ஆடு மேய்த்து கொண்டிருந்த ஒரு சிறுவனுக்கு திடீரென ஒரு கேள்வி தோன்றியது..
திருவள்ளுவர் எப்படி இருந்திருப்பார் அவருக்கு இதுவரை எந்த உருவமும் இல்லையே என்கிற கேள்வி அது..
இந்த கேள்வியை தன்னைத்தானே கேட்டு கொண்டார்..
அவர் வேறு யாருமில்லை ஓவியர் கே.ஆர்.வேணுகோபால் சர்மா.
பின்னர் வள்ளுவனுக்கு தானே ஒரு உருவம் கொடுக்கவும் முற்ப்பட்டார்..
தனது பன்னிரெண்டு வயதில் துவங்கி தன் கற்பனைக்கு எட்டிய பல்லாயிரக்கணக்கான உருவங்களை கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக வரைந்து தள்ளினார்.
இறுதியாக ஒரு உருவம் இவர் தான் திருவள்ளுவர் என அவரை திருப்தி அடைய செய்தது.
அந்த உருவத்தை பாவேந்தர், பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், நெடுஞ்செழியன், கக்கன், ஜீவானந்தன் உட்பட பல அரசியல் தலைவர்கள் பார்வையிட்டு சரிபார்த்து இறுதி செய்தனர்..
அதை தொடர்ந்து 1964 ஆம் ஆண்டு பக்தவச்சலம் முதல்வராக இருந்தபோது அன்றைய ஜனாதிபதி ஜாஹிர் உசேன் அவர்களை அழைத்து அவர் கையால் தமிழக சட்டசபையில் திருவள்ளுவரின் உருவப்படம் திறக்கப்பட்டது.
முதன்முதலில் உருவான அந்த வள்ளுவனுக்கு திருநீரோ பூணூலோ காவி உடையோ சாதியோ மதமோ கிடையாது.
திடீரென வள்ளுவனை வைணவனாக்கும் போராளிகள் இதற்கெல்லாம் பதில் சொல்வார்களா?
இந்த தகவல்கள் அனைத்தும் ஓவியர் வேணுகோபால் சர்மாவின் டைரி குறிப்பிலிருந்து அவர் மகன் ஸ்ரீராம் சர்மா எடுத்து காட்டியது.
1 comment:
கே.ஆர்.வேணுகோபால் சர்மா. பின்னர் வள்ளுவனுக்கு தானே ஒரு உருவம் கொடுக்கவும் முற்ப்பட்டார்..
ஆம். சர்மாவும் திருவள்ளுவரை நேரில் பார்க்கவில்லை. பிறகு இவர் வரைந்த படம்தான் அசல் மற்றதெல்லாம் போலி என்று பேசுவது முட்டாள் தனமில்லை.
மைலாப்புரில் கேரளமாநிலத்தில் திருவள்ளவருக்கு கோவில்உள்ளது.அதில் எல்லாம் சிற்பி நினைத்தபடி உருவம் கொடுக்கப்பட்டிருக்கும்.
ஒர்நாமம் ஒர் உருவம் இல்லார்க்கு ஆயிரம் திருநாம் தெள்ளானாம் கொட்டாமே என்கிறது திருவாசகம்.
ஐயன் திருவள்ளுவரை காவி உடுத்தி விபுதி அணிந்து வரைந்தாலும் தவறு இல்லை.
இதைப்போய் ஒரு விவாதப் பெர்ருளாக்கி இரண்டு நாட்களாய் அறிக்கை போர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விவாதம் .........மனித வளம் விரயம்.
Post a Comment