நமக்கு ஏற்படும் இழப்பை நன்மையாக கருத வேண்டும். இறைவன் அதில் ஏதோ நன்மையை நமக்கு நாடுகிறான் என்று பொறுமை காக்க வேண்டும். இப்படித்தான் நபிகள் நாயகம் வம்மை இத்தனை ஆண்டு காலம் நம்மை வார்த்தெடுத்திருக்கிறார்கள்.
“நம்பிக்கை(ஈமான்) கொண்டவர்களே! பொறுமையுடனும் தொழுகை மூலமும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்.நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான். சூரா அல்பகறா : 153
அல்லாஹ் பொறுமையோடு சேர்த்து தொழுகையின் மூலமும் உதவி தேடுமாறு கூறுகிறான்.உள்ளத்தை பலப்படுத்துகிற,ஆன்மாவை உறுதிப்படுத்துகிற ஒரு செயற்பாடாக தொழுகை காணப்படுகிறது.தொழுகை அல்லாஹ்வுடன் நேரடியாக நாம் உரையாடுகின்ற ஒரு இடமாகும்.நமது தேவைகளை நாமாக நிறைவேற்றிக்கொள்ள முடியாத போது,நமது பிரச்சனைகளை நமது பொறுமையின் மூலம் தீர்க்க முடியாத போது நமக்கு இருக்கிற இன்னுமொரு வழி தொழுகை ஆகும்.அல்லாஹ்வுடைய மார்க்கத்தை நிலைநாட்டுவதற்கான உழைப்பு கஷ்டமாக மாறினால் அல்லது கடுமையாக உழைத்தும் மாற்றம் வரவில்லை என்றால் மனித ஆன்மா பலவீனமடைய வாய்ப்பிருக்கிறது.இறைவனுடனான நேரடியான தொடர்பு பலமாக இருப்பவர்களே இவ்வாறான சூழலில் அல்லாஹ்வுக்காக தொடர்ந்தும் உழைப்பார்கள்.அல்லாஹ்வுடனான நேரடியான தொடர்பை தருவது தொழுகை ஆகும்.தொழுகையில் பலவீனமாக இருப்பவர் கஷ்டங்களை நீண்ட காலம் தாங்கிக்கொள்ள மாட்டார்.இதனால்தான் நபியவர்கள் தொழுகை தனக்கு குளிர்ச்சியை தருகிறது என குறிப்பிட்டார்கள்.அவ்வளவு கஷ்டமான உழைப்பை சுமந்திருந்த நிலையிலும் தொழுகை கண்குளிர்ச்சியை கொடுக்கிறது என்றால் அது அல்லாஹ்வுடனான நேரடி உறவின் மூலம் நபியவர்கள் பெற்றுக்கொண்ட உதவி.
எனவே நமது கவலைகளை, கோபத்தை, ஆற்றாமைகளை, இயலாமைகளை தொழுகையில் இறைவனிடமே முறையிடுவோம். கண்டிப்பாக நமக்கு வெற்றியை தருவான்.
No comments:
Post a Comment