு செத்து தொலைகின்றார்களே. ஒரு நாள் அது
குறித்து எழுதவில்லையே ஏன் ,
Post a Comment