நேற்றைய தினம் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்ட ஒருவர் இப்ராஹிம் என தன்னை அறிமுகம் செய்துள்ளார். மேலும், ஈரோடு ரயில் நிலையத்தில் தான் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு தெரிவித்து இணைப்பினை துண்டித்தார். இதனால், ஈரோடு ரயில் நிலையத்துக்கு மோப்பநாய், வெடிகுண்டு கண்டறியும் கருவியுடன் விரைந்த போலீசார் ரயில்களிலும், பயணிகளிடமும் தீவிர சோதனை நடத்தினர்.
சில மணிநேர தேடுதல் வேட்டைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் போலியானது என தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் தொடர்பொண்ட எண்ணின் முகவரியை போலீஸ் தேடியது. அதில், அந்த எண் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவர் பெயரில் இருந்துள்ளது. இதனை அடுத்து அவரிடம் போலீஸ் விசாரணை நடத்தியபோது, தனது உறவினரான லிங்கராஜ் என்பவர் கடந்த வாரம் தன் முகவரி ஆவணத்தை வைத்து ஜியோ சிம்கார்டு வாங்கியதாக கூறினார். இதனை அடுத்து லிங்கராஜை போலீஸ் கைது செய்தது.
1 comment:
சில விடலைகளின் முட்டாள்தனம்.
சிறையில் கழி சாப்பிடும் வாய்ப்பை பெற்று பெற்றுள்ளார் அன்பர் லிங்கராஜ். சிறையில் சுவாமி விவேகானந்தா் புத்தகங்களை படிக்க நீதி மன்றம் அறிவுரை கூற வேண்டும்.
இது போன்ற செய்திகள் பத்த்ரிகையில் முன்னிலை பெற வேண்டும்.
லிங்கராஜ ஆா் எஸ்எஸ் என்று பதிவு செய்யவில்லை.அந்த வகையி்ல் நன்றி.
Post a Comment