Followers

Monday, November 04, 2019

ஐஸ்லாந்தில் தற்போது 10000 முஸ்லிம்கள்

1971 ஆம் ஆண்டில் ஏழு முஸ்லிம்கள் மட்டுமே வாழ்ந்த ஐஸ்லாந்தில் தற்போது 10000 முஸ்லிம்கள்
ஐசுலாந்து குடியரசு வடக்கு ஐரோப்பாவிலுள்ளஒரு தீவு நாடாகும். இது வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஐசுலாந்துத் தீவு உட்பட பல தீவுக் கூட்டங்களையும் உள்ளடக்கிய ஒரு நாடு. இது கிரீன்லாந்துக்கு அருகில் ஐரோப்பாக் கண்டத்தில் உள்ளது. இதுவே நோர்டிக் நாடுகளில் மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட இரண்டாவது சிறிய நாடுமாகும்.
உலகில் முஸ்லிம்கள் இல்லாத நாடுகளே இல்லை என்ற உண்மையை மெய்ப்பிக்கும் விதமாக மிக குறைந்த அளவில் ஐஸ்லாந்தில் முஸ்லிம்கள் வாழ்கின்றனர்
சுமார் 312000 மக்கள் தொகையை மட்டுமே கொண்ட இந்த தீவு நாட்டில் சுமார் 1000 முஸ்லிம்கள் வாழ்கின்றனர் என்று சில நிறுவனங்கள் கூறினாலும்
.இங்கு சுமார் 10000 முஸ்லிம்கள் வாழ்வதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவிக்கிறது
1970 ஆம் ஆண்டில் இந்த நாட்டிர்கு இஸ்லாத்தின் அறிமுகம் கிடைத்தது
இஸ்லாமிய நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் சுற்றுல மற்றும் வணிக நோக்கத்தில் ஐஸ்லாந்திற்கு வருகை தந்தது ஐஸ்லாந்து மக்கள் முஸ்லிம்களோடு வைத்துள்ள வணிக தொடர்ப்பு ஆகியவற்றின் துணையினால் மட்டுமே ஐஸ்லாந்த் மக்கள் இஸ்லாத்தை அறிந்துகொண்டனர்
இது தவிர்த்து அகதிகளாகவும் சில நாடுகளில் இருந்து முஸ்லிம்கள் இங்கு குடியேறி உள்ளனர்
1993 ஆம் ஆண்டு திருகுர்அன் ஐஸ்லாந்த் மொழியில் மொழி பெயர்க்க பட்டது அதன் மறு பதிப்பு 2003 ஆம் ஆண்டில் வெளியிட பட்டது
ஐஸ்லாந்த் முஸ்லிம்கள் அதன் தலைநகர் ரெய்க்யவிக்கில் இறை இல்லம் அமைப்பதற்கான கோரிக்கையை 2002 ஆம் ஆண்டு ஐஸ்லாந்து அரசுக்கு முன் வைத்தனர் உடனடியாக அவர்களது கோரிக்கை ஏற்று கொள்ள பட்டு 2002 ஆம் ஆண்டில் ஐஸ்லாந்தின் முதல் இறை இல்லத்தை அதன் தலைநகர் ரெய்க்யவிக்கில்கட்டி முடித்து முஸ்லிம் திறந்து வைத்தனர்
மஸ்ஜித் நூர் என்று அழைக்க படுகின்ற அந்த இறை இல்லத்தில் ரெய்க்யவிக் முஸ்லிம்கள் தங்கள் வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்
பலஸ்தீனை சார்ந்த சல்மான் தமீமி என்பவர் தான் ஐஸ்லாந் நாட்டின் முதல் முஸ்லிம் இவரது முயர்ச்சியால் 1997 ஆம் ஆண்டு ஐஸ்லாந்து இஸ்லாமிய கூட்டமைப்பு என்ற அமைப்பு நிறுவபட்டது
இந்த அமைப்பை 2010 ஆம் ஆண்டில் ஐஸ்லாந்த் அரசு முறைபடி அங்கீகரீத்தது இந்த அமைப்பு தான் தற்போது ஐஸ்லாந்தில் உள்ள இறை இல்லங்களை பராமரித்து வருகிறது
1971 ஆம் ஆண்டில் ஏழு முஸ்லிம்கள் மட்டுமே வாழ்ந்த ஐஸ்லாந்தில் தற்போது 10000 முஸ்லிம்கள் வரை வாழ்வதாக ஐஸ்லாந்த .இஸ்லாமிய கூட்டமைபின் தலைவர் சல்மான் தமீமி தனது பேட்டி ஒன்றி குறிப்பிட்டுள்ளார்
மிக அதிக நேர பகலை கொண்ட ஒரு தேசமாக ஐஸ்லாந்து அமைந்துள்ளது
இதனால் ரமலான் காலத்தில் சுமார் 22 மணி நேரம் ஐஸ்லாந்த் முஸ்லிம்கள் நோன்பு வைக்கின்றனர் நள்ளிரவில் மறையும் சூரியன் அடுத்த இரண்டு மணிநேரத்தில் மீண்டும் உதயமாகிவிடுகிறது உலகில் மிக அதிக நேரம் முஸ்லிம்கள் நோன்பு வைக்கும் நாடாக ஐஸ்லாந்த் உள்ளது.


No comments: