Followers

Thursday, November 07, 2019

பாபரி பள்ளிவாசல் முக்கிய ஆவணங்கள் அழிப்பு: முக்கிய அதிகாரி கொலை

பாபரி பள்ளிவாசல் இடிப்பு இறுதி தீர்ப்பையொட்டி சில வரலாற்று தகவல்கள்

பாபரி பள்ளிவாசல் முக்கிய ஆவணங்கள் அழிப்பு: முக்கிய அதிகாரி கொலை

2000 ஏப்ரல் 30ம் தேதி சுபாஷ் என்ற முக்கியமான அரசு அதிகாரி காசி வெங்கடேஷ்வரா என்ற ரயிலில் பாபரி பள்ளிவாசல் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களுடன் பயணிக்கிறார். ரயில் புதுடெல்லியை நெருங்கும் போது அவரை பின்னாலிருந்து மர்ம நபர் ஒருவர் தாக்கி ஓடும் ரயிலில் இருந்து வெளியே தள்ளி விடுகிறார்.

பலத்த காயமடைந்த சுபாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். பல மணி நேரம் கழித்து சுபாஷின் வீட்டிற்கு தகவல் தருகிறார்கள். சுபாஷின் தந்தை ஓடி வந்து தன் மகனை பார்க்கிறார். தன்னை யாரோ பின்புறமிருந்து தள்ளி விட்டதாக அப்பாவிடம் சொல்கிறார். பிறகு, சுபாசின் அப்பா வெளியில் காத்திருக்க, சுபாஷ் இறந்து விட்டதாக அதிகாரிகள் சொல்கிறார்கள். இப்போது தானே என் பையனிடம் பேசி விட்டு வந்தேன் என்று சொல்ல உங்கள் மகன் இரண்டு நாட்களாகவே கோமாவில் தானே படுத்திருந்தார் என அதிகாரிகள் பேரதிர்ச்சி கொடுத்தனர்.

என் கண் முன்னால் என்னிடம் பேசிய என் மகன் கோமாவில் இருந்தானா?.. என்ன நடக்கிறது என தெரியாமல் மர்மம் புரியாமல் தவித்து கொண்டிருந்தார் சுபாஷின் அப்பா. சுபாஷ் கொல்லப்பட்டதற்கானா நீதியாவது கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் மரண வாக்குமூலம் வாங்கினீர்களா?.. என கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அனுமதிக்கப்பட்டதிலிருந்தே கோமாவில் தானே இருந்தார். பிறகு எப்படி மரண வாக்குமூலம்! என பதிலளித்தனர்.

அப்போது தான் கொலைக்கு பின்னாலிருந்த சதியை குடும்பத்தினர் உணர்ந்து கொண்டார்கள். சுபாஷ் கொலையான போது பாபரி பள்ளிவாசல் வழக்கை விசாரிக்கும் லிபர்ஹான் கமிஷனிடம் முக்கிய இரகசிய கோப்புகளை அளிப்பதற்காக சென்று கொண்டிருந்தார். அந்த கோப்பில் பாபரி பள்ளிவாசல் இடிப்புக்கு காரணமானவர்களின் விவரங்கள் இருந்தன.

கொலையில் மர்மம்...

சுபாஷ் நேர்மையான அதிகாரி. இந்த நேர்மையின் காரணமாக “ சிறப்புப் பணியாற்றும் அதிகாரி(Officer on Special Duty) என்ற சிறப்பு பதவியும் வழங்கப்பட்டிருந்தது. சுபாஷ் எப்போதுமே தன்னுடன் தனது பெயர், முகவரி என தன்னை பற்றிய முழு தகவலை எழுதி தன்னுடன் வைத்திருப்பார். காயமடைந்த சுபாஷை அதிகாரிகள் மருத்துவமனையில் சேர்க்கும் போது அவரிடம் இருந்த அத்தனை பொருட்களையும் கைப்பற்றியிருக்கிறார்கள். ஆனால், அதில் பாபரி பள்ளிவாசல் தொடர்பான கோப்புகள் மட்டும் இடம்பெறவில்லை.

சுபாஷிடம் பெறப்பட்ட அனைத்தும் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. அதில் சுபாஷின் வீட்டு முகவரி அனைத்தும் பத்திரமாகவே இருந்தது. ஆனாலும், சுபாஷின் குடும்பத்தினருக்கு மிகவும் காலம் தாழ்த்தியே விபத்து பற்றி அறிவிக்கப்பட்டது. அது ஏனென்று குடும்பத்தினர் எழுப்பிய கேள்விக்கும் பதிலில்லை.

சுபாஷ் ஏற்கனவே தான் கொலை செய்யப்படலாம் என்பதை தன் மனைவியிடம் எச்சரித்திருக்கிறார். சுபாஷ் தன் மனைவியிடம் இப்படி கூறியிருக்கிறார், “நான் மிகவும் முக்கியமான வழக்குக்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.இந்த வழக்கில்(பாபரி பள்ளிவாசல் வழக்கு) சம்பந்தப்பட்டவர்கள் இதை அறிந்தால் என்னை கொலை செய்து விடுவார்கள்”

கொலைக்கான காரணம்

தன் கணவன் சுபாஷ் கொலை செய்யப்பட்டதற்கான காரணத்தை சுபாஷின் மனைவி விவரிக்கிறார், பாபரி பள்ளிவாசல் தொடர்பான முக்கிய கோப்புகளை வைத்திருந்தது தான் அவரின் மரணத்திற்கு காரணம். அந்த கோப்பில் பள்ளிவாசல் இடிப்பில் ஈடுபட்ட உயர்மட்ட பாஜக தலைவர்களை பற்றிய தகவல் இருந்தது. அவர்களே சுபாஷை கொலை செய்து விட்டார்கள்.”

சுபாஷுடைய தந்தை இந்தியாவின் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட சுதந்திர வீரர். அவர் கூறுகிறார்,” என் மகனை அந்த இரண்டு கோப்புகளுக்காகவே கொன்றிருக்கிறார்கள். என் மகனிடமிருந்து கைப்பற்றப்பட்ட அனைத்தையும் என்னிடம் தந்து விட்டார்கள். ஆனால், அந்த இரண்டு கோப்புகள் மட்டும் தரவில்லை.”

சுபாஷை மருத்துவமனையில் அனுமதித்த அதிகாரிகள் அவரை அடையாளம் தெரியாத நபர் என்று கூறி அனுமதித்திருக்கிறார்கள். ஆனால் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட உடைமைகளில் அவரை பற்றிய முழு தகவல் இருந்தது அவருக்கான உரிய சிகிச்சையும் அளிக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

சுபாஷின் கொலை, அதற்பிறகான விசாரணை என அனைத்தும் மர்மமாகவே நடந்து முடிந்தது. திட்டமிட்டு நடந்த கொலையை விபத்து என்று பதிவு செய்து வழக்கை முடித்தார்கள் அதிகாரிகள்.
-தகவல் The Week 21.07.2000

-அபூ சித்திக்.
நன்றி - வைகறை வெளிச்சம்.

இத்தனை கொலைகளையும் இத்தனை பொய்களையும் சொல்லி களவாடிய ஒரு இடத்தில் ராமனுக்கு கோவில் கட்டி இந்து மதத்தை வளர்க்கப் போகிறார்களா? எதுவும் நடக்கப் போவதில்லை. இந்து மதத்துக்கு இதன் மூலம் இழிவையே நாடுகிறார்கள்.


2 comments:

Dr.Anburaj said...

19 ஆண்டுகள் கழிந்த நிலையில் இப்பொழுது இந்த கட்டுரைக்கு அவசியம் இல்லை. கஜனிமுஹம்மது கோரி முகம்மதுவால் .................. முகலாள மன்னர்களால் தளபதிகளால் ”காபீர்கள்”என்று பட்டம் கட்டி கொல்லப்பட்ட இந்துக்களின் எண்ணிக்கை தெரிந்தால் பதிவு செய்யலாம். அயோத்தியில் இந்து ஆலயம் இடிக்கப்பட்டு

பாபா் தான் பெற்ற வெற்றியின் அடையாளமாக அதில் பள்ளிவாசலை கட்டியது
உண்மை.உண்மை.
அது போல் மதுரா காசி இன்னும் சில இடங்களை மீட்க இந்துக்கள் போராடி வருகின்றார்கள்.

முஸ்லீம்கள் அவற்றை விட்டு கொடுத்து பண்டைய பாவத்திற்கு பரிகாரம் காண வேண்டும்.பாக்கிஸ்தன் காடையர்கள் அரேபிய காட்டுமிராண்டிகள் தூண்டுதலுக்கு அறிவை கடன் கொடுத்து பிரச்சனைகளை வளா்த்து கொள்வது நல்லது அல்ல.

1949 ல் நேரு மாமா விடம் இ்ந்த தீர்வை முன் வைத்தாா்கள். பாவம் முளையை இழந்து விட்ட நேருவால் நல்ல முடிவு எடுக்கமுடியவில்லை. விளைவு எவ்வளவு விபரீதங்கள்....தொடா்கதை.

Dr.Anburaj said...

சதா எதிர்மறையாக செய்திகளை பதிவு செய்வதை விட ஒரு நல்ல செய்தியை பதிவு செய்கிறேன்.தினத்தந்தி தலையங்கம்தான் அது.தேசத்தின் மொத்த நலனையும் கருத்தில் கொண்டு நமது பிரதமா் எடுத்த துணிச்சலான முடிவு.

16 நாடுகளுக்கான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அந்த ஒப்பந்தத்தில் பிரதமர் நரேந்திரமோடி கையெழுத்திடாதது, இந்திய மக்களிடையே ஒரு பெரிய சபாஷ் போட வைத்துவிட்டது. தென்கிழக்கு ஆசிய நாடுகளான புரூனே, கம்போடியா, இந்தோனேஷியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளோடு, இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளும் இணைந்து மொத்தம் 16 நாடுகளுக்கான, ‘பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மை’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. கடந்த 2016–ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த கூட்டாண்மை இந்த நாடுகளுக்கு இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்குவதற்காக இதுவரை பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியது. உலகில் உள்ள மொத்த மக்கள்தொகையில் 45 சதவீதம் பேர் இந்த நாடுகளில்தான் உள்ளனர். உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) 39 சதவீதமும், உலகளாவிய வர்த்தகத்தில் 30 சதவீதமும், உலகளாவிய அன்னியநேரடி முதலீட்டில் 26 சதவீதமும், இந்த 16 நாடுகளின் பங்களிப்பில்தான் இருக்கின்றன.

இந்த கூட்டாண்மையின் சார்பில் கடந்த 4–ந்தேதி, பிராந்திய விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு தாய்லாந்து நாட்டில் நடந்தது. இந்த மாநாட்டில் தடையில்லா வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதாக இருந்தது. இந்த ஒ ப்பந்தத்தில் முக்கிய அம்சம் என்பது 90 சதவீத பொருட்களுக்கான இறக்குமதிவரியை முழுமையாக ரத்து செய்வது அல்லது குறைப்பது. இவ்வாறு இறக்குமதிவரியை குறைத்தாலோ, ரத்து செய்தாலோ சீனாவுக்கு பெரிய சாதகமாகிவிடும். அங்கு ஏற்கனவே எல்லா பொருட்களின் உற்பத்திச் செலவும் குறைவாக இருப்பதால் விலையும் குறைவாக இருக்கிறது. இறக்குமதிவரியும் இல்லையென்றால், சீன பொருட்கள் இந்தியாவில் வந்து குவிந்துவிடும். இந்தியாவில் உள்ள வேளாண் உற்பத்தி பொருட்களும், பால் பொருட்களும், சிறு–குறு மற்றும் நடுத்தர தொழில்களின் உற்பத்தியும் நிச்சயமாக சீன பொருட்களோடு போட்டி போட முடியாது. இது மட்டுமல்லாமல், பொருட்களுக்கான வரியை நிர்ணயிக்கும்போது, 2014–ம் ஆண்டை அடிப்படை ஆண்டாக கருதவேண்டும் என்று இந்த நாடுகளிடையே ஒரு முடிவு எட்டப்பட்டு இருந்தது. ஆனால் இந்தியாவில் அதற்குப்பிறகுதான் இறக்குமதிவரி உயர்த்தப்பட்டு இருக்கிறது. சரக்கு சேவைவரியும் 2017–ல்தான் அமலுக்கு வந்தது.

எனவே, நடப்பு ஆண்டைத்தான் அடிப்படை ஆண்டாக நிர்ணயிக்கவேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வந்தது. இந்த ஒப்பந்த வரைவுப்படி, 2014–ம்ஆண்டை அடிப்படை ஆண்டாக நிர்ணயித்தால், இந்தியாவுக்கு நிறைய இழப்பு ஏற்படும். மேலும் ஏதாவது ஒருபொருள் அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டு, அதனால் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்படும் சூழ்நிலை வந்தால், அந்த பொருளுக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க உரிமை வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. எனவே இதில் கையெழுத்திட்டால் நிச்சயமாக இந்தியாவுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற நிலையில், பிரதமர் நரேந்திரமோடி, இந்த மாநாட்டில் மற்ற 15 நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயார் என்று அறிவித்தநிலையில், இந்தியா கையெழுத்திடாது என்று மிக துணிச்சலான முடிவை எடுத்து அறிவித்துவிட்டார். அனைத்து இந்திய மக்களின் நலன்களை கருத்தில் எடுத்துக்கொண்டு, இந்த ஒப்பந்தம் இப்போது முடிவு செய்யப்பட்டாலும், அடுத்த ஆண்டுதான் இதில் அனைத்து நாடுகளும் கையெழுத்திட இருக்கின்றன. அந்த நாடுகள் எல்லாவற்றுக்கும் இந்தியாதான் ஒரு பெரிய சந்தை. எனவே இந்தியாவை எப்படியும் தங்களோடு இணைத்துக்கொள்ள நிச்சயமாக தொடர்ந்து முயற்சிக்கும். அதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு நமது நிபந்தனைகளை முழுமையாக நிறைவேற்றவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்த இன்னும் ஓர் ஆண்டு காலம் அவகாசம் இருக்கிறது.