தொழுகையின் முக்கியத்துவத்தை உணர்த்த இந்த பதிவு!
நேற்று (10-11-2019) நான் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது பொருள் வாங்க வந்த ஒரு சவுதி நாட்டவர் என்னிடம் 'தொழுது கொள்ள இடம் கிடைக்குமா?' என்று கேட்டார்.
'ஓ... தாராளமாக தொழுது கொள்ளுங்கள்.... தொழுகைக்கான விரிப்பு (முஸல்லா) வேண்டுமா?' என்று கேட்டேன்.
'வேண்டாம். எனக்கு இடுப்பில் வலி. எனவே நாற்காலியில் உட்கார்ந்தே தொழுது கொள்கிறேன். தொழும் திசை எது?' என்று கேட்டார்.
தொழும் திசையை காட்டி அவர் தொழுவதற்கு வசதி செய்து கொடுத்தேன். 10 நிமிடம் தொழுது விட்டு 'இடம் கொடுத்ததற்கு நன்றி' என்று கூறி விட்டு சென்றார். அவர் தொழுததை எனது மொபைலில் படம் எடுத்துக் கொண்டேன்.
சவுதியில் இதனை சர்வ சாதாரணமாக காணலாம். எந்த வேலையாக இருந்தாலும் தொழும் நேரம் வந்து விட்டால் அந்த நேரம் கடந்து விடுவதற்குள் ஏதாவது ஒரு சுத்தமான இடத்தில் தங்கள் தொழுகையை நிறை வேற்றி விடுவர் சவுதிகள். பாலைவனத்தில் நெடுந் தூரம் பயணிக்கும் போதும் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி விட்டு குடும்பத்தோடு கூட்டாக தொழுது கொள்ளும் காட்சியை காணலாம். இந்த பழக்கங்களை நாமும் கடைபிடிக்க வேண்டும். இதனால் நமக்கு மன அமைதி கிடைக்கிறது. உடலும் ஆரோக்கியமடைகிறது. இறைவனின் அன்பையும் பாதுகாப்பையும் பெறுகிறோம்.
-----------------------------
அல்லாஹ்வை நினைவு கூறுவதன் முலம் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன.
திருக்குர்ஆன் 13:28
அவர்கள் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். குற்றவாளிகளிடம் உங்களை நரகத்தில் சேர்த்தது எது? என்று விசாரிப்பார்கள். நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை எனக் கூறுவார்கள்.
திருக்குர்ஆன் 74:41-43
No comments:
Post a Comment